A statue construct against Supreme court order | சுப்ரீம் கோர்ட் உத்தரவை மீறி இந்தி எதிர்ப்பாளருக்கு சிலை | Dinamalar
Advertisement
சுப்ரீம் கோர்ட் உத்தரவை மீறி இந்தி எதிர்ப்பாளருக்கு சிலை
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

திருச்சி :பொது இடத்தில் தலைவர்கள் சிலை அமைக்க, உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் உயிரிழந்த சின்னசாமிக்கு, திருச்சியில், தமிழக அரசு சிலை அமைப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழகத்தில், இந்தி மொழித் திணிப்பை கண்டித்து, திருச்சி ரயில்வே ஜங்ஷனில், 1964 ஜன., 25ம் தேதி, கீழப்பழூர் சின்னசாமி தீக்குளித்து உயிரிழந்தார். கடும் எதிர்ப்பு காரணமாக, இந்தி மொழி திணிப்பை, மத்திய அரசு கைவிட்டது. திருச்சி, தென்னூர் உய்யக்கொண்டான் ஆற்றங்கரையில், கீழப்பழூர் சின்னசாமி, விராலிமலை சண்முகம் ஆகியோருக்கு சமாதிகள் உள்ளன. இந்நிலையில், 2011 நவம்பர், 12ம் தேதி, "கீழப்பழூர் சின்னசாமிக்கு சிலை அமைக்கப்படும்' என்று, முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். வெறும் அறிவிப்பாக மட்டும் ஓராண்டு இருந்த நிலையில், திருச்சி, கே.டி., தியேட்டர் சிக்னலில், நேற்று முன்தினம் இரவில் இருந்து, சின்னசாமி சிலை அமைப்பதற்கான பணி நடந்து வருகிறது.

காற்றில் பறந்த உத்தரவு:சமீபத்தில், பொது நல வழக்கு ஒன்றில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.எம்.லோதா, எஸ்.ஜெ. முகோபாத்யா ஆகியோர் கொண்ட, "பெஞ்ச்' அளித்த தீர்ப்பு:நெடுஞ்சாலை அல்லது பொது இடங்கள் என்பது, அனைத்து மக்களின் உபயோகத்திற்கானது. தலைவர்களுக்கு சிலை வைத்து தான் கவுரவிக்க வேண்டுமென்றால், பொதுமக்களுக்கு இடைஞ்சல் இல்லாத வகையில், தனி இடங்களில் வைத்துக் கொள்ளலாம். அதுவும், அரசு நிதியிலிருந்து வைக்கக் கூடாது. அரசு நிதி, ஏழைகளின் முன்னேற்றத்துக்காகவே செலவழிக்கப்பட வேண்டும். தலைவர்களை கவுரவிப்பதற்காக அல்ல.இவ்வாறு, தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தனர்.ஆனால், உச்சநீதிமன்ற உத்தரவை மீறி, திருச்சி தென்னூர் சாஸ்திரி சாலையில் இருந்து, கரூர் பை-பாஸ் மேம்பாலம் செல்லும் சாலை, திருச்சி தெப்பக்குளத்தில் இருந்து தில்லை நகர், உறையூர் செல்லும் சாலை சந்திக்கும் நால் ரோட்டில், சின்னச்சாமிக்கு சிலை அமைக்கும் பணி ஜரூராக நடக்கிறது.ஏற்கனவே போக்குவரத்து நெரிசல்மிக்க இந்த இடத்தில், சிலை அமைக்கப்பட்டு, அதை சுற்றி, "ரவுண்டானா'வும் அமைக்கும்பட்சத்தில், மேலும் இடையூறு ஏற்படும். இதற்கான செலவும், அரசுடையது.

