நாக்பூர்:""வேலை பார்க்க வேண்டும் என்ற மனநிலை மாறிவிட்டது. உழைக்காமல், கிராமப்புற வேலை உறுதியளிப்பு திட்ட உதவி தொகையை பெற பலரும் விரும்புகின்றனர்,'' என, மத்திய விவசாய துறை அமைச்சர், சரத் பவார் கூறினார்.
அவர் கூறியதாவது:கிராமப்புற வேலை உறுதியளிப்பு திட்டம், முதலில், மகாராஷ்டிராவில் தான் அறிமுகமானது. பின் அதை, மத்திய அரசு ஏற்று கொண்டது. அதற்குபின் அந்த திட்டம், வேலை பார்க்க வேண்டும் என்ற, மனநிலையை தொழிலாளர்கள் மத்தியில் மாற்றிவிட்டது.இந்த திட்டம், 1972ல் அறிமுகப்படுத்தபட்ட போது, 45 லட்சம் பேர் பயன் அடைந்தனர். இப்போது, 1.5 லட்சம் பேர் தான், பயன் பெறுகின்றனர். வேலையே பார்க்காமல், ஏராளமானோர் இந்த திட்டத்தின் பலன்களை அடைகின்றனர். உழைக்காமல், வேலை உறுதியளிப்பு திட்ட உதவி தொகையை பெற, பலரும் விரும்புகின்றனர்.நாட்டின் மக்கள் தொகையில், 67 சதவீதம் பேர், ஏழைகளாக இருக்கும் போது, மானிய விலையில் உணவு தானியங்கள் வழங்குவது அவசியமே. நீண்ட காலத்தில் இந்த திட்டம் அதிக பயனளிக்கும்.
இந்து தீவிரவாதம் குறித்து, மத்திய உள்துறை அமைச்சர், சுஷில்குமார் ஷிண்டே கூறியது பற்றி எனக்கு தெரியாது. உள்துறை அமைச்சராக அவர் இருப்பதால், அவருக்கு பல உளவு தகவல்கள் கிடைத்திருக்கும். அதன் அடிப்படையில் அவர் அந்த தகவலை கூறியிருக்கலாம்.இவ்வாறு, சரத் பவார் கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
மராத்தியர்கள் கடுமையான உழைப்பாளிகளாக இருந்திருந்தால் இன்று மும்பையைக் காக்க சிவசேனா இயக்கம் நடத்த வேண்டியிருக்காது. வேற்று மாநிலத்தவர் அங்கு பெரும்பான்மை முதலாளிகளாகவும், தொழிலாளிகளாகவும் இருக்கும் நிலை வந்திருக்காது. அவர்களை முழு சோம்பேறிகளாகவும் கல்லாதவர்கலாகவும் ஆக்கி வைதிருப்பது உங்க கட்சி சாதனைதான்..அருரங். ...... இங்கு தமிழகத்தில் மட்டும் என்னவாம். அதே நிலைதான் இங்கும் கூடிய விரைவில்.
சரத்து உழைக்கம மக்கள் வாழ தானே நீங்க இலவசத்த வாரி வழங்கி தெருவோர டாஸ்மாக் திறந்து உல்லாச வாழ்க்கைக்கு வழி பண்ணி வச்சுக்கிட்டு இப்போ புலம்பினா யார் கேட்பாங்க. அரசியல் வாதி மட்டும் தான் அடிச்சு மாத்தலாம என எல்லாவனும் ஆளுக்கு முந்தி அடிச்சு மாத்துற வேலை செய்யும் போது உழைபாவது மண்ணாங்கட்டி. இங்க ஒரு இலவசத்த முன் மொழிந்த மன்னன் இபோ ஒய்வு எடுத்து கிட்டு இருக்காரு. நீங்க எப்போ ?

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.