Modi importance in the Lok Sabha elections, BJP President Rajnath Singh confirmed | லோக்சபா தேர்தலில் மோடிக்கு முக்கியத்துவம்: ராஜ்நாத் சிங் | Dinamalar
Advertisement
லோக்சபா தேர்தலில் மோடிக்கு முக்கியத்துவம்: ராஜ்நாத் சிங்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

புதுடில்லி :""வரும் லோக்சபா தேர்தலில், குஜராத் முதல்வர், நரேந்திர மோடி முக்கிய பங்காற்றுவார்,'' என, பாரதிய ஜனதா கட்சியின் புதிய தலைவர், ராஜ்நாத் சிங் கூறினார்.இது குறித்து அவர், நேற்று கூறியதாவது:நரேந்திர மோடி, குஜராத் மாநிலத்தை, அனைத்து துறைகளிலும், மாதிரி மாநிலமாக மாற்றி காட்டியுள்ளார். மாநில நிர்வாகம் மிக சிறப்பாக உள்ளது; அவரின் புகழ், நாடு முழுதும் பரவியுள் ளது. வரும் லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வுக்காக அவர் முக்கிய பங்காற்றுவார்; அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்.கட்காரியை மீண்டும் கட்சி தலைவராக ஆக்க வேண்டும் என, எங்கள் தாய் அமைப்பான, ஆர்.எஸ். எஸ்.,சில் இருந்து எந்த நிர்பந்தமும் வரவில்லை. கட்காரி தொடர்புடைய இடங்களில், சோதனை நடத்தப்பட்டதை மீடியாக்கள் பெரிதாக்கி காட்டியதுமே, அவர் தன் பதவியை ராஜினாமா செய்ய முன்வந்தார்.அவர் மீது சுமத்தப்பட்ட பொய்யான குற்றச்சாட்டுகளால், அவர் பதவி யை ராஜினாமா செய்ய வேண்டியதாகி விட்டது.மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால், அரசியல் காரணங்களுக்காக நடத்தப்பட்ட சோதனை இது.

நான் இதுபோன்ற புகார்களுக்கு இதுவரை ஆளாகவில்லை. அடிப்படையில் நான் விவசாயி மற்றும் ஆசிரியர் என்பதால், சோதனைகளில் இருந்து தப்பி இருக்கலாம்.மேலும், தொழில் நிறுவனங்களை நடத்து பவர்கள், இது போன்ற சோதனைகளுக்கு ஆளாவது சகஜமானது தான். ஆர்.எஸ்.எஸ்., மற்றும் பா.ஜ., அமைப்புகள், தீவிரவாத செயல்களில் தொடர்புடையவை என, மத்திய உள்துறை அமைச்சர், சுஷில்குமார் ஷிண்டே கூறியுள்ளது குறித்து, பார்லிமென்டில் நாங்கள் கேள்வி எழுப்புவோம்.இவ்வாறு, ராஜ்நாத் சிங் கூறினார்.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (15)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Narendra Bharathi - Sydney,ஆஸ்திரேலியா
27-ஜன-201303:50:08 IST Report Abuse
Narendra Bharathi திரு. நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம். இல்லையேல் பாரதீய ஜனதா கட்சி இந்திய அரசியல் களத்திலிருந்து காணாமற் போவது உறுதி...
Rate this:
1 members
0 members
1 members
Share this comment
Cancel
P. Kannan - Bodinayakkanur,இந்தியா
26-ஜன-201315:29:17 IST Report Abuse
P. Kannan மோடியை பற்றிய இமேஜ் முழுமையாக மக்களை சென்று அடைந்து விட்டது. இனி அதை மாற்றினால் பிஜேபியால் அதை சரிகட்ட முடியாது.
Rate this:
1 members
0 members
5 members
Share this comment
Cancel
yesubalan - coimbatore,இந்தியா
26-ஜன-201315:23:57 IST Report Abuse
yesubalan மோடியை முழு மனதோடு பிரகடனபடுத்த ஏன் இந்த தயக்கம் ,அவருடைய இருண்ட பக்கத்தை குறித்த பயம் .ஏனெனில் மனித நாட்டின் நலனை விட ,மதத்தின் நலனை தான் நேசிக்கிறான் .இதில் ஏழை ,பணக்காரன் ,படித்தவன் ,படிக்காதவன் ,என்ற வேறுபாடு இல்லை .இப்படி மதத்தின் மீது மயங்கி இருக்கும் சூழலில் ,மோடி சரியான நபரா ,இல்லையா ,என்பது கேள்விகுறி .
Rate this:
12 members
0 members
4 members
Share this comment
Cancel
p.saravanan - tirupur,இந்தியா
26-ஜன-201310:39:03 IST Report Abuse
p.saravanan திறமையான தலைவா , நீங்கள் தான் திறமையானவர்களை அடையாளம் காட்ட வேண்டும்.