உத்தரவு மீறல் இல்லை:


அ.தி.மு.க.,வினர் கூறியதாவது:தமிழக செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை சார்பில், 9 லட்ச ரூபாய் செலவில் சின்னசாமி சிலை அமைக்கப்படுகிறது. இடத்தேர்வு மற்றும் உருவச்சிலை அமைக்க, காலதாமதம் ஏற்பட்டது. முதல்வர் ஜெயலலிதா அறிவித்தும், கடந்தாண்டே, அரசாணையும் பிறப்பிக்கப்பட்டு விட்டது. எனவே, சின்னசாமி சிலை அமைப்பது, 10 நாட்களுக்கு முன் பிறப்பிக்கப்பட்ட, உச்ச நீதிமன்ற உத்தரவை மீறியதாகாது.

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (33)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Good Man - Doha,கத்தார்
27-ஜன-201313:35:24 IST Report Abuse
Good Man தமிழ், தமிழர் கலாச்சாரம், தமிழர் பண்பாடு, தமிழினம் என்று கூறியே நம்மை ஏமாற்றிய ஒரு கட்சி இன்றுவரை நம்மை ஏமாற்றி கொண்டிருக்கிறது..நாமும் ஏமாந்து கொண்டிருக்கிறோம்.
Rate this:
26 members
0 members
10 members
Share this comment
Cancel
சத்தி - Bangalore,இந்தியா
27-ஜன-201313:26:43 IST Report Abuse
சத்தி ஒவ்வொரு மாநிலத்தில் அம்மாநில மொழி மற்றும் ஆங்கிலம் மொழிப்பாடமாக இருந்தாலே போதும். பிரெஞ்சு, சான்ஸ்க்ரிட்/ ஹிந்தி போன்றவை விருப்பபாடமாகவோ அமைக்கலாம், அகாடமிக் ரிசல்ட் அதை சார்ந்து இருக்கவேண்டாம், தொழில்முறையில் இந்த மொழி தேவைபடுபவர்கள் தனியார் நிறுவனத்தில் சேர்ந்து படிக்கலாம்.மாநிலத்தில் ஹிந்திய திணித்தல் ஒருபோதும் ஏற்றுகொள்ள முடியாது.
Rate this:
4 members
0 members
43 members
Share this comment
Cancel
Mohi - Chennai,இந்தியா
27-ஜன-201311:15:18 IST Report Abuse
Mohi யார் எதை செய்தாலும் முக தான் காரணமா. உண்மையை சொன்னால் அகல இந்திய அரசியல் நாயகன் கலைஞ்சரை தவிர யாரும் கிடையாது.
Rate this:
2 members
0 members
44 members
Share this comment
Cancel
Nandu - Chennai,இந்தியா
27-ஜன-201309:38:50 IST Report Abuse
Nandu நாட்டுக்கும் மொழிக்கும் மக்களின் வளர்ச்சிக்கும் உண்மையில் உழைத்த தலைவர்களுக்கு சிலை வைப்பது அவர்களை கௌரவிக்க என்பது வேடிக்கையானது. இந்த கவ்ரவங்கள் இல்லாதவர்களை என்ன செய்துவிடும்? சிலைகளை பார்க்கும் போது மக்களுக்கு அந்த தலைவர்களின் நினைவும் அவர்களின் உழைப்பும் தியாகமும் நினைவில் வரவேண்டும் என்பதும் அந்த நினைவு நல்ல எண்ணங்களையும் தியாக உணர்வுகளையும் வழங்கும் என்பதர்க்க்காகத்தான் சிலைகள் வைக்கப்படுகிறது. சிலைகளை யார் கண்ணிலும் படாமல் வைக்கச்சொல்லுவது விந்தையானது. போக்குவரத்துக்கு இடைஞ்சல் ஏற்படாத இடங்களில் சிலைகளை வைக்க வைக்க வேண்டுமென்பதே முக்கியமானது. அதைவிடுத்து சிலைகளே வேண்டாம் என்பதும் பலவாறு பேசிப்பழகுவதும் சரியல்ல. அரசியல் வாதிகளின் கூட்டங்கள், ஆர்பாட்டங்கள், முக்கியமான சாலைகளில் இருக்கும் திரையரங்குகள் ஏற்படுத்தாத போக்குவரத்து சிக்கல்கலையா சிலைகள் ஏற்படுத்திவிடுகின்றன? தற்போது போக்குவரத்து மிகுந்த சிலைகளுக்கு மாலையிடும் அரசியல் நிகழ்வுகளை தடை செய்தாலே, அது போன்ற இடங்களில் சிலைகளாய் நிற்கும் நாட்டுக்கு தியாகம் செய்தவர்கள் எந்த தொல்லையும் இன்றி நாட்டு நடப்புக்களை வேதனைகளோடு பார்த்துக்கொண்டாவது நிற்பார்கள். பொதுமக்கள் தலைவர்களை நினைக்கிறார்களோ இல்லையோ, ஆனாலும் சிரமமில்லாமல் அவர்களால் வாழமுடியும்.
