maths will be easy | கற்பித்தலை எளிமையாக்கினால் கணிதமும் இனிக்கும்'| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கற்பித்தலை எளிமையாக்கினால் கணிதமும் இனிக்கும்'

Updated : ஜன 27, 2013 | Added : ஜன 26, 2013 | கருத்துகள் (6)
Advertisement
கற்பித்தலை எளிமையாக்கினால் கணிதமும் இனிக்கும்'

வாழ்க்கையில் எல்லாமே ஒரு கணக்கு தான். இசை கூட ஒரு கணக்கின் அடிப்படையிலேயே இயங்குகிறது. ஆனால் இந்த கணக்கு பாடம் மட்டும் பெரும்பாலோருக்கு கசக்கும் மருந்தாகி விடுகிறதே ஏன்?

இன்றைய கணித பாட திட்டங்கள் எல்லாமே தலையைச் சுற்றி மூக்கை தொடுவதாக உள்ளன. கற்பிக்க கூடிய விதத்தில் கற்பித்தால், கணிதமும் இனிக்கும்' என்கிறார், கணித பேராசிரியர் சிவராமன்.

அவரோடு உரையாடியதில் இருந்து...

கணித பாடத்தை எளிமைப்படுத்துவது எப்படி?
முறையான கற்பித்தல் இல்லாததால், பல மாணவர்களுக்கு கணிதம் கசக்கத்தான் செய்கிறது. கணிதத்தை காட்சிப்படுத்தி புரிய வைக்க வேண்டும். சாதாரண பெருக்கல், கூட்டல், கழித்தல் தெரியாமல், பல அரசு பள்ளி மாணவர்கள் ஆரம்ப பள்ளியை, முடித்துவிடுகின்றனர். காரணம், மனப்பாடம் செய்யும் முறை தான். இரண்டு எண்களை பெருக்க, ஒரே வழியை தான் மாணவர்களுக்கு கற்று தருகிறோம். உதாரணமாக 2*2=4. இதை தவிர ஆறு முறைகளில் எளிய பெருக்கலை கற்று கொடுக்க முடியும். மேலும், கணிதத்தை மாதிரிகள் கொண்டு, வடிவங்களை உருவாக்குதல் முறை மூலமாக, விளையாட்டு ரீதியில் கற்று கொடுத்தால், எந்த எண்ணை பெருக்கவும் மாணவர்கள் சிரமப்பட மாட்டார்கள்.

ஆனால், கணிதத்தின் சூத்திரங்களை, அதே முறையில் கற்று கொடுக்க முடியுமா?
கணித பாடத்திற்கு இதுவரை, 60 வகையான மாதிரிகளை, செய்து வைத்திருக்கிறேன். அதை மாநகராட்சி பள்ளிகளிலும், கற்று கொடுத்திருக்கிறேன். கணிதத்தின் மீது கொண்ட, அளவற்ற ஈடுபாட்டால், "பை கணித மன்றத்தை' 2007 ஆம் ஆண்டு துவங்கினோம். இந்த கணித மன்றத்தில், தமிழகம் முழுவதும், 60க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களின் உதவியோடு, இயல் கணிதம், வடிவியல் உள்ளிட்ட பல்வேறு கணித பிரிவுகளுக்கு மாதிரிகளை உருவாக்கி வருகிறோம். இந்த மாதிரிகள் உதவியோடு, அடிப்படை கூறுகளை கற்று கொடுத்தால், கடினமான கணிதத்திற்கும் விடை கிடைத்துவிடும்.

மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களின் ஈடுபாடு எப்படி?
சென்னையில், இதுவரை 100 பள்ளிகளில் கணித ஆய்வு கூடம் அமைத்து, மாதிரிகள் கொண்டு விளக்கி உள்ளோம். மாணவர்களுக்கு அடிப்படை விஷயங்களை புரிய வைப்பதன் மூலம், ஆர்வத்துடன் கற்று கொள்கின்றனர்.ஒரு குச்சியை நகர்த்தும் போது, விழும் நிழல் மூலம், "சைன், காஸ் தீட்டாக்களின்' மதிப்புகளை எளிதில் கற்பிக்க முடியும். இதன்மூலம், பொதுத்தேர்வில் மாணவர்கள் எளிதில், 100 க்கு 100 மதிப்பெண்கள் பெற முடியும்.

அரசு பள்ளிகளில் இதற்கான சூழல் இருக்கின்றனவா?
பல்வேறு அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள், பாடத்தை நடத்துவதில் மட்டுமே, அக்கறை காட்டுகின்றனர். மற்ற பாடங்களை போல, கணிதத்தில் புதுப்புது தகவல்களை, ஆண்டுதோறும் அறிஞர்கள் கண்டுபிடிக்கின்றனர். ஆனால், பல ஆசிரியர்களுக்கே, அதை பற்றிய அறிதல் இல்லை. அரசு பணியில் சேர்ந்தவுடன், பொது அறிவை வளர்த்து கொள்வதில்லை. இதனால், மாணவர்களுக்கு, கணிதத்தை எளிய முறையில் கற்பிக்க தெரிவதில்லை. கணிதம் தொடர்பாக பல புத்தகங்களை எழுதியுள்ளேன். அவற்றில், மாணவர்களுக்கு பலவழிகளில், ஒரே கணித கேள்விக்கு எப்படி விடைகாண்பது என்பது குறித்து, விளக்கம் அளித்துள்ளேன்.

