Advertisement
ஊஞ்சல் மூலம் மின்சாரம் தயாரிக்கும் கருவி: அரசு பள்ளி ஆசிரியர் அசத்தல்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : ஜனவரி 28,2013,00:12 IST

தியாகதுருகம்:சிறுவர்கள் விளையாடும் ஊஞ்சலில் இருந்து, மின்சாரம் தயாரிக்கும் கருவியை தியாகதுருகம் அருகே உள்ள, தொடக்கப்பள்ளி ஆசிரியர் உருவாக்கியுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம், தியாகதுருகம் ஒன்றியம் பல்லகச்சேரி உயர்நிலைப்பள்ளியில், பட்டதாரி ஆசிரியர் வேலு, 38 பணிபுகிறார். அறிவியல் துறையில் ஆர்வம் உள்ள இவர், சிறுவர்கள் விளையாடும் ஊஞ்சலில் இருந்து, மின்சாரம் தயாரிக்கும் கருவியை உருவாக்கியுள்ளார். இதற்கான, மினியேச்சர் ஊஞ்சலை செய்து, அதன் அச்சுடன் சிறிய ஜெனரேட்டரை இணைத்துள்ளார்.ஊஞ்சலை ஆட்டும்போது, அதன்மூலம் கிடைக்கும் விசை மூலம், ஜெனரேட்டர் சுழன்று மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது. இக்கருவியில் இருந்து, 9 வாட் மின்சாரம் உற்பத்தி செய்து, இரண்டு சிறிய பல்புகளை எரிய வைத்து, பரிசோதனை மூலம் செய்து காண்பித்தார். குடியரசு தினவிழாவில் இக்கருவியை காட்சிக்கு வைத்திருந்தார். மாவட்ட கவுன்சிலர் அய்யப்பா, தலைமை ஆசிரியர் ஜெயச்சந்திரன் முன்னிலையில், மாணவர்களுக்கு செயல்விளக்கம் செய்து காண்பித்தார்.

இதுகுறித்து, ஆசிரியர் வேலு கூறியதாவது:விஞ்ஞானி மைக்கேல் பாரடே கண்டுபிடித்த, மின்தூண்டல் முறையில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் தற்போது, அதிக அளவில் உபயோகத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக நிலக்கரி, அணு சக்தி, காற்றாலை உள்ளிட்டவைகளை கொண்டு தயாரிக்கப்படுகிறது.இன்றைய நிலையில், எரிபொருள் குறைந்து வருவதால், சோலார் முறையில் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முயற்சிகள், மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எரிபொருளை பயன்படுத்தாமல், பலவகையிலும் வீணாகும் ஆற்றலை, பயனுள்ள வகையில் பயன்படுத்தவேண்டும், என்ற எண்ணம் தோன்றியதால், சிறுவர்கள் விளையாடும் ஊஞ்சலில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் கருவியை தயாரித்தேன். இதில், சிறிதாக சோதனை முறையில் செய்துள்ளேன்.இதை பெரிய அளவில் நடைமுறைப்படுத்தி, விளையாட்டு மைதானங்களில், பொழுதுபோக்கு இடங்களில் அமைக்கப்படும் ஊஞ்சல்களில், இக்கருவியை பொருத்தினால் அதன் மூலம், மின்உற்பத்தி செய்து, குறைந்தபட்சம் சில மின்விளக்குகளையாவது எரியவைக்க முடியும்.இதனால், மின்சாரத்தை சிக்கனம் செய்யமுடியும். இக்கருவியை மேலும் மேம்படுத்தி, பெரிய அளவில் செயல்படுத்த திட்டமிட்டுள்ளேன்.இவ்வாறு, ஆசிரியர் வேலு கூறினார்.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (9)
Chandrasekaran Subramaniam - Tiruchirapalli (Trichy),இந்தியா
31-ஜன-201310:58:59 IST Report Abuse
Chandrasekaran Subramaniam இப்படி தயாராகும் மின்சாரம் ஊஞ்சலை ஆட்ட பயன்படுமா?
