இணையதளத்தில் வெளியானது விஸ்வரூபம்

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

சென்னை:பல்வேறு சர்ச்சைகளுக்கிடையே பிற மாநிலங்கள், வெளிநாடுகளில் வெளியான, "விஸ்வரூபம்' படத்தை, இணையதளம் மற்றும், திருட்டு வி.சி.டி.,யிலும் வெளிவந்துள்ளதாக புகாரை அடுத்து, போலீசார் பல இடங்களில் சோதனை நடத்தினர்.தனியார் நிறுவனம் மூலமும், தடுப்பு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

நடிகர் கமல் நடித்து, இயக்கி வெளிவந்துள்ள படம், "விஸ்வரூபம்'. இந்த படத்தில், இஸ்லாமியர்களின் மனதை புண்படுத்தும் வகையில், காட்சிகள் உள்ளதாக கூறி, இஸ்லாமிய அமைப்புகள், படத்தை வெளியிட எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. தமிழக அரசும், ஐகோர்ட்டும் படத்தை வெளியிட தடை விதித்துள்ளன.இந்நிலையில் இந்தப்படம், வெளிநாடுகளிலும், தமிழகம், புதுச்சேரி தவிர, வெளிமாநிலங்களிலும் வெளியாகி உள்ளது. அங்கிருந்து திருட்டுத்தனமாக இந்தப் படத்தை, திருட்டு வி.சி.டி.,யாக தயாரித்து, மர்மக் கும்பல், இணையதளம் வாயிலாகவும், வி.சி.டி.,யாகவும் புழக்கத்தில் விட முயற்சித்தது.

இணையதளங்களில், படத்தின் துவக்கம் முதல், 40 நிமிட காட்சிகள் வெளியானது. இதைத் தடுத்து நிறுத்த வேண்டுமென, "சைபர்' கிரைமில், ராஜ்கமல் நிறுவனம் புகார் செய்துள்ளது. "சைபர் கிரைம்' போலீசார், தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.வீடியோ தடுப்பு பிரிவினர், சென்னை பர்மா பஜார், புதுப்பேட்டை நகரின் பல்வேறு பகுதிகள் மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் உள்ள வீடியோ கடைகளிலும் சோதனை நடத்தி வருகின்றனர். திருட்டு வி.சி.டி., ஏதும் சிக்கவில்லை என்றும், வேட்டை தொடரும் என, போலீசார் தெரிவித்து உள்ளனர்.
இதுதவிர, திருட்டு வி.சி.டி.,யைக் கட்டுப்படுத்த, காபிரைட் மீடியா நிறுவனமும் ஈடுபட்டு வருகிறது. "85 இணையதளங்கள் மூலம், படத்தை வெளியிடும் முயற்சியைத் தடுத்து நிறுத்தியுள்ளோம். சைபர் கிரைம் போலீசிலும் புகார் செய்துள்ளோம்,' என, இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.


கோர்ட்டில் இன்று தீர்ப்பு:

"விஸ்வரூபம்' படத்திற்கு தமிழக அரசு தடை விதித்ததை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில், ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில், மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி வெங்கட்ராமன், 28ம் தேதிக்கு (இன்று) ஒத்தி வைத்தார்.இதற்கிடையில், நேற்று முன்தினம், வடபழனியில் உள்ள ஒரு ஸ்டூடியோவில், "விஸ்வரூபம்' திரைப்படம் நீதிபதி வெங்கட்ராமனுக்கு திரையிட்டு காட்டப்பட்டது. இந்த வழக்கு, இன்று விசாரணைக்கு வரும் நிலையில், படத்திற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.இந்நிலையில், ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய, மத்திய அமைச்சர் வாசன், ""விஸ்வரூபம் திரைப்படம் சம்பந்தப்பட்ட பிரச்னை குறித்து, இஸ்லாமிய அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமுகமாக தீர்க்க வேண்டும்'' என தெரிவித்து உள்ளார்.

