Delta farmer suicides: report output | டெல்டா விவசாயிகள் தற்கொலை : ஆய்வறிக்கை வெளியீடு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

டெல்டா விவசாயிகள் தற்கொலை : ஆய்வறிக்கை வெளியீடு

Updated : ஜன 26, 2013 | Added : ஜன 25, 2013 | கருத்துகள் (9)
Advertisement
 டெல்டா  விவசாயிகள் தற்கொலை : ஆய்வறிக்கை வெளியீடு

காவிரி, "டெல்டா' மாவட்டங்களில் நடந்த, தற்கொலை சம்பவங்களுக்கான காரணம் குறித்து, தென்னிந்திய விவசாயிகள் கூட்டமைப்பு ஆய்வுமேற்கொண்டு அறிக்கை வெளியிட்டுள்ளது.காவிரி டெல்டா மாவட்டங்களான, திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கடலூர் ஆகிய மாவட்டங்களில், நீர் இல்லாததால் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக, 13 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது.இது குறித்து, தென்னிந்திய விவசாயிகளின் கூட்டமைப்பு திருவாரூர், நாகை மாவட்டங்களில் ஆய்வு செய்தது. ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்:டெல்மா மாவட்டங்களில் இறந்த ஏழு பேரில், நான்கு பேர், விவசாயம் பொய்த்துப்போனதால், தற்கொலை செய்து கொண்டனர்; இரண்டு விவசாயிகள், மாரடைப்பில் இறந்தனர். விவசாயத்திற்காக வாங்கிய கடனும், அதிகரித்த வட்டியும் உண்டாக்கிய மன உளைச்சல், இருவரின் மரணத்திற்கு காரணம். இளைஞர் ஸ்ரீதர் என்பவர் விபத்தில் காயமடைந்து, வயலில் இறந்தார். சம்பவம் நடக்கும் முன், ஒரு வாரம் வரை விவசாயம் குறித்து, குடும்பத்தினரிடம் வேதனையாக குறிப்பிட்டு உள்ளார்.இறந்த விவசாயிகள் அனைவரும், சிறு, குறு மற்றும் குத்தகை மூலம், விவசாயம் செய்து, ஏழ்மை நிலையில் இருந்துள்ளனர். இறந்த ஏழு பேரில், மூவர் ஆதிதிராவிடர், ஒருவர் முஸ்லிம்; மற்றவர்கள், பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.அதிக வட்டிதற்கொலை செய்து கொண்ட நால்வரும், விவசாயம் செய்வதற்காக, அதிக வட்டிக்கு கடன் வாங்கியவர்கள். தற்கொலை செய்த நால்வரில், சம்பா பருவத்தில், இருமுறை பயிர் செய்துள்ளனர். முதல் முறை நேரடி விதைப்பு செய்த போது, மழை மற்றும் புயல் தாக்கியது. இதனால், பயிர் அழுகி, நஷ்டம் ஏற்பட்டுள்ளது.விவசாய பிரச்னையால் இறந்தவர்களின், ஒரு சில குடும்பங்களுக்கு, தி.மு.க., மற்றும் தே.மு.தி.க., ஆகிய கட்சிகள் நிதி உதவி செய்துள்ளன. ஆனால், மற்ற குடும்பங்களுக்கு எந்த நிதியுதவியும் வழங்கவில்லை. விவசாய பிரச்னையால், விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதை தமிழக அரசு ஒப்புக் கொள்ள வேண்டும். விவசாயிகளின் மரணம் குறித்து, உண்மை கண்டறியும் குழுவை அமைக்க வேண்டும். தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளுக்கு, உடனடி நிவாரணம் வழங்க வேண்டும்.இவ்வாறு ஆய்வு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. - நமது நிருபர் -

