Printing machinery used for livelihood impact resistance in the industry, "kayalan 'shops to See | மின்தடையால் தொழில் பாதிப்பு வாழ்வாதாரமாக பயன்பட்ட அச்சு இயந்திரங்கள் "காயலான்' கடைகளுக்கு செல்லும் அவலம்| Dinamalar
பதிவு செய்த நாள் :
கருத்துகள் (8)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

தொடர் மின்தடையால், சிவகாசி மக்களின் வாழ்வாதரமான அச்சு இயந்திரங்கள், "காயலான்' கடைகளுக்கு செல்கிறது; சிறு தொழில் செய்தோர், வேலை இழந்து தவிக்கின்றனர்.சிவகாசியில் மூலை, முடுக்கு எல்லாம் முன்பு, பிரின்டிங் தொழில்கள் நடக்கும். இங்கு, 700க்கும் மேற்பட்ட அச்சகங்களும், உப தொழில்களான கட்டிங், ஸ்கொயரிங், பஞ்சிங், லேமினேஷன், பேஸ்டிங் என, ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுதொழில்கள் இயங்குகின; லட்சம் பேர் வேலை பெற்று வந்தனர் . எட்டு மணி நேர வேலை நேரம் போதாமல், "ஓவர் டைம்' என, மூன்று ஷிப்டுகளும், இரவு பகல் பாராது பணிகள் நடக்கும். கடந்த மூன்று ஆண்டுகளில், இந்நிலை தலைகீழாக மாறியது. பல மணி நேர மின்தடை, ஒருநாளில், நான்கு மணி நேரம் கூட தொடர்ச்சியாக மின்சாரம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், வேலை செய்யாமலேயே, தொழிலாளர் சம்பளம், வாடகை செலவுகளை, எதிர்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.

ரீம் பேப்பர் பிரிண்ட் ஆகும்.ஜெர்மன் தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட, 300 "ஹோலிகிராப்' சிங்கிள் கலர் பிரின்டிங் மிஷன்கள், சிவகாசியில் உள்ளன. ஒரு மணி நேரத்திற்கு, 6 மின்தடை இல்லாத காலங்களில், தினமும், 2,000 முதல், 5,000 வரை சம்பாதித்தனர். தற்போது, நிலவும் மின்வெட்டு காரணமாக, 500 ரூபாய் கூடவரவில்லை.
இதுதவிர, தொழில்நுட்ப வளர்ச்சியால், ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான நவீன, "சிபிசி' ஆப்செட் மிஷன்கள் இறக்குமதி ஆகின்றன. இவற்றுடன் பழைய மிஷன்கள் போட்டி போட முடிவதில்லை.இச்சூழ்நிலையால், குடும்பத்தின் வாழ்வாதாரமாக இயங்கிய சிறு தொழில் அச்சு இயந்திரங்கள், இன்று, "காயலான்' கடைக்கு எடைக்கு போடப்படுகிறது.
அம்மன்கோவில்பட்டியில் அச்சகம் நடத்திய கணேஷ் கூறியதாவது:

Advertisement

சமையல், மருத்துவம், மெகந்தி குறிப்பு புத்தகம் என, பல்வகையான புத்தகம் பிரின்டிங் செய்து கொடுத்தேன்.
கட்டட வாடகை, 7,000 ரூபாய், சில மணி நேரம் மட்டுமே கிடைக்கும் மின்சாரத்திற்கு, மின் கட்டண உயர்வால் மாதம், 6,000 ரூபாய் செலுத்த வேண்டியுள்ளது.தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்கமுடிவதில்லை. 3 லட்ச ரூபாய்க்கு வாங்கிய அச்சு இயந்திரத்தை, பழைய இரும்புக்கு, எடை கணக்கில், 90 ஆயிரம் ரூபாய்க்கு விற்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.பழைய இயந்திரங்களை வாங்கும் ஏஜென்ட் காசி கூறுகையில், ""1 டன், 22 ஆயிரம் ரூபாய் வரை வாங்கப்படுகிறது.