Rate this:
1 members
0 members
11 members
Share this comment
Cancel
செந்தமிழ் கார்த்திக் - NamakkaL to ChennaI,இந்தியா
26-ஜன-201309:54:47 IST Report Abuse
செந்தமிழ் கார்த்திக் நல்லதே நினைப்போம் ... நல்லதே நடக்கும் ... மீண்டும் மீண்டும் சொல்கிறேன் RSS என்பது இந்து , முஸ்லீம் , கிறிஸ்தவன் , சீக்கியன் , புத்தம் , ஜெயின் என்று வேறுபாடு பார்க்காமல் உதவி என்று வருபவர்களுக்கு ஓடி ஓடி உதவும் தொண்டு செய்யும் இயக்கம்..முஸ்லீமும் , கிறிஸ்தவனும் உட்பட அனைத்து மதத்தவரும் என் உடன்பிறப்பே.முதலில் தாய் மண்ணை நேசியுங்கள் பிறகு இந்த மதத்தை பார்க்கலாம் ... ஆனால் தேவை இல்லாமல் மத உணர்வை தூண்டி மக்களை பிரித்து அதில் காங்கிரஸ் குளிர் காய்ந்து அரசியல் லாபம் அடைகிறது.. நாம் யாவரும் இந்த மண்ணில் பிறந்தவர்களே , எல்லோருக்கும் சமமான உரிமை உண்டு , அதே வேலை கடமையும் உண்டு.. மதம் என்ற குறுகிய வட்டத்தில் சிக்கி கொள்ளாமல் மனித நேயம் , நாட்டின் வளர்ச்சி , முன்னேற்றம் என்ற பரந்த மனப்பான்மையில் பாருங்கள்.. நாட்டு மக்களை சுரண்டி, பெருத்த ஊழல் செய்யும் நிர்வாக திறனற்ற காங்கிரஸ் திருடர்களை ஓன்று திரண்டு வேர் அறுப்போம்..
Rate this:
64 members
0 members
45 members
Share this comment
Prabu.KTK - Coimbatore,இந்தியா
26-ஜன-201313:19:30 IST Report Abuse
Prabu.KTKசெந்தமிழ் கலக்குங்க வாழ்த்துக்கள் ஜெய் ஹிந்த்...
Rate this:
2 members
0 members
9 members
Share this comment
Prabu.KTK - Coimbatore,இந்தியா
26-ஜன-201313:21:45 IST Report Abuse
Prabu.KTKதிரு. மோடி பிரதமராக நிச்சயம் வருவார் . இந்தியாவில் தலை எழுத்தை மாற்றுவார் ஜெய் ஹிந்த்...
Rate this:
2 members
0 members
13 members
Share this comment
26-ஜன-201314:00:29 IST Report Abuse
சித்தப்பா புலிப்பாண்டி சொல்லிட்டாரு பெரிய கவர்னரு, எந்த முஸ்லிமுக்கு RSS உதவி செய்தது என்று சொல்ல முடியுமா? உதவியை விடுங்க, முஸ்லிம்களை நோண்டாமல் (தொந்தரவு செய்யாமல்) இருந்தாலே போதுமல்லவா. உங்க இயக்கதுகிட்ட சொல்லி ஏற்பாடு பண்ணுங்க அம்பி...
Rate this:
29 members
0 members
13 members
Share this comment
Cancel
நாஞ்சில் சுலைமான் - THUCKALAY,இந்தியா
26-ஜன-201309:27:55 IST Report Abuse
நாஞ்சில் சுலைமான் உங்களுக்கு செல்வாக்கில்லை..மோடியின் நிழலில் குளிர் காயுங்கள் ராஜ்நாத் சிங்க் அவர்களே..
Rate this:
10 members
0 members
2 members
Share this comment
Cancel
Krish - delhi,இந்தியா
26-ஜன-201309:19:46 IST Report Abuse
Krish மோடிக்கு மட்டுமே முக்கியத்துவம் என்று சொல்லுங்க ராஜ்நாத்..
Rate this:
1 members
0 members
9 members
Share this comment
Cancel
Krish - delhi,இந்தியா
26-ஜன-201309:14:42 IST Report Abuse
Krish மோடிக்கு தான் முக்கியத்துவம் தரப்பட வேண்டும்..
Rate this:
1 members
0 members
11 members
Share this comment
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
26-ஜன-201306:02:34 IST Report Abuse
villupuram jeevithan அப்பாடா, ஒருவழியாக சிறிது ஓப்பனாக மோடி என்று சொல்ல வந்திருக்கிறீர்.
Rate this:
0 members
0 members
9 members
Share this comment
Cancel
Bhaskar Jain. - Stockholm,சுவீடன்
26-ஜன-201305:44:49 IST Report Abuse
Bhaskar Jain. மோடி இல்லாவிட்டால் 2014 எலேச்டின் அம்போ தான்.
Rate this:
2 members
0 members
9 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்