ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநில அரசின், மது எதிர்ப்பு பிரச்சார விளம்பர தூதராக, தேசத்தந்தை காந்தியடிகள் நியமிக்கப்பட்டுள்ளார். வரி வருவாயை பெருக்குவதற்காக, பல மாநில அரசுகள், மதுபான கடைகளை தாராளமாக திறந்து விட்டுள்ள நிலையில், பாரதிய ஜனதாவை சேர்ந்த முதல்வர், ராமன் சிங் தலைமையிலான சத்தீஸ்கர் அரசு, மதுபான எதிர்ப்பு பிரசாரத்திற்கு தனி பிரிவை துவக்கியுள்ளது.இந்த பிரிவு சார்பில், இந்த ஆண்டிற்கான காலண்டர் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. அதில் பங்கேற்ற முதல்வர் ராமன் சிங், மது எதிர்ப்பு பிரசார விளம்பரதூதராக, காந்தியை நியமித்து, அதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.அப்போது அவர் கூறுகையில், ""மது பானம் அருந்துவதற்கு எதிராக கடுமையாக போராடியவர், காந்தியடிகள். இந்த காலண்டரில் இடம்பெற்றுள்ள அவரின் படங்கள், மதுவுக்கு எதிரான பிரசாரத்தின் விளம்பர தூதராக செயல்படும்,'' என்றார்.மதுபானம் அருந்துவதற்கு எதிரான இயக்கம் மேற்கொண்ட பிரசாரத்தால், 2,000த்திற்கு குறைவான மக்கள்தொகை கொண்ட அனைத்து கிராமங்களிலும், 2,500க்கு அதிகமாக மக்கள்தொகை கொண்ட, 343 கிராமங்களில் மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளன.மேலும், கிராமங்கள் தோறும், "பாரத மாதா வாகினி' என்ற பெயரிலான பெண்கள் அமைப்பு துவக்கப்பட்டு, அது, மதுவுக்கு எதிரான பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
இது ஒரு சிறந்த முயற்சி. ஆனால் தமிழ்நாட்டை பொறுத்தவரையில் இது சாத்தியமாகாது. காரணம் ஒட்டு அரசியல். அதுமட்டுமல்ல, டாஸ்மாக்கை மூடிவிட்டால், கள்ளசாராயம் பெருக்கெடுத்து ஓடும். பூரண மதுவிலக்கு என கூறும் ஒரு கட்சியின் முக்கிய தலைவரே மீண்டும் தனது பழைய தொழிலை தொடங்கி விடுவார். பிறகு எப்படி தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு சாத்தியமாகும்?

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.