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
g.s,rajan - chennai ,இந்தியா
26-ஜன-201322:56:38 IST Report Abuse
g.s,rajan விவசாயிகளே ,மத்திய அரசுக்கு அனுப்பினீர்களா ?தமிழகம் என்ன அமெரிக்காவிலா இருக்கு ?இல்ல ஆப்பிரிக்காவுல இருக்கா? இந்தியாவுல தான் இருக்கு ,மத்திய அரசுக்கு அனுப்பி மத்திய அரசாங்க அலுவலகத்தின் முன் முற்றுகை போராட்டம் நடத்துங்க. காவேரி தண்ணீர் ,மின்சாரம் தருமாறு தொடர்ந்து போராடுங்க. நிச்சயம் வெற்றி கிடைக்கும் ,இழப்பீடும் கிடைக்கும் ..
Rate this:
Share this comment
Cancel
P. Kannan - Bodinayakkanur,இந்தியா
26-ஜன-201316:00:36 IST Report Abuse
P. Kannan கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன். அன்று வேந்தனுக்கு சொல்லப்பட்ட இந்த உதாரணம் காலப்போக்கில் கடன் பட்டவருக்கு உதாரணமாகி போச்சு. ஏழைகள் அன்றாட பிழைபிற்கே கடன் வாங்க வேண்டிய சூழலில் தவிக்கிறான் இவனை கரை ஏற்றி விட யாருக்குமே மனசு இல்லாம போச்சே? ஆளும் இடத்தில் அமர்ந்து ஒருவனின் மரணத்தில் உள்ள குறைகளை விலாவாரியாக விசாரிக்க எப்படி மனம் வந்தது. உங்கள் மனது என்ன பாறையா? இதை அரசியலாக பார்க்காமல், பதிமூன்று பேர் இவர்களுக்கு எவ்வளவு நஷ்ட ஈடாக கொடுப்பீர்கள் ? உங்களுக்கு அது ஒரு தூசு...........
Rate this:
Share this comment
Cancel
செந்தமிழ் கார்த்திக் - NamakkaL to ChennaI,இந்தியா
26-ஜன-201310:17:06 IST Report Abuse
செந்தமிழ் கார்த்திக் இதெல்லாம் தமிழக அரசு அமைச்சர் குழு ஆய்வு செய்து , அறிக்கை சமர்ப்பித்து , அதை முதல்வர் பார்வைக்கு போயி , படித்து பார்த்து , அதை திட்ட குழுவுக்கு அனுப்பி , நிவராண நிதி ஆலோசனை செய்து , பணம் அரசியல் வாதிகள் அதிகாரிகள் இடம் சென்று , மக்களின் கைக்கு செல்வத்திற்கு முன் அடுத்த வருட சம்பா பயிர் சீசனே முடிந்து விடும் .. வைகோ வரும் 30 தேதி நிவாரண நிதி காலதாமதம் இல்லாமல் வழங்க கோரி அனைத்து டெல்ட்டா மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடத்த போவதாக அறிவித்துள்ளார்... போராட்டம் நடத்தினால் தானே நடவடிக்கை எடுப்பீர்கள் , போங்கடா நீங்களும் உங்க வெட்கம் கெட்ட ஆட்சியும்...
Rate this:
Share this comment
Cancel
kdadhi - Bangkok,தாய்லாந்து
26-ஜன-201310:01:38 IST Report Abuse
kdadhi மறக்க வேண்டாம் ....இன்று விவசயி ......நாளை ...விவசாய நிலத்தை சுரையாடுபவன்.....
Rate this:
Share this comment
Cancel
Seshadri Krishnan - perth,ஆஸ்திரேலியா
26-ஜன-201307:46:42 IST Report Abuse
Seshadri Krishnan டெல்டா பகுதிகளில் நீர்நிலைகளின் இன்றைய நிலை என்ன? நான் சிறுவனாக இருந்தபோது இருந்த குளங்களும் குட்டைகளும் வீடகவோ குப்பைமேடாகவோ மாறிவிட்டது. மாயூரத்தில் டிராவலர்ஸ் பங்களா "காவேரி இல்லம்" முன்பு பெரிய குளம். அரசு அமைப்பான பொதுப்பணி துறை கூட தொலைநோக்கு இல்லாமல் செயல்படுகிறது. யாரேனும் சமூக ஆர்வலர் ஏதேனும் நீர்நிலை ஆக்கிரமிப்பை எதிர்த்து கோர்ட்டை அணுகி தற்காலிக தடைவாங்கினால்கூட சிறுக சிறுக குப்பையை கொட்டி துர்த்துவிடுகின்றனர். ஆறு மற்றும் வாய்க்கால்கள் துர்ந்துகொண்டு வருகிறது. பொதுமக்களுக்கு விழிப்புணர்ச்சியும் கடமை யுணர்வும் இல்லாதவரை சட்டத்தினாலோ, திட்டத்தினாலோ எந்த பயனும் ஏற்பட்டு விடப்போவதில்லை.
Rate this:
Share this comment
Cancel
Abdul Raheem - india,இந்தியா
26-ஜன-201303:56:58 IST Report Abuse
Abdul Raheem ஒரு திரைபடத்திற்கு போராடும் இலைஞகர்கள் கூட்டம் படத்தை எதிர்க்கும் இஸ்லாமியர்கள் படத்திற்கு ஆதரவு தரும் ரஜினிகாந்த் இந்த மூவருக்கும் ஒரு விவசாயி செய்யும் தற்கொலை கண்ணுக்கு தெரியவில்லை ,95 கோடி செலவில் படம் இதில் ஒரு மூன்று கோடி இருந்தால் போதும் தஞ்சை திருவாரூர் நாகை விவசாயிகளை காப்பாற்றி இருக்கலாம் ஒரு படத்திற்காக போராடும் இளைகர் கூட்டமே, இஸ்லாமியர்களே ,அண்டை வீட்டார் பசித்திருக்க தான் மட்டும் உண்ணுபவன் என்னை சேர்ந்தவன் இல்லை என்ற நபி மொழியை ஏன் மறந்திர்கள் ,என்னால் முடிந்ததை நான் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு அனுப்பிவிட்டேன் ,தேச பற்று பேசும் ஹிந்துக்களே ,இஸ்லாமியர்களே ,கிறிஸ்தவர்களே ,பெரியாரை பின்பற்றுபவர்களே , கோடி கணக்கில் பணம் சம்பாதிக்கும் திரைப்படத்துறையை சேர்ந்தவர்களே உங்களின் தேச பற்றை இதில் காண்பியுங்கள்
Rate this:
Share this comment
meekannan - Chennai,இந்தியா
26-ஜன-201319:28:25 IST Report Abuse
meekannanஅப்போ நமக்கு முதல்வர் எதற்கு... கொடனாடில் தூங்கவா?...
Rate this:
Share this comment
Cancel
செந்தமிழ் கார்த்திக் - NamakkaL to ChennaI,இந்தியா
26-ஜன-201300:58:55 IST Report Abuse
செந்தமிழ் கார்த்திக் இதெல்லாம் தமிழக அரசு அமைச்சர் குழு ஆய்வு செய்து , அறிக்கை சமர்ப்பித்து , அதை முதல்வர் பார்வைக்கு போயி , படித்து பார்த்து , அதை திட்ட குழுவுக்கு அனுப்பி , நிவராண நிதி ஆலோசனை செய்து , பணம் அரசியல் வாதிகள் அதிகாரிகள் கைக்கு செல்வத்திற்கு முன் அடுத்த வருட சம்பா பயிர் சீசனே முடிந்து விடும் ... போங்கடா நீங்களும் உங்க வெட்கம் கேட்ட ஆட்சியும்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை