புதுடில்லி:ரயில் கட்டணங்கள் மீண்டும் உயர்கின்றன. இந்த முறை, உயர் ரக ரயில்களின் உணவு கட்டணம் உயர்த்தப்பட உள்ளன. இதனால், கட்டணங்கள், 15 ரூபாய் முதல், 20 ரூபாய் வரை, உயர உள்ளன. இதற்கான அறிவிப்பு, விரைவில் வெளியாக உள்ளது.
பத்தாண்டுகளுக்கு பிறகு, பயணிகள் ரயில் கட்டணம் உயர்த்தப்பட்டு, இம்மாதம், 22ம் தேதி முதல், மாற்றியமைக்கப்பட்ட கட்டணம் அமலுக்கு வந்தது. அதன்படி, புறநகர், எக்ஸ்பிரஸ், மெயில் ரயில்களின் கட்டணங்கள், குறைந்தபட்சம், 2 சதவீதம் முதல், 10 சதவீதம் வரை உயர்த்தப்பட்டன.இந்நிலையில், ராஜ்தானி, துரந்தோ மற்றும் சதாப்தி ஆகிய, உயர் ரக ரயில்களின் உணவு கட்டணங்கள் உயர்த்தப்பட உள்ளன. இத்தகைய ரயில்களில் பயணிக்கு வழங்கப்படும் உணவு மற்றும் தின்பண்டங்களுக்கான கட்டணம், டிக்கெட்டுடன் சேர்த்து வசூலிக்கப்படும்.
இந்த கட்டணங்கள், நீண்ட காலமாக உயர்த்தப்படவில்லை. கட்டணங்களை மாற்றியமைப்பது குறித்தும், வழங்கப்படும் உணவு வகைகளில் மாற்றம் செய்வது குறித்தும் ஆலோசனை வழங்க, கமிட்டி அமைக்கப்பட்டது.ரயில்வே வாரியத்திடம், அந்த கமிட்டி அறிக்கை வழங்கியுள்ளது. அதன் அடிப்படையில், உணவு கட்டணமும், வழங்கப்படும் உணவிலும் மாற்றம் செய்யப்பட உள்ளது. உணவு கட்டணம், 15 ரூபாய் முதல், 20 ரூபாய் வரை உயர்த்தப்பட உள்ளது.அது போல், உணவு வகைகளிலும் மாற்றம் வருகிறது. குளிர் பானங்கள், சாக்லெட் வழங்கப்பட்டு வருவதற்கு பதிலாக, ஐஸ் கிரீம் மற்றும் தயிர் வழங்கப்பட உள்ளது. குறிப்பாக, அமுல் போன்ற சிறந்த நிறுவனங்களில் இருந்து, தயிர், ஐஸ்கிரீம் வாங்க திட்டம் உள்ளது.
இதுகுறித்து, ரயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது:ரயில்களில் உணவு தயாரிக்க செலவு அதிகரித்து விட்டது. எண்ணெய் மற்றும் பிற பொருட்களின் விலை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ரயிலில் வழங்கப்படும் உணவு பொருட்களின் விலை, பத்தாண்டுகளுக்கும் மேலாக உயர்த்தப்படவில்லை.அது போல, தரமான உணவு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது. உணவுக்கான கட்டணங்களை உயர்த்தவில்லை என்றால், தரமான உணவு வழங்க முடியாத நிலை ஏற்படும். எனவே, உணவு கட்டணங்களின் விலை உயர்த்தப்படுவதை தவிர வேறு வழியில்லை.இதற்கான முறையான அறிவிப்பு, இன்னும் சில நாட்களில் வெளியாகும். ரயில்வே இணையதள, "சாப்ட்வேர்' மாற்றியமைக்கப்பட்டதும், கட்டண உயர்வு அமலுக்கு வரும்.இவ்வாறு, அந்த அதிகாரி கூறினார்.
நாடு முழுவதும், 21 ராஜ்தானி, 23 துரந்தோ, 45 சதாப்தி ரயில்கள் என, 59 உயர் ரக ரயில்கள் இயக்கப்படுகின்றன. இவற்றில், நாள் தோறும், 91 ஆயிரம் உணவுகளும், தின்பண்டங்களும் வழங்கப்படுகின்றன.கட்டண உயர்வு, சாதாரண ரயில்களுக்கும், எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கும் இல்லை; ராஜ்தானி, துரந்தோ மற்றும் சதாப்தி ரயில்களுக்கு மட்டும் தான் என்பதால், சாதாரண ரயில் பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.அதே சமயம், நாடு முழுவதும் உள்ள பெரிய நகரங்களில் அமைந்துள்ள ரயில் நிலையங்களில் உள்ள உணவு விடுதிகளில், தரமான உணவு வழங்க நடை முறை உருவாக்கப்படும் என்று கூறப்படுகிறது. ஆகவே, அதில் விற்கப்படும் உணவு வகைகள் விலை உயர வாய்ப்பு உள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
ரயிலில் இப்ப காபி விலை பத்து ரூபாய் , சாப்பாடு 64 ரூபாய் (ஒரு வாய் வைக்க முடியாது ) இப்ப பட்னி கிடந்தாலும் அடுத்த station வந்தா போதும் ஒரு காபி குடிசிரலாம் எனபது தான் இன்றைய pantry கார்களின் நிலைமை , தூக்குவாளி ,சூடா வடை , போண்டா வாசனை பிடித்துகொண்டே வரவேண்டும் , ஒரு ஆம்லெட் 15 ரூபாய் பிரட் இல்லாமல். இவர்கள் சுவையாய் கொடுத்தால் நின்று கொண்டே சாப்பிடலாம் செய்ய மாட்டார்கள்.
வேண்டுமானால் நாகர்கோவில் டு மும்பை எக்ஸ்பிரஸ் ஏறி மும்பை வரை சென்று பாருங்கள் ஏங்கி போவீர்கள், நம்ம சொந்த காரார் வீடு வரும் வரை.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.