கோவை: தனது குடும்பத்தின் எதிர்காலம் குறித்து சிறிதும் சிந்திக்காமல், தினமும் மது குடித்து உயிரிழந்த குடிகாரர்களுக்கு, மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தும் விநோத நிகழ்ச்சி கோவையில் நடந்தது.
"குடி குடியை கெடுக்கும்' என பிரசாரம் செய்யும் அரசு, அதே மதுவை வீதிக்கு, வீதி கடைகள் அமைத்து விற்பனை செய்து, பல குடும்பங்களை நடு வீதிக்கு வரவழைக்கிறது. இவ்வாறு மதுவினால் சமுதாயத்துக்கும் ஏற்படும் பாதிப்பை ஆட்சியாளர்களுக்கு புரிய வைக்க, கோவை இமைகள் சமூக நல அமைப்பினர், டாஸ்மாக் கடையின் முன் மதுவினால் பலியானவர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். நேற்று டாஸ்மாக் கடைகள் விடுமுறை என்பதால், அப்பகுதியை சுற்றி வந்த குடிகாரர்களை, அஞ்சலி நிகழ்ச்சி சிறிது சிந்திக்க வைத்தது.அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்த சி.எம்.சி.காலனி பகுதியில், கடந்த 1994 முதல் 2012 வரை மது குடித்து பலியானவர்கள் எண்ணிக்கை, 1208 பேர் என்ற "பகீர்' தகவலை கூறும் இமைகள் அமைப்பின் தலைவர் கோவிந்தராஜ், மேலும், கூறியதாவது: மதுவுக்கு பலியான குடும்பங்களில் குழந்தைகளின் கல்வியும் சுகாதாரமும் மட்டுமல்லாமல், பசிக்கு உணவு கிடைப்பதும் கேள்விக்குறியாகியுள் ளது. குடும்பத்தின் எதிர்காலம் குறித்து கவலைப்படாமல், சிறிது நேர போதையால் பலியாகிப் போனவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதை பார்த்து, குடிமகன்கள் அனைவரும் திருந்த வேண்டும். அரசே டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். நமது நாடு சீரழியவும் மது காரணமாக உள்ளது.இவ்வாறு கோவிந்தராஜ் கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
" என்ன கொடுமை சார் இது ??? சட்டம் போட்டு தடுக்க வேண்டிய அரசுகள் மது விற்பனையை கூவி கூவி விற்பனை செய்கிறது ,குடும்பம் மற்றும் குழந்தைகளை அனாதையாக தவிக்க விட்டு சென்றவர்களுக்கு அஞ்சலி தேவையா ???
இவர்கள் அரசு பதவி அனுபவிக்க அப்பாவி உயிர்களை பலியுடுவது எந்த வகையில் நியாயம் ??? தினமலரின் முலமாக ஒரு சிறிய வேண்டுகோள் அரசு மக்களுக்கு தொலைகாட்சி வாயிலாகவும் மற்றும் மாணவர்களிடம் பள்ளி பாட திட்டத்தின் மூலமாகவும் குடியின் கொடுமைகளை விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் மற்றும் அரசு சாராய கடைகள் மற்றும் ஆலைகளை மூட நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் "
குடி குடியைக் கெடுக்கும் என்று கூறிக்கொண்டு குடிகாரர்களின் எண்ணிக்கையை பெருக்கிவரும் அரசு இனியாவது மது விலக்கை அமுல் படுத்துமா ? பெற்றவர்கள் இல்லாமல் அந்த குழந்தைகள் படும் பாடு மிகவும் பரிதாபமானது .அவர்களின் ஏக்கத்தை நிச்சயம் யாராலும் தீர்க்கவே முடியாது .ஆண்டாண்டு அழுது புரண்டாலும் மாண்டவர் திரும்பிவருவரோ ?
ஜி.எஸ்.ராஜன்
கள்ள சாராயம் குடித்தது தான் இதற்கு காரணம்....இப்படிப்பட்ட காரணங்களை வைத்து தான் அரசு டாஸ்மாக் கடைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தது. திருடனா பார்த்து திருந்தினால் மட்டும் தான் திடுட்டை ஒழிக்க முடியும் அதை போல குடி காரனா பார்த்து குடிஐ நிறுத்தினால் மட்டும் தான் குடியை நிறுத்த முடியும். இதற்கு பல காரணங்கள் உள்ளன.....

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.