Rate this:
7 members
0 members
3 members
Share this comment
Cancel
PR Makudeswaran - madras,இந்தியா
27-ஜன-201309:05:26 IST Report Abuse
PR Makudeswaran கர்நாடகம் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்கவில்லை என்று குறை சொன்னது யார்?இன்று அதை மீறுபவர் யார்?அரசியலில் வேறு வேலை? உங்களில் யார் நல்லவர். சிலை வைத்ததால் என்ன பயன் காக்கை எச்சமிட ஒரு இடம் கிடைக்கும்.உருப்படியான வேலை வேறு ஏதும் தெரியவில்லையா? தொலை நோக்கு பார்வையில் பொது நிதியை செலவு செய்யுங்கள்.ஊரை ஏமாற்றும் வேலை இனியும் வேண்டாமே சிலை வைக்கும் கலையை மு க தொடங்கி வைத்தார். நீங்கள் தொடர்கதை ஆக்குகிறீர்கள்.
Rate this:
2 members
0 members
56 members
Share this comment
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
27-ஜன-201308:52:03 IST Report Abuse
villupuram jeevithan சுப்ரீம் கோர்ட் உத்தரவை மத்திய அரசே காற்றில் பறக்கவிடும்போது, மற்றவர்களை கேட்கலாமோ?
Rate this:
56 members
0 members
3 members
Share this comment
Cancel
SENTHIL KUMAR - MADURAI,இந்தியா
27-ஜன-201308:32:26 IST Report Abuse
SENTHIL KUMAR காவேரி நதி நீர் பிரச்சனையில் உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பை மதிக்காத கர்நாடக அரசை அந்த உச்ச நீதி மன்றம் என்ன செய்தது? ஒன்றும் இல்லை தமிழகத்திற்கு ஒரு நீதி கர்நாடகத்திற்கு ஒரு நீதியா?
Rate this:
2 members
0 members
39 members
Share this comment
Cancel
dori dori domakku dori - nisova,மான்ட்செரட்
27-ஜன-201307:39:51 IST Report Abuse
dori dori domakku dori மொழி கல்வியில் அரசு கீழ் கண்ட மாற்றத்தை கொண்டுவந்தாலே போரும் - 1.அனைத்து பாடங்களும் தமிழில் பயிற்றுவிகபடவேண்டும் (1-10), இதனுடன் காலை 1 hr (ஆங்கிலம் இலக்கணம் மற்றும் பேசும் பயிற்சி) , மாலை 1 ஹர்(ஹிந்தி இலக்கணம் மற்றும் பேசும் பயிற்சி ) பிறகு பாருங்கள் மொழி அறிவில் தமிழனின் மாற்றத்தை .
