தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த்: தமிழகத்துக்கு துரோகம் செய்பவர்களை, 40 தொகுதிகளிலும் மக்கள் புறக்கணிப்பர். கடந்த ஆட்சியில், கருணாநிதி முதல்வராக இருந்ததால், அவரை திட்டி னேன்; இப்போது, ஜெய லலிதா முதல்வராக இருப்பதால், அவரை திட்டுகிறேன்.
டவுட் தனபாலு: "யார் முதல்வரா இருந்தாலும் திட்டுவேன்'னு சொல்றீங்களே... வருங்கால முதல்வர்னு உங்களை, உங்க கட்சியினர் சொல்றாங்க... தப்பி தவறி, நீங்க முதல்வராகிட்டாலும், உங்களை, நீங்களே மேடை போட்டு திட்டிக்குவீங்களோன்னு தான், எனக்கு, "டவுட்!'
தி.மு.க., தலைவர் கருணாநிதி: "இந்தியாவில், இலங்கை ராணுவத்துக்கு பயிற்சி அளிக்க மாட்டோம்' என, மத்திய அரசின் சார்பில், திட்டவட்டமாக தெரிவிக்கவில்லை. உலக நாடுகளின் மத்தியில், நடுநிலை நாடு என்ற பெயரை தக்க வைத்துக் கொள்வதற்காக, சிலவற்றில், விட்டுக் கொடுத்துப் போகிறதோ என்ற சந்தேகம் கொள்ளக்கூடிய அளவில் தான் மத்திய அரசு செயல்படுகிறது.
டவுட் தனபாலு: சந்தேகம் எல்லாம் படாதீங்க... பட்டவர்த்தனமாவே மத்திய அரசு அப்படி தான் செயல்படுது... என்ன பண்றது...? கூட்டணி பார்ட்னரான நீங்க எல்லாம், அவங்களுக்கு, "ஆமாம் சாமி' போடுற வரைக்கும், அவங்க செயல்பாடுகள் மாறவே, மாறாதுங்கிறதுல, எனக்கு, "டவுட்'டே இல்லை...!
தமிழக காங்., தலைவர் ஞானதேசிகன்: மண்ணெண்ணெய் ஒதுக்கீடு அதிகளவில், தமிழகத்துக்கு தேவை என்பதை, பிரதமரிடம் வலியுறுத்தி இருக்கிறோம். கேட்ட நிதியை விட, அதிக நிதியை தமிழகத்துக்கு திட்ட கமிஷன் தந்துள்ளது.
டவுட் தனபாலு: நீங்க கேட்ட எதையாவது மத்தியில கொடுத்திருக்காங்களா... அட... உங்க கட்சிக்கு நிர்வாகிகளை போடுங்க, போடுங்கன்னு, ஒரு வருஷமா கரடியா கத்துறீங்களே... அதையே காதுல போட்டுக்காதவங்க, நீங்க மண்ணெண்ணை கேட்டா மட்டும் தந்துடுவாங்களான்னு தான், எனக்கு, "டவுட்!'
தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின்: தி.மு.க.,வினர் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டோடு செயல்பட வேண்டும் என, அண்ணாதுரையை தொடர்ந்து கருணாநிதி வலியுறுத்தி வருகிறார். அதையே நானும் வலியுறுத்துவதோடு, இளைஞர்கள் கட்டுப்பாட்டோடு செயல்பட வேண்டும்.
டவுட் தனபாலு: அண்ணாதுரையும், கருணாநிதியும் தி.மு.க.,வுக்கு தலைவர்களா இருந்து தான், இந்த அறிவுரையை சொன்னாங்க... அடுத்த தலைவரா வரப்போற நீங்களும், அதே அறிவுரையை வழிமொழியுறதால, இன்னைக்கு வரைக்கும், இந்த மூணுமே உங்க கட்சியில இல்லையோன்னு தான், எனக்கு, "டவுட்!'
கர்நாடக கவர்னர் பரத்வாஜ்: கர்நாடக அரசு, மெஜாரிட்டியை இழந்ததாக எனக்கு தெரியவந்தால், பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன், பிப்ரவரி 4ம் தேதி துவங்கவுள்ள கூட்டத்தொடரில், பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுவேன்.
டவுட் தனபாலு: எடியூரப்பா இருந்தவரைக்கும், உங்களுக்கு ரொம்ப வேலை வச்சிட்டு இருந்தாரு... இப்பவும், அவரால, கர்நாடகா பா.ஜ., அரசுல ஏற்பட்டிருக்கிற குழப்பத்துல, உங்களுக்குள்ள தூங்கிட்டு இருக்கிற காங்கிரஸ்காரர் வெளியில வந்துடுவாரோன்னு தான், எனக்கு, "டவுட்!'
தமிழக அரசின் செய்திக்குறிப்பு: ஏழை, எளிய மக்கள் அனைவருக்கும் வசிக்க குடியிருப்புகள் கட்டுதல், அவர்கள் சுகாதாரமாக வாழும் வகையில், அவர்கள் குடியிருக்கும் பகுதிகளில், அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுத்தல் போன்ற எண்ணற்ற திட்டங்களை, ஜெயலலிதா அரசு செயல்படுத்தி வருகிறது.
டவுட் தனபாலு: ஏழை, எளிய மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தியும், இன்னும் தமிழகத்துல, ஏராளமான குடிசைகளும், டெங்கு, சிக்குன்-குனியா மாதிரியான நோய்களும் ஏன் அதிகரிச்சிட்டே போகுதுன்னு தான், எனக்கு, "டவுட்!'
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
மாற்றி மாற்றி பேசி பல்டி அடிப்பதி்ல் கேப்டனும் மற்றும் கர்நாடக ஆளுநரும் கருணாநிதி்யோட சேர்ந்தி்ட்டாற் போல ! சரி கரடி மாதி்ரி கத்தி்னாலும் அவங்க காதுல விழாதுங்கரது அனைவருக்கும் தெரிந்ததுதானே ! அப்புறம் முதல்ல கரண்ட கொடுங்க அதுல டவுட்டுணா 15 நாள் புகழ் எங்க நாராயணசாமி கிட்ட கேளுங்க சரியா ! சுத்தம் சுகாதாரத்தை பத்தி்யெல்லாம் அப்பறமா பேசிக்கோங்க கதைகளை மட்டுமே அறிக்கையாக விடும் கதாநாயகர்களே ! என்ன நான் சொல்றது சரி தானே ....

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.