Turmeric can fight cancer | புற்றுநோயை கட்டுப்படுத்தும் மஞ்சள்: அமெரிக்க ஆய்வில் தகவல்| Dinamalar

புற்றுநோயை கட்டுப்படுத்தும் மஞ்சள்: அமெரிக்க ஆய்வில் தகவல்

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement
 புற்றுநோயை கட்டுப்படுத்தும் மஞ்சள்: அமெரிக்க ஆய்வில் தகவல்,Turmeric can fight cancer

ஹூஸ்டன் : மஞ்சளை, அன்றாடம் நம் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் புற்றுநோய், நீரிழிவு நோய் மற்றும் தோல் நோய்களிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ளலாம்' என, அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவழி மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.


இந்தியர் :

அமெரிக்காவின், ஹூஸ்டனில் உள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவ மையத்தைச் சேர்ந்த மருத்துவர் சரஸ்வதி சுகுமார் கூறியதாவது:இந்தியாவில், பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, உணவில் மஞ்சள் சேர்க்கப்பட்டு வருகிறது. மஞ்சளை உணவில் சேர்த்துக் கொள்வது தொடர்பாக, 20 ஆண்டுகளாக பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டு உள்ளன.இதில், மூட்டுவலியை குறைப்பதில், மஞ்சள் பெரும் பங்கு வகிப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அதுபோல், புற்றுநோய், நீரிழிவு நோய், சரும நோய் போன்றவற்றிலிருந்தும், மனிதர்களை காப்பதில் மஞ்சள் முக்கியப் பங்கு வகிக்கிறது.புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் கதிர்வீச்சு சிகிச்சையால், சருமத்தில் ஏற்படும் மாற்றங்களை மஞ்சள் சரி செய்து விடுகிறது.


மாத்திரை வடிவில்:

மஞ்சளை அப்படியே சாப்பிடும் வகையில் நம் உடல் அமைப்பு இல்லை என்பதால், இப்போது, மாத்திரை வடிவிலும் மஞ்சள் கிடைக்கிறது. நாம் சமைக்கும் உணவுடன் மஞ்சளையும் சேர்த்துவிட்டால், அது நல்