கமல் இயக்கி, நடித்துள்ள, "விஸ்வரூபம்' படம், கேரளா, கர்நாடகா, ஆந்திராவிலும், வெளிநாடுகளிலும் நேற்று வெளியிடப்பட்டது. ஆந்திராவில் நேற்று காலை படம் வெளியாகி, பாதி படம் ஓடிக்கொண்டிருந்த போது, திடீரென நிறுத்தப்பட்டதால், ரசிகர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.ஆந்திர மாநிலம் முழுவதும், தெலுங்கு மொழியில், நேற்று, விஸ்வரூபம் படம் வெளியானது. ஐதராபாத்தில், 22 தியேட்டர்களில் படம் வெளியானது. மீலாது நபியையொட்டி, நேற்று மட்டும் படத்தை நிறுத்தி வைக்க போலீசார் கேட்டுக் கொண்டதால், படம் நிறுத்தி வைக்கப்பட்டது.
திருப்பதியில் மூன்று தியேட்டர்களில் வெளியான விஸ்வரூபத்தை, தமிழகத்திலிருந்து கமல் ரசிகர்கள் சென்று பார்த்தனர். கர்நாடகாவில் பெங்களூரில், 15 தியேட்டர்கள் உட்பட, பல்வேறு நகரங்களில், 26 தியேட்டர்களில் திரையிடப்பட்டன.தமிழகத்தில், "விஸ்வரூபம்' படத்தை வெளியிட, இம்மாதம், 28ம் தேதி வரை, ஐகோர்ட் தடை விதித்துள்ளது. இதனால், தமிழகத்தில் நேற்று, "விஸ்வரூபம்' வெளியிடப்படவில்லை. புதுச்சேரி மற்றும் இலங்கையிலும் படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் வெளியீடு
இதற்கிடையே, கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திராவில், விஸ்வரூபம் படம் நேற்று வெளியிடப்பட்டது. கேரளாவில், 71 தியேட்டர்களில் படம் வெளியானது. பாலக்காடு, எர்ணாகுளம், மலப்புரம், , கஞ்சிக்கோடு, திருவனந்தபுரம் பகுதிகளில் உள்ள தியேட்டர்களில் படம் பார்க்க, தமிழக ரசிகர்கள் அதிகளவில் சென்றிருந்தனர்.வெளிநாடுகளில்
அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, மலேசியா நாடுகள் உட்பட, எட்டு நாடுகளில் நேற்று, விஸ்வரூபம் வெளியானது. தியேட்டர்கள் அனைத்திலும், நான்கு தினங்களுக்கு, முழுவதுமாக முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக, அங்குள்ள கமல் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். மலேசியாவில் தடை விதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது; ஆனால், அங்கு பல தியேட்டர்களில், படம் திரையிடப்பட்டதாக செய்திகள் வந்துள்ளன. வெளிநாடுகளில் விஸ்வரூபம் வெளியாகியுள்ள நிலையில், திருட்டு வி.சி.டி., சென்னை வழியாக, மற்ற நகரங்களுக்கு அனுப்பப்பட வாய்ப்புள்ளது. இதை தடுக்க, கமல் ரசிகர்கள் களமிறங்கியுள்ளனர்.ரஜினி வேண்டுகோள் கமலுக்கு ஆதரவாக ரஜினி வெளியிட்டுள்ள அறிக்கையில், "விஸ்வரூபம் படத்தை, முழுமையாக தடை செய்யவேண்டும் என்ற கருத்திலிருந்து இஸ்லாமியர்கள் மாறவேண்டும். கமலுடன் பேசி, கதைக்கு பாதிப்பு வராத வகையில் சரி செய்து, படத்தை வெளியிட உறுதுணையாக இருக்கவேண்டும்' என தெரிவித்துள்ளார். - நமது நிருபர் -
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
என்னனு சொல்றது, இன்னைக்கு படத்துக்கு போகலாம்னு புக் பண்ணுனா ஹைதராபாத்துல கேன்சல் அப்படீன்னு சொல்லிட்டாங்க, முஸ்லிம் சகோதரர்களே, இங்க ஒரு கருத்து ஓடிகிட்டு இருக்கு தெரியுமா? நீங்க உங்களது மதத்தை தீவிரவாதி அப்படீன்னு முத்திரை குத்துவதை வருத்த படுகிறீர்கள், எனது சக பணியாளர் சார்மினார் பகுதியில் தலைமுறையாய் வாழ்பவர், அவர் முதல் காட்சி பார்த்து வந்து சொன்ன செய்தி இது, எவ்ளவு தூரம் உண்மைன்னு விசாரியுங்க, "இது தமிழக சினிமாத்துறையும், கலைஞர்களையும் குறிவைத்து வெளிநாட்டுல தங்கியிருக்குற கடத்தல் மன்னன் நடத்தும் ப்ளாக் மெயில் விளையாட்டு ", இதற்கு பிறகு வெளிவரும் படங்கள் எல்லாம் அவர்களின் கண்ட்ரோலில் வரும்படி செய்வதற்கு என்று போட்டுடைத்தார், கொஞ்சம் விசாரிச்சு தான் சொல்லுங்களேன்.
இன்று படம் ஆந்திராவில் பார்த்தேன். கமல் முஸ்லிம் மதமாகவே மாறி namaz செய்கிறார். Hard nut to crack I have to see one more time to clearly understand the movie.But the film is full of dialogues of English and Arabic. This great artist may dub the movie in English and he may get the proper renumeration/recognition for his work.
இங்கே கருத்து சொல்லியுள்ள பல முஸ்லிமல்லாத நண்பர்கள் முஸ்லிம்கள் அந்நிய நாட்டவர்கள் போலவும் அவர்கள் மட்டுமே இந்தியர்கள் போலவும் கருத்துகளை தெரிவித்துள்ளனர். தேவர் மகன் படத்திற்கு தேவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனரே மறந்து விட்டதா? ஒட்டகத்திற்கு கூடாரத்தில் இடம் கொடுத்த கதை என்று ஒரு நண்பர் எழுதியுள்ளார், தீவிரவாதம் என்பது இஸ்லாமியர்களின் பொது உடைமையல்ல. மாலேகானில் தீவிரவாதம் செய்தது இஸ்லாமியர்களா? இவரது படங்கள் அதிகம் சர்ச்சைகுள்ளாவது எதனால்? மதங்களுக்கு அப்பாற்பட்டு படம் எடுக்க முடியாதா? சமுதாயம் நேர் வழி பெற ஊடகங்கள் உபயோகப்படுத்தப்பட வேண்டும். அதில்லாமல் பிரிவினை உண்டாக்கும் சர்ச்சைக்குரிய படங்களை மட்டுமே எடுப்பேன் என்று அடம்பிடிப்பது எதனால்? ஆப்கானிச்த்தானில் நடப்பது போன்று எடுப்பதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் மதுரையிலும் கோவையிலும் முல்லா உமர் பயிற்சி கொடுத்ததாக சித்தரிக்கபடுவதும் குரான் ஓதிவிட்டு குண்டு வைக்க செல்வது போல காட்டப்பட்டிருப்பதுமே எதிர்க்க படுகிறது.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.