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (144)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mohandhas - singapore,சிங்கப்பூர்
29-ஜன-201305:54:57 IST Report Abuse
Mohandhas தமிழ்நாடு செய்த தடையால் சிங்கப்பூர், மலேசியாவிலும் இப்படத்தை திரையிடவில்லை..என்னா ஒரு தமிழனின் சாதனை? கேரளா, கர்நாடக, ஆந்திராவில் எல்லாம் இதற்க்கு எதிர்ப்பு இல்லையே..அங்கெல்லாம் உண்மையான மனிதர்கள் மட்டும் தான் வாழ்கிறார்கள் போலும்...
Rate this:
Share this comment
Cancel
vasanthakumar - chennai,இந்தியா
28-ஜன-201316:03:23 IST Report Abuse
vasanthakumar முஸ்லிம் அமைப்புகளுக்கு படத்த போட்டு காமிச்சதுதான் கமல் பண்ண தப்பு ....
Rate this:
Share this comment
Cancel
Vishnu Karthik - singapore,சிங்கப்பூர்
28-ஜன-201316:02:27 IST Report Abuse
Vishnu Karthik மும்பைல ரயில்வே நிலையத்துல குருவி சுடுறமாதிரி 100 கணக்கான பேர சுட்டது யாரு ???? அப்ப எதுனா கண்டம் சொன்னீங்களா...?? ஜிஹாத்து சொல்லி கொண்டாடுவீங்க....??? இப்ப அத பத்தி சினிமாவுல சொன்னா வலிக்குதோ....???
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
28-ஜன-201315:49:50 IST Report Abuse
Nallavan Nallavan \\\\ "சைபர் கிரைம்' போலீசார், தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.வீடியோ தடுப்பு பிரிவினர், சென்னை பர்மா பஜார், புதுப்பேட்டை நகரின் பல்வேறு பகுதிகள் மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் உள்ள வீடியோ கடைகளிலும் சோதனை நடத்தி வருகின்றனர். திருட்டு வி.சி.டி., ஏதும் சிக்கவில்லை என்றும், வேட்டை தொடரும் என, போலீசார் தெரிவித்து உள்ளனர். //// எல்லாரும் திருட்டு விசிடி-யைப் பிடிக்க அலைஞ்சா சட்டம் ஒழுங்கை யார் பாக்குறது ????
Rate this:
Share this comment
Cancel
Kperiyasamy Kalimuthu - Sivagangai(karaikudi),இந்தியா
28-ஜன-201315:40:16 IST Report Abuse
Kperiyasamy Kalimuthu காதல் நாயகன் கமல் தமிழகத்தின் செல்ல குடிகாரன் களத்தூர் கண்ணம்மாவின் செல்லபுதல்வன் காதல் நாயகனாய் இவன் கதை கவிதை இசை பாடல்கள் எண்ணற்ற கலைகளின் சங்கமம் சமூத்துக்காக பிரிநூல் துறந்த பெரியார் பரமனின் திருவடி அவதரித்த குடிகாரன் பரம்பரை குடிகாரனில்லை இவன் ஆம் இவன் பரமகுடிகாரன் பகுத்தறிவின் பங்காளன் சாதிகள் இவனுக்கில்லை சாதனைகள் ஒன்றே நோக்கம் மதங்கள் இவனுக்கில்லை மார்க்கம் ஒன்றே இவனின் நோக்கம் ஒரு தமிழனை வாழ்த்த மனமில்லாவிடினும் வாழ விடுங்கையா கா பெரியசாமி காரைக்குடி
Rate this:
Share this comment
Cancel
k- sathis kumar - bangalore,இந்தியா
28-ஜன-201315:23:22 IST Report Abuse
k- sathis kumar இந்த விசயத்தில் ஏன் தாத்தா ஒன்னும் சொல்லாமே இருக்கார்?
Rate this:
Share this comment
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
29-ஜன-201301:48:23 IST Report Abuse
Nallavan Nallavanதிரைத்துறையை ஒரு காலத்தில் காக்கா கூட்டம் என்றார் அப்போது திரைத்துறையினர் முதல்வராக இருந்த ஜே-யை (1991-96) ஆகா.... ஓகோ..... என்று புகழ்ந்து வந்தனர். அதைக் கண்டு வயிறேரிந்துதான் இப்படிச் சொன்னார் அந்தத் துறையைத் தற்போது பகைத்துக் கொள்ள முடியல சிறுபான்மையினர் ஓட்டும் வேண்டியிருக்கே ... அதான் இந்த மவுனம் .... பிரச்னை ஒரு மாதிரி சால்வ் ஆகும்போது வெண்டைக்காயை விளக்கெண்ணையில் தோய்த்து எடுத்த மாதிரி ஒரு வழ வழா கொழ கொழா அறிக்கையை விடுவார் பாருங்க. .... நீங்களும் திருப்தி அடைவீங்க ........
Rate this:
Share this comment
Cancel
Dr. Ganesh - Bangalore,இந்தியா
28-ஜன-201315:16:19 IST Report Abuse
Dr. Ganesh Certainly this would definitely hurt Mr Kamal Hasan. He has given his 100 percent always for giving the best to Audience and I am sure that viswaroopam would be an another mile stone in his journey. What is going on right now (staying the release of Viswaroopam) is very cheap. Looking forward to watch the movie in the theatre. All the best Mr. Kamal.
Rate this:
Share this comment
Cancel
சத்தி - Bangalore,இந்தியா
28-ஜன-201315:14:58 IST Report Abuse
சத்தி முதல்வர் இதுவரை வாய் திறக்கவில்லையே, ஏன் ?
Rate this:
Share this comment
Cancel
kumaresan.m - hochimin ,வியட்னாம்
28-ஜன-201314:55:14 IST Report Abuse
kumaresan.m " விரைவில் இவரும் ஒரு கட்சி ஆரம்பிக்க வேண்டியதுதான் .இல்லையென்றல் இப்படித்தான் நடக்கும் " தமிழ் நாட்டை ஆட்சி செய்தவர்களும் ,ஆள்பவர்களும் மற்றும் ஆளபோவர்களும் ,சினிமா துறையில் இருந்து வந்தவர்கள் தானே ,ஆதனால் தான் தமிழன் உழைப்பை மறந்து இலவசத்தையும் மற்றும் டாஸ்மாக் நம்பி வாழ்ந்து கொண்டு இருக்கிறான்
Rate this:
Share this comment
Cancel
saravanan - Dares Salaam,தான்சானியா
28-ஜன-201314:42:21 IST Report Abuse
saravanan தியேட்டரில் சென்று படம் பார்த்த இஸ்லாமிய நண்பர்கள் கூட படத்தில் குறை இருப்பதாக சொல்லவில்லை..... திருட்டு விசிடியில் படம்+பணம் பார்க்கும் கும்பல்தான் குறை சொல்லிக் கொண்டு அலைகிறது....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்