Rate this:
1 members
0 members
0 members
Share this comment
Parivel - Blore,இந்தியா
31-ஜன-201318:00:42 IST Report Abuse
Parivelமுதலில் ஆர்வத்தை பாராட்டவேண்டும். இது போன்ற சிறு சிறு ஆராய்சிகள் தான் பெரிய வெற்றிக்கு படிக்கட்டு....
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Madukkur S M Sajahan - Madukkur,இந்தியா
28-ஜன-201311:10:44 IST Report Abuse
Madukkur S M Sajahan ரோடுகளில் தற்போது வைக்கப்பட்டு இருக்கும் வேகத்தடைகளை( speed breaker) பயன்படுத்தியும் மின்சாரம் தயாரிக்கலாம். வேகத்தடையின் மீது வாகனங்கள் ஏறி இறங்கும் போது வாகனத்தின் எடையினால் வேகத்தடையின் மீது மிகுந்த அழுத்தம் ஏற்ப்படும்.அந்த அழுத்தத்தை டர்பின் மூலம் இணைத்து மின்சாரம் தயாரிக்கலாம்
Rate this:
0 members
0 members
19 members
Share this comment
Madukkur S M Sajahan - Madukkur,இந்தியா
28-ஜன-201310:55:28 IST Report Abuse
Madukkur S M Sajahan ஊஞ்சல் மூலம் மின்சாரம் தயாரிப்பு,பள்ளி ஆசிரியர் கண்டுபிடிப்பு-செய்தி: இதே போல லாரி மற்றும் பஸ் போன்ற கனரக வாகனங்கள் ரோட்டில் ஓடும் போது அதன் முன் பகுதியில் பலமாக காற்று வீசும்.அந்த காற்றின் அழுத்தத்தை பயன்படுத்தி சிறிய காற்றாடிகளை சுழல விட்டு அதனை மின் மோட்டாரில்/ஜெனரட்டரில் இணைத்து மின்சாரம் தயாரிக்கலாம்.அதனை பேட்டரியில் சேமித்து பயன்படுத்தலாம்
Rate this:
0 members
1 members
17 members
Share this comment
Shridhar Ragav - chennai,இந்தியா
28-ஜன-201310:47:43 IST Report Abuse
Shridhar Ragav சிறந்த முயற்சி பாராட்டுக்கள் ஒரு கிராமத்திற்கு தேவையான மின்சாரம் தயாரிக்க முடிந்தாலே போதும் ..அவர் சொல்வதுபோல் சிறுவர்கள் விளையாடுவதற்கான ஊஞ்சலை அமைத்து கிராமத்திற்கு தேவையான மின்சாரத்தை கொடுக்கலாம் முயற்சி திருவினையாக்கும் முயன்று பார்ப்போமே
Rate this:
1 members
0 members
11 members
Share this comment
james arul rayan - chennai ,இந்தியா
29-ஜன-201307:13:29 IST Report Abuse
james arul rayanஇரவு முழுவதும் யார் உட்கார்ந்து ஊஞ்சல் ஆடுவது?...
Rate this:
2 members
0 members
8 members
Share this comment
Ravindra Kumar - Salem,இந்தியா
28-ஜன-201310:15:03 IST Report Abuse
Ravindra Kumar வாழ்த்துகள் வேலு ..........
Rate this:
0 members
0 members
7 members
Share this comment
M.T.Moorthi - Yangon,மியான்மார்
28-ஜன-201308:37:20 IST Report Abuse
M.T.Moorthi முயற்சிக்கு வாழ்த்துக்கள். இதுபோல மின்கருவியை ஏற்கனவே , பல ஆண்டுகளுக்கு முன்பு , செய்து காட்டி உள்ளார்கள் . இதைவிட நடைமுறையில் பயனளிக்கும் மின்கருவியை முயற்சி செய்ய வேண்டுகிறேன் . நன்றி,
Rate this:
0 members
1 members
12 members
Share this comment
aymaa midas=vison2023 - kodanaatu, koththadimai kuppam, vilaiyilaa kaiyuttu ,நிய்யூ
28-ஜன-201304:42:58 IST Report Abuse
aymaa midas=vison2023 வாழ்த்துகள்...............,
Rate this:
0 members
0 members
8 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.