இயந்திரங்களை உடைத்து கோயம்புத்தூர், பாண்டிச்சேரிக்கு அனுப்புகிறோம். உருக்கும் ஆலையிலும் மின் தடை காரணமாக, உடனே பணம் கிடைப்பது இல்லை. பழைய மிஷனில் உள்ள சில பொருட்களை, தேவைப்படுவோருக்கு கொடுத்து விடுவோம்,'' என்றார்.
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (8)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
christ - chennai,இந்தியா
26-ஜன-201312:22:16 IST Report Abuse
christ ஆட்சி செய்ய திறமை இல்லாதவர்களின் வாய் ஜாலத்தை மட்டுமே நம்பி ஆட்சியில் அமர வைத்தால் நாட்டின் நிலைமை இப்படிதான் சீரழியும்
Rate this:
Share this comment
Cancel
raja narayanan - ottawa,கனடா
26-ஜன-201312:03:21 IST Report Abuse
raja narayanan தமிழகத்தின் மின்சார பிரச்சனையை நிரந்தரமாக தீர்க்க ஒரு எளிய சிறந்த வழி ..bloom energy. bloom energy என்றால் என்ன? அமெரிக்க வை சேர்ந்த நம் இந்திய வம்சாவழி dr. sridar என்ற விஞ்ஞானியின் கண்டுபிடிப்பு தான் bloom energy. இதை பற்றி கீழ் வரும் பகுதிகளில் விளக்கி உள்ளேன் - What is an Energy Server - bloom energy Built with patented solid oxide fuel cell technology, Bloom's Energy Server™ is a new class of distributed power generator, producing clean, reliable, affordable electricity at the customer site. Fuel cells are devices that convert fuel into electricity through a clean electro-chemical process rather than dirty combustion. They are like batteries except that they always run. Bloom energy's particular type of fuel cell technology is different than legacy "hydrogen" fuel cells in three main ways: 1.Low cost materials – bloom cells use a common sand-like powder instead of precious metals like platinum or corrosive materials like acids. 2.High electrical efficiency – bloom servers can convert fuel into electricity at nearly twice the rate of some legacy technologies 3.Fuel flexibility – bloom tems are capable of using either renewable or fossil fuels Each Bloom Energy Server provides 200kW of power, enough to meet the baseload needs of 160 average homes or an office building... day and night, in roughly the footprint of a standard parking space. For more power simply add more energy servers. Bloom Energy Server Architecture At the heart of every Energy Server™ is Bloom's patented solid oxide fuel cell technology. Each Energy Server consists of thousands of Bloom's fuel cells. Each cell is a flat solid ceramic square made from a common sand-like "powder." Each Bloom Energy fuel cell is capable of producing about 25W... enough to power a light bulb. For more power, the cells are sandwiched, along with metal interconnect plates into a fuel cell "stack". A few stacks, together about the size of a loaf of bread, is enough to power an average home. In an Energy Server, multiple stacks are aggregated together into a "power module", and then multiple power modules, along with a common fuel input and electrical output are assembled as a complete tem. For more power, multiple Energy Server tems can be deployed side by side. In addition to Bloom's unmatched performance, this modular architecture offers... easy and fast deployment inherent redundancy for fault tolerance high availability (one power module can be serviced while all others continue to operate) mobility What is Distributed Generation? Distributed generation (DG) refers to power generation at the point of consumption. Generating power on-site, rather than centrally, eliminates the cost, complexity, interdepencies, and inefficiencies associated with transmission and distribution. Like distributed computing (i.e. the PC) and distributed telephony (i.e. the mobile phone), distributed generation shifts control to the consumer. The World Needs Distributed Generation that is Clean and Continuous Historically, distributed generation meant combustion generators (e.g. diesel gensets). They were affordable, and in some cases reliable, but they were not clean. While many people will tolerate dirty generation thousands of miles away from them, they think twice when it is outside their bedroom window or office door. Recently, solar has become a popular distributed generation option. Although the output is clean it is also intermittent, making it an incomplete strategy for businesses that need power around the clock, including when the sun is not shining. The Benefits of Bloom Energy Bloom Energy is a Distributed Generation solution that is clean and reliable and affordable all at the same time. Bloom's Energy Servers can produce clean energy 24 hours per day, 365 days per year, generating more electrons than intermittent solutions, and delivering faster payback and greater environmental benefits for the customer. And while other DG tems may require lengthy installations, sunny locations, or demand for consistent 24/7/365 heat load, Bloom's tems are easy and fast to install, practically anywhere. As Distributed Generation moves to the forefront of corporate consciousness, Bloom Energy Servers are perfectly designed to meet the demanding needs of today's economically and environmentally minded companies The US Government is going in for bloom energy aggressively . Even the CIA of USA along with other multinational companies like eBay, AT&T, Google,and over 200 bloom energy servers deployed in California ,USA, this is the hottest and simplest technology which requires less than even one year to deploy and use, with the least space and resources at a very low cost of generating electricity. I hope this message reaches Tamil Nadu Government which is in dire need of electricity power. Please can someone take this message to the relevent people concerned. I hope atleast this time , my message reaches Government of Tamil Nadu or India. Jai Hind
Rate this:
Share this comment
Cancel
sundar iyer - chennai,இந்தியா
26-ஜன-201311:07:53 IST Report Abuse
sundar iyer என்னைப் போன்று ஜெராக்ஸ் கடை வைத்திருப்போர்கள் படும் பாட்டை யாராவது சற்று கவனித்தால் நன்றாக இருக்கும்.
Rate this:
Share this comment
Cancel
Baskaran Kasimani - Singapore,சிங்கப்பூர்
26-ஜன-201310:56:24 IST Report Abuse
Baskaran Kasimani தமிழகமும் கூட காயலான் கடைக்கு போனாலும் ஆச்சரியப்பட முடியாது...
Rate this:
Share this comment
Cancel
Yoga Kannan - Al Buraidh,சவுதி அரேபியா
26-ஜன-201310:49:47 IST Report Abuse
Yoga Kannan ஆட்சி மாற்றம் தந்த பரிசு மக்களே...பரிசு....மக்களின் நாடி துடிப்பை அறிந்தவனை நாட்டுக்கு தலைவனாக தேர்ந்தெடுக்க வேண்டும். இல்லையேல் வீட்டையும் விற்க வேண்டிவரும் ...
Rate this:
Share this comment
Sankar.R - Singapore,சிங்கப்பூர்
26-ஜன-201317:50:22 IST Report Abuse
Sankar.Rசரியான ஆள்தான்,போன கருணா ஆட்சியல் பண்ணிட்டு போனதுதான் இந்த கூத்து....
Rate this:
Share this comment
Cancel
sombu - chennai,இந்தியா
26-ஜன-201305:28:26 IST Report Abuse
sombu என்ன கொடுமை சார். எல்லாம் நிர்வாக திறமையின்மையாலும், ஒருங்கினைபின்மையாலும் வந்தது.
Rate this:
Share this comment
Cancel
chermaraj chermam - madurai,இந்தியா
26-ஜன-201302:55:33 IST Report Abuse
chermaraj chermam உண்மை. நானும் மிகவும் பாதிக்க பட்டு உள்ளேன். 3 மெசினுக்கு 2 மெசின விட்டுட்டேன்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.