"சாட்டை' படத்தை பார்த்தால் அரசு பள்ளிகள் ஒரு வித "கிலி'யை ஏற்படுத்துகின்றன. ஆனால், அரசு பள்ளிகளிலும் கடமையை தவறாமல் செய்யும் ஆசிரியர்கள் உள்ளனர் என்பதற்கு, ஆசிரியை சசிகலா தேவி ஒரு எடுத்துக்காட்டு.
இவர், கடந்த எட்டு ஆண்டுகளாக ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு செல்வதோடு, தன் துறையில் சிறந்த தேர்ச்சி விகிதத்தையும் தக்க வைத்து, அசத்தலான சாதனை படைத்து வருகிறார்.கன்னியாகுமரி மாவட்டம், தக்கலையை சேர்ந்த இவர் 2004ம் ஆண்டு முதல் வேளச்சேரி அரசு மேல்நிலை பள்ளியில் விலங்கியல் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். தினமும் காலை 7:45 முதல் 8:00 மணிக்குள் பள்ளிக்கு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இதுகுறித்து இவர் கூறியதாவது:நான் பள்ளி படிக்கும் காலத்தில் இருந்தே விடுப்பு எடுப்பது என்பது அரிதுதான். இதை ஒரு சாதனையாக நான் எப்போதும் கருதியது கிடையாது. கடமையாகவே நினைக்கிறேன். அதிலும், அரசு பள்ளி ஆசிரியை என்பதால் கூடுதல் பொறுப்பு உள்ளதாக நினைக்கிறேன். தினமும் அதிகாலை 5:00 மணிக்கே எனக்கு நாள் பணி துவங்கிவிடும்.காய்ச்சல் வந்தபோது, விபத்து நேரிட்ட போது கூட பள்ளிக்கு வந்து விட்டேன். உறவினர்களின் சுப நிகழ்ச்சிகள் விடுமுறை நாட்களில் வந்தால் மட்டுமே நான் கலந்து கொள்வேன். மற்ற நாட்களில் எனக்கு பதில் கணவர் செல்வார். என் பணிக் காலத்தில் இதுவரை 20 நாட்கள் மட்டுமே விடுப்பு எடுத்துள்ளேன்.
நான் மட்டும் இல்லை. என் மகன் அரவிந்தன், மகள் அபர்ணா ஆகியோரும் பெரும்பாலும் விடுப்பு எடுப்பதுஇல்லை. நான் எடுக்கும் பாடப்பிரிவில் அனைத்து மாணவ, மாணவியரும் 100 சதவீத தேர்ச்சி பெற வேண்டும் என்பது மட்டும்தான் குறிக்கோள். பெரும்பாலான ஆண்டுகளில், 100 சதவீத தேர்ச்சி கொடுத்துள்ளேன். மீதமுள்ள ஒன்பது ஆண்டுகள் விடுப்பு எடுக்காமல் பள்ளி சென்று மாணவ, மாணவியர்கள் முன்னேற்றத்திற்கு பாடுபட வேண்டும் என்பது தான் என் லட்சியம்.இவ்வாறு ஆசிரியை சசிகலாதேவி உற்சாகத்துடன் கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாழ்க உங்கள் மகத்தான பணி, இந்த நேரத்தில் நான் எனது ஆசிரியை பிரகாசம் மேரியை நினைத்து அவர்களுக்கும் மரியாதையை செய்ய நினைகிறேன் நான் படித்தது விழுப்புரம் மாவட்டத்திலுள்ள அரசு மேனிலை பள்ளியில், அங்கு இவர்கள் எனக்கு தெரிந்து 15 வருடம் பணி செய்து அங்கேயே ஓய்வும் பெற்றார் இவருக்கு மாறுதல் வந்த போதும் இவரை எங்கள் பகுதி மக்கள் போராட்டம் நடத்தி அதே பள்ளியில் பணி செய்ய வைத்தனர், இவரால் படித்து என்னை போன்று முன்னுக்கு வந்தவர்கள் கணக்கில் அடங்காதவர்கள், சரியாய் படிக்கவில்லை என்றால் இவர் எங்களுக்கு காது குத்தும் வைபவம் நடத்தி விடுவர், ( நாங்கள் வைத்த செல்ல பெயர் காது குத்தி டீச்சர் ) என் போன்ற மாணவர்கள் இன்று முன்னுக்கு வர உண்மை சேவை செய்தவர், இவர் கூட கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர்தான், தற்போது இவர் மகனும் அதே பள்ளியில் முது நிலை ஆசிரியராக வேலை பார்கிறார்.
மேலும் எனது கணித ஆசிரியர் KRS எனப்படும் அரங்கசாமி (மிக அற்புதமான கணித ஆசிரியர்), தமிழாசிரியர் அண்டிரன் (சிலபதிகாரத்தை இவர் போல் நடத்தியவர் எவரும் இருக்க மாட்டார்கள்), அறிவியல் ஆசிரியர் ஆறுமுகம்( அதிகம் மதிப்பெண் எடுக்க வைப்பதில் இவருக்கு இணையாக மிகவும் சில பேர்கள்தான் இருக்க முடியும்), ஆங்கிலத்தையும் வரலாற்றையும் ஒரு சேர எங்களுக்கு சொல்லி தந்த அருமை ஆசிரியர் AKS எனப்படும் சுந்தர்ராஜன் அய்யா, மற்றும் தலைமை ஆசிரியர் தாமஸ், இதுபோன்ற பலரின் உண்மையான உழைபினால் தான் அரசு பள்ளியில் படித்த நான் அயர்லாந்து கம்பெனியில் வெள்ளையர்களுடன் வேலை செய்ய காரணம் . உண்மையில் என்னை போன்றவர்கள் கொடுத்து வைத்தவர்கள், ஆனால் இன்று வேலியே பயிரை மேய்வது போல இன்றைய சில ஆசிரியர்கள் உள்ளனர் இத்தனிக்கும் இன்று இவர்கள் வாங்கும் சம்பளமோ மிக மிக அதிகம் என் போன்றவர்களுக்கு கிடைத்த இந்த வாய்ப்பு இன்றைக்கு எத்தனை பேருக்கு கிடைகிறது உண்மையில் எனக்கு மன வலி தான் உண்டாகிறது

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.