Rate this:
6 members
0 members
10 members
Share this comment
manokaran - kanchipuram,இந்தியா
27-ஜன-201314:21:17 IST Report Abuse
manokaranதமிழர்கள் ஒன்றுபட கூடாது என்றுதான் அரசியல்கட்சிகள் வேலை செய்கின்றன அதில் தமிழ் என்றால் ஒரு குறிப்பிட்ட சமுகத்திற்கு பிழைப்பு போய்விதும் என்றுநினைத்து அவர்கள் அதற்க்கு மேல் மட்டத்தில் அணைத்து வேலைகளையுன்\ம செய்கிறார்களே அவர்களுக்கு அரசும் துனைபோகின்றேதே என்று மாறும் இந்த நிலை தமிழர்கள் ஜாதியை மறந்து ஒன்றுகூடினால் உலகமே வியக்கும் வண்ணம் முன்னேற்றம் அடையும் கந்தன்,சென்னை ...
Rate this:
1 members
0 members
2 members
Share this comment
Cancel
T.Indran - Pudukottai,இந்தியா
27-ஜன-201307:29:31 IST Report Abuse
T.Indran இந்தி எதிர்ப்பு என்ற உணர்வு தூண்டப்பட்டு அந்த போராட்டததில் தியாகி சின்னசாமி உள்பட 20 க்கும் மேற்பட்டோர் தங்கள் இன்னுயிரை மாய்த்து கொண்டார்கள். தூண்டி விட்டவர்கள் இன்று சவுக்கியமாக 48 வருடங்களுக்கு மேல், கொள்ளுப்பேரன். பேத்திகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சிலர் தள்ளு வண்டிகளிலும் வாழ்கிறார்கள். தியாகி சின்னசாமி செய்த தியாகமோ தனது இன்னுயிர். ஆனால் தூண்டி விட்டவர்கள் செய்ததோ வெறும் 'lip service' என்று சொல்லப்படும் 'வாய் வீச்சு' மட்டுமே. கொள்ளு பேரன் பேத்திகள் அனைவரும் இந்தி படித்து, அதில் ப்ரவிந் பட்டமும் பெற்று, சிலர் நாடாளுமன்ற உறுப்பினர் களாவும் உள்ளனர். தியாகி சின்னசாமி அவர்களின் ஆன்மா இவர்களை மன்னிக்குமா. கொஞ்சம் சிந்தித்து பாருங்கள் நண்பர்களே.
Rate this:
131 members
0 members
26 members
Share this comment
Raj Pu - mumbai,ஏமன்
27-ஜன-201314:23:02 IST Report Abuse
Raj Puஇது இந்திய சுதந்திர போராட்டத்திற்கும் பொருந்துமே, சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு தன் வீட்டையே இழந்து இன்று அன்றாடம் காஇசியாக வாழ்வோர் பலர் எனக்கு தெரியும், இன்று பல பேர் வசதியாக வாழ்வதும் எனக்கு தெரியும், வெள்ளையனே வெளியேறு என்று கூறிய பலர் இன்று யுகே, யுஎஸ் என்று செட்டில் ஆவதும் இங்கு நடக்கிறது ...
Rate this:
0 members
0 members
44 members
Share this comment
Cancel
Govind - Delhi,இந்தியா
27-ஜன-201306:06:50 IST Report Abuse
Govind மேலும் இது சம்பந்தமாக மொழி போர் த்யாகிகளை குறிப்பிடும் போதெல்லாம் என்னை கட்டாயபடுதாதீர்கள் என்று சொல்வோரை அப்படின உன் பிள்ளையை தமிழ் வழி கல்வியில் படிக்க வைக்க வேண்டியது தானே என்று கேள்வி கேட்கிறார்கள். இந்தி படிக்கும் உங்களை போன்ற மனபான்மை உள்ளவர்கள் உங்கள் பிள்ளைகளை இந்தி வழி கல்வியில் சேர்த்துவிடுங்கள் பிறகு எனக்கு அறிவுரை கூறுங்கள்.
Rate this:
0 members
0 members
91 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்