எத்தனை புத்தகங்கள் எழுதி இருக்கிறீர்கள்?
எண்களின் அன்பர், எண்களின் எண்ணங்கள், நட்சத்திர கணித மேதை உள்ளிட்ட ஐந்து புத்தகங்கள் எழுதி இருக்கிறேன். மேலும், கணித சூத்திரங்களை எளிமைப்படுத்துவது குறித்து, ஆய்வுகளும் செய்து வருகிறேன். மாணவர்கள் பாடப்புத்தகங்களில், படிக்கும் கணித முறை, தலையை சுற்றி மூக்கை தொடுவது போன்று, பல்வேறு படிகளை கொண்டது. ஆனால், இதை எளிமையாக்கினால், கணிதம் கசக்காது; இனிக்கும்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rajaram raghupathi - YANBU,சவுதி அரேபியா
28-ஜன-201300:27:14 IST Report Abuse
rajaram raghupathi தயவு செய்து இவரது இ-மெயில் அல்லது மொபைல் நம்பர் தெரிவிக்கவும். நன்றி
Rate this:
Share this comment
Cancel
Narasimhulu - Chennai,இந்தியா
27-ஜன-201319:36:40 IST Report Abuse
Narasimhulu தயவு செய்து இவரது இ-மெயில் அல்லது மொபைல் நம்பர் தெரிவிக்கவும். நன்றி. - Narasimhulu
Rate this:
Share this comment
Cancel
vayalum vazhvum-saravanakumar - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
27-ஜன-201316:15:50 IST Report Abuse
vayalum vazhvum-saravanakumar எனது கணித ஆசிரியர் KRS எனப்படும் அரங்கசாமி வகுப்பறையில் கணித சூத்திரம் கேட்டு கொண்டே உள்ளே வருவார், மேலும் ஒரு பிரம்பும் அவருடனே எப்பவும் இருக்கும், யாரை கை நீட்டுகிராரோ அவன்/ அவள் உடனே பதில் சொல்ல வேணும் இல்லையென்றால் மிக பெரிய பூஜை நடக்கும் சரியாய் சொல்லி விட்டால் அதே பிரம்பால் மென்மையாக அடித்து பாராட்டுவார் மேலும் கரும்பலகையில் கணித பாடத்தை பாதியிலேயே நிறுத்தி விட்டு மீதியை யாரவது ஒரு மாணவனை தேர்ந்தெடுத்து போட சொல்லி எங்களுடன் வந்து அமர்ந்து கொள்வார் நானும் கடந்த பல வருடங்களாக அவரை பார்க்க வேண்டும் என்று விசாரித்து வருகிறேன் ஆனால் அவரை பார்க்க முடியவில்லை இருந்தாலும் எனது பிரார்த்தனை அவரை நன்றாக தான் வைத்திருக்கும்
Rate this:
Share this comment
Cancel
getha - kovai,இத்தாலி
27-ஜன-201313:58:15 IST Report Abuse
getha நோ சான்ஸ் இவரு ஸ்கூல் டீச்சர் இல்லை . டீசேரு மட்டும்தான் கணக்கு ட்ரிக் தெரியும் . நம் ஓல்ட் மேதொட்ஸ் நமக்கு போதும் . மின்த்மத்ஸ் என்பது நம் குழந்தைகளிடம் குறைந்து விட்டதுதான் கணக்கில் குறைபற்றிகு கரணம்
Rate this:
Share this comment
Cancel
pattikkaattaan - Muscat,ஓமன்
27-ஜன-201309:42:49 IST Report Abuse
pattikkaattaan அரசு பள்ளி மற்றும் கலூரியில் உள்ள கணிதத்துறை ஆசிரியர்கள் மற்றும் பேராசியர்கள் எத்தனை பேர் மனசாட்சியோடு பாடம் நடத்துகிறார்கள் என்று எண்ணிப்பார்க்க வேண்டும் .... மேல்நிலை கணிதத்தில் 100 மதிப்பெண் பெற்றவர்கூட பாஸ் செய்வது கடினம் "அந்த அளவிற்கு" கணிதம் சொல்லி தருவார்கள் .. அதே ஆசிரியர்கள் அவர்களிடம் டுசென் சென்றால் மட்டும் நன்றாக சொல்லித்தருவார்கள் ... அவர்களை எதிர்த்து எந்த கேள்வியும் கேட்க முடியாது, கேட்டால் இன்டெர்னல் மார்க்கில் கைவைத்து விடுவார்கள் ... அனுபவித்த மாணவர்களுக்குத்தான் அந்த வேதனை புரியும் ... டுசென் எடுக்காமல் வகுப்பிலேயே சொல்லித்தரும் ஒன்றிரண்டு ஆசிரியர் பெருமக்களுக்கு என் வணக்கங்கள் .....
Rate this:
Share this comment
Cancel
Vasu Murari - Chennai ,இந்தியா
27-ஜன-201301:42:29 IST Report Abuse
Vasu Murari இதைப் போன்ற சில நல்ல செய்திகளைத் தரும்போது, அச்செய்தியில் குறிப்பிடப்படும் நபரின் முகவரியையோ அல்லது அவரைத் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி அல்லது கைபேசி எண்ணையோ குறிப்பிடப்பட்டால் உதவிகரமாக இருக்கும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை