Rajnath singh Challanges Shinde | பா.ஜ., - ஆர்.எஸ்.எஸ்., பயங்கரவாத அமைப்புகள் எனில் தடை செய்யுங்கள்: ராஜ்நாத் சிங் | Dinamalar

பா.ஜ., - ஆர்.எஸ்.எஸ்., பயங்கரவாத அமைப்புகள் எனில் தடை செய்யுங்கள்: ராஜ்நாத் சிங்

Updated : ஜன 29, 2013 | Added : ஜன 27, 2013 | கருத்துகள் (69)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
Rajnath singh Challanges Shinde, பா.ஜ., - ஆர்.எஸ்.எஸ்., பயங்கரவாத அமைப்புகள் எனில் தடை செய்யுங்கள்:  ராஜ்நாத் சிங்

புதுடில்லி:""பா.ஜ.,வும், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பும், பயங்கரவாத அமைப்புகள் என, மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே கருதினால், அதற்கான ஆதாரங்கள் இருந்தால், இரண்டையும், அவர் தடை செய்யலாம்; அவற்றின் தலைவர்களையும் கைது செய்யலாம்,'' என, பா.ஜ., தேசிய தலைவர் ராஜ்நாத்சிங் சவால் விடுத்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில், காங்., தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம், சமீபத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய, மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே, ""ஐதராபாத் மெக்கா மசூதி, மகாராஷ்டிராவின் மாலேகான், பாகிஸ்தான் செல்லும், சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரயில் போன்றவற்றில், நிகழ்ந்த குண்டு வெடிப்புகளுக்கு, பா.ஜ., மற்றும் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினரே காரணம்'' என, கூறியிருந்தார்.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த, பா.ஜ., மற்றும் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினர், "அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே பதவி விலக வேண்டும்; காங்., தலைவர் சோனியா, பிரதமர் மன்மோகன் சிங் மன்னிப்பு கேட்கவேண்டும்' எனக்கோரி, கடந்த வாரம், நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்நிலையில், பா.ஜ., தேசிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள, ராஜ்நாத் சிங் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:
பா.ஜ., மற்றும் ஆர்.எஸ்.எஸ்., அமைப்புக்கு எதிராக, கருத்துக்களை தெரிவித்ததன் மூலம், அமைச்சர் ஷிண்டே, இந்தியாவின் கவுரவத்தை பாழ்படுத்தி விட்டார். ஷிண்டேயை பதவி நீக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, பா.ஜ.,வினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவர்; அடுத்த மாதம் மூன்றாவது வாரத்தில் துவங்கும், பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத் தொடரிலும், இந்தப் பிரச்னையை எழுப்புவோம்.

ஆர்.எஸ்.எஸ்., ஒரு பெரிய அமைப்பு; அந்த அமைப்பினர் நடத்தும் பயிற்சி முகாம்களில், ஏராளமானோர் பங்கேற்கின்றனர். அவர்களில் சிலருக்கு, நாட்டின் சில பகுதிகளில் நடந்த, குண்டுவெடிப்புகளுடன் தொடர்புள்ளது என்பதற்காக, அந்த அமைப்பை பயங்கரவாத ஆதரவு அமைப்பாக கருத முடியாது.குண்டு வெடிப்பில் தொடர்புடைய அந்த நபர், கடந்த காலங்களில், காங்., கட்சியில் கூட இருந்திருக்கலாம். ஆங்காங்கே நடக்கும், சில சம்பவங்களுக்கு எல்லாம், ஒரு அமைப்பு பொறுப்பேற்க முடியாது.குற்றம் புரிந்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு குடும்பத்தை சேர்ந்த ஒருவர் தவறு செய்தார் என்பதற்காக, அந்த குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும், கிரிமினல்கள் எனக்கூற முடியாது.பா.ஜ., மற்றும் ஆர்.எஸ்.எஸ்.,க்கு எதிராக, அமைச்சர் ஷிண்டே கூறிய கருத்தை, பாகிஸ்தானில் செயல்படும், இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத அமைப்பான, ஜமாத் - உத் - தாவா தலைவர் ஹபீஸ் சயீது ஆதரித்துப் பேசியுள்ளார்; அது, துரதிருஷ்டமானது.இதன்மூலம், இந்தியாவை ஒரு பயங்கரவாத நாடாக சித்தரிக்க, ஹபீஸ் சயீது முற்பட்டுள்ளார்.இந்த விஷயத்தில், மத்திய அரசு அமைதி காப்பது சரியல்ல. அதனால், சர்வதேச அளவில், இந்தியாவின் கவுரவம் பாதிக்கப்படும்.

மெக்கா மசூதி மற்றும் அஜ்மீர் தர்காவில் நிகழ்ந்த குண்டு வெடிப்புகளுக்கு, லஷ்கர் - இ- தொய்பா மற்றும் இதர பாக்., பயங்கரவாத அமைப்புகளே காரணம் என, உலகம் முழுவதும் செயல்படும் உளவு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. ஆனால், இந்திய உள்துறை அமைச்சரோ, இந்த குண்டு வெடிப்புகளுக்கு பின்னணியில், பா.ஜ., மற்றும் ஆர்.எஸ்.எஸ்., இருப்பதாக கூறுகிறார். ஷிண்டேயின் கருத்தை, இந்துக்கள் மட்டுமின்றி, தேசியவாத முஸ்லிம்களும் விமர்சித்துள்ளனர். ஓட்டு வங்கியை கருத்தில் கொண்டே, பா.ஜ.,வுக்கு எதிராக, அவர் பேசியுள்ளார். இதன்மூலம், நாட்டின் கவுரவம் பாதிக்கப்பட்டதைப் பற்றி, காங்., தலைவர்கள் கவலைப்படவில்லை. ஆட்சி நீடித்தால் போதும் என, நினைக்கின்றனர்.இவ்வாறு, ராஜ்நாத் சிங் கூறினார்.


முதல்வர் மோடி சந்திப்பு:

பா.ஜ.,வின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள, ராஜ்நாத் சிங்கை, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, நேற்று சந்தித்துப் பேசினார். அவர்கள், இருவரும், 2014ல் நடைபெறவுள்ள, லோக்சபா தேர்தல் குறித்து, விரிவாக ஆலோசனை நடத்தினர்.சந்திப்பிற்குப் பின், நிருபர்களிடம் பேசிய முதல்வர் மோடி, ""ராஜ்நாத் சிங்கிற்கு வாழ்த்துச் சொல்ல வந்தேன். குஜராத்தில், நான் என்ன செய்ய வேண்டும்; எப்படி செயல்பட வேண்டும் என்பது தொடர்பாக, அவரிடம் ஆலோசனை பெற்றேன். லோக்சபா தேர்தல் தொடர்பாகவும் விவாதித் தேன்,'' என்றார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (69)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nallavan - tiruchy,இந்தியா
28-ஜன-201320:42:02 IST Report Abuse
nallavan பயங்கர வாதிகலால் தான் இப்படி சவால்விட முடியும்.
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
28-ஜன-201317:51:24 IST Report Abuse
Nallavan Nallavan "உள்துறை அமைச்சரின் ஊரறிந்த பொய் மூட்டைகள்" என்ற தலைப்பில் ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தி எழுதிய கட்டுரை படித்துப் பார்க்கவும் .... கொடேஷனில் உள்ளதையே கூகுளில் சர்ச் செய்து முதலில் வரும் லிங்க்-கில் படித்துப் பார்க்கலாம் ....
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
28-ஜன-201315:39:08 IST Report Abuse
Nallavan Nallavan வேடிக்கை .... ..... காவித் தீவிரவாதம் என்றால் விவேகானந்தர் கூட தீவிரவாதிதான் .... இந்து மதத்தின் பெயரால் யாரும் தீவிரவாதம் செய்யவில்லை ..... எதிர்ப்புத் தெரிவிக்க இந்துச் சாமியார்கள் சிலர் இந்த வழிமுறையைத் தேர்ந்தெடுத்து இருக்கலாம் .... தொடர்ச்சியான அமைதிக் குலைப்பு முயற்சி இதில் தெரியவில்லை .... ஒரு அமைப்பு ரீதியாக அது இன்னும் வடிவேடுக்கவில்லை .... இருப்பினும் இது கண்டனத்துக் குரியது .... சட்டப்படியான நடவடிக்கைக்கு உரியது .... ஆனால் இஸ்லாமிய அடிப்படைத் தீவிரவாதம் முழுக்க முழுக்க மதத்தின் பெயரால் நடத்தப் படுகிறது .... ஒரு உலகளாவிய நெட்வொர்க் அது .... அணு குண்டையும் ..... கேப் வெடியையும் ஒப்பிட முடியாதே .... ????
Rate this:
Share this comment
Munavar Hussain - Al Sharjah,ஐக்கிய அரபு நாடுகள்
31-ஜன-201300:30:24 IST Report Abuse
Munavar Hussainஇஸ்லாமிய நாட்டில இருந்து நல்லா தின்னுட்டு பேசிறத பாரு. நீங்க குண்டு வச்சா காப். இருக்கிறதிலேயே பயங்கர தீவிரவாதிகள் இந்த பி ஜே பி அமைப்புகள். உண்மை தெரியலேனா மூடிகிட்டு இரு நல்லவா....
Rate this:
Share this comment
Cancel
Dilip KS - Chennai,இந்தியா
28-ஜன-201315:04:49 IST Report Abuse
Dilip KS காங்கிரஸ் கட்சிக்கு முக்கியமான மசோதக்கள் நிறைவேற்ற பிஜேபி உதவி வேண்டி உள்ளது. ஆனாலும் அதை புரிந்து கொள்ளாமல் காங்கிரஸ் இருக்கிறது. வேண்டுமானால் அவர்கள் எங்களுக்கு தீவிரவாதி கட்சி அதரவு வேண்டாம் என்று சொல்லட்டுமே. ஒரு உதவாக்கரை அரசாங்கத்திடம் இந்தியா சிக்கி தவித்துக்கொண்டிருக்கிறது. ஷிண்டே சோனியாவின் தயவில் இருக்கிறார். அழகிரி சொன்ன பரமசிவன் கழுத்திலுள்ள பாம்பு இவர்கள் தான். இவர்களுக்கு மக்கள் பாடம் கற்றுக்கொடுக்கும் சமயம் ஆகி விட்டது.
Rate this:
Share this comment
Cancel
kumaresan.m - hochimin ,வியட்னாம்
28-ஜன-201314:25:00 IST Report Abuse
kumaresan.m திரு .ஷிண்டே அவர்கள் தேர்தலை மனதில் வைத்தே நாள் தோறும் இது போன்ற அறிக்கை வெளியிடுகிறார் , தேசத்திற்கு தீங்கு விளைவிப்பவர்களை உள்ளே போட்டு நூங்கு எடுக்காமா சொம்மா வளவளனு பேசிகிட்டு சின்ன புள்ள தனமா ....
Rate this:
Share this comment
Cancel
Vasughi - London  ( Posted via: Dinamalar Android App )
28-ஜன-201314:00:45 IST Report Abuse
Vasughi இது நடந்தா தான் நம்ம நாடுல இருக்கிற மத்த சாதி் கட்சிகாரனுங்க தி்ருந்துவாணுங்க
Rate this:
Share this comment
Cancel
Tamilan - Chennai,இந்தியா
28-ஜன-201313:00:22 IST Report Abuse
Tamilan சிறுபான்மை இனத்தவர்களின் வாக்குகளை குறி வைத்து இப்படி பேசுவது தவறு.............. குற்றம் இருப்பின் நிருபியுங்கள்............... அதை விடுத்தது இவ்வாறு கூறுவது தவறு.......... 6 ஆண்டு காலம் ஆட்சி செய்தவர்களை இப்படி பேசுவது கூடாது............ வாஜ்பாய் போன்ற தேசபற்று மிக்கவர்கள் உள்ள இயக்கம்...............
Rate this:
Share this comment
Cancel
Senthil - Bangalore,இந்தியா
28-ஜன-201311:50:23 IST Report Abuse
Senthil கொஞ்ச நாள் முன்னாடி எங்க ஊர் கோவில்ல, சில பேரு யோகா மற்றும் சில உடற் பயிற்சிகளை சொல்லி கொடுத்தார்கள். அவர்கள் நம்ம நாட்டை பற்றியும், கலாச்சாரத்தை பற்றியும் பெருமையாக பேசுவார்கள். ஆனால் அவர்கள் மற்ற மதத்தை பற்றி ஒரு வார்த்தையும் பேசவில்லை( முற்றிலும் உண்மை ). முதலில் நான் கவர்மெண்ட் தான் அனுப்பி தேசப் பற்றை வளர்கிறார்கள் என்று எண்ணினேன்( like NSS , NCC ). பின்னால் தான் தெரிந்தது அது RSS இயக்கம் என்று. யாரும் நம்பாதீர்கள், இந்த இயக்கத்தினால் தான் கொஞ்சமாவது தேசப் பற்று மக்களிடம் இருக்கிறது. பொய் புரளியை நம்ப வேண்டாம். எனக்கு VHP , சிவசேனை பற்றி தெரியாது. தெரிந்ததால் சொல்கிறேன். இது ஒரு நல்ல இயக்கம். இந்த காலக் கட்டத்தில் தேசப் பக்தி பலரிடம் குறைந்து விட்டது. இவர்களால் தான் கொஞ்சம் கொஞ்சம் உயிரோடு இருக்கிறது. வாஜ்பாய் பேசும் போதெல்லாம் மனதார 'ஹமாரா பாரத்' நு பெருமையா சொல்ற மாதிரி யாருக்காவது சொல்ல்றங்கள இப்போ இருக்கிற காங்கிரஸ் காரர்கள்
Rate this:
Share this comment
Cancel
mangai - Chennai,இந்தியா
28-ஜன-201311:02:50 IST Report Abuse
mangai பேசாம இந்தியாவை முஸ்லிம் நாடாக அறிவிசிருங்க.. ஓட்டு அப்படியே அள்ளிக்கலாம்..
Rate this:
Share this comment
Cancel
செந்தமிழ் கார்த்திக் - NamakkaL to ChennaI,இந்தியா
28-ஜன-201310:45:21 IST Report Abuse
செந்தமிழ் கார்த்திக் ஒவ்வொருவரும் தங்கள் பிள்ளைகளை RSS ல் சேர்த்து குறைந்த பட்சம் 2 வருடமாவது பயிற்சி எடுக்க சொல்ல வேண்டும்... 2 வருடத்திற்கு பிறகு உங்கள் பிள்ளைகள் உங்களுக்கே அறிவுரை சொல்லும் அளவுக்கு மனதிலும் சரி , உடல் அளவிலும் சரி உயர்ந்து இருப்பார் ... RSS பயிற்சியின் போது அவர்கள் என்ன சொல்லி தருகிறார்கள் என்று முதலில் தெரிந்து கொண்டு பிறகு அவர்களை தூற்ற வேண்டும் .. கண்மூடி தனமாக சேற்றை வாரி இறைக்க கூடாது ... நான் 2010, 2011 ஆண்டுகளில் டெல்லியில் RSS பயிற்சி எடுத்து இதோ இந்த பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் கிடம் தான் ஆசி பெற்றோம் .. இவரை நாங்கள் எப்போதும் சிங்கம் என்று தான் அழைப்போம் ... இவரது பேச்சில் அவ்வளவு தெளிவு இருக்கும்.. RSS ல் இருப்பவர்கள் ஒவ்வொருவரும் நாட்டுக்காக எப்போதும் உயிரை கொடுக்கும் அளவுக்கு தேச பற்று கொண்டவர்கள் , நாட்டை சீர்குலைக்க முயலுபவர்களை பார்த்து கொண்டு சும்மா கை கட்டி பார்த்து கொண்டு இருக்க யாரும் முட்டாள்கள் அல்ல ..நாட்டிற்கு வெளியே பாதுக்காப்பு ராணுவம் என்றால் நாட்டில் உள்ளே பாதுகாப்பு Rss தான். நாங்கள் முஸ்லீம் , கிருஸ்தவர்களுக்கு எதிரானவர்கள் அல்லவே அல்ல ... அவர்களும் எங்கள் சகோதரர்களே.. இவர்களை போன்று மனித நேயம் கொண்டவர்களும் யாரும் அல்ல ... Rss சை தூற்றினால் அவன் உண்மையை தெரியாமல் உளறுகிறான என்று தான் அர்த்தம் .. நம்ப வில்லை என்றால் நீங்களே நேரிடையாக சென்று பாருங்கள் அப்போது தெரியும்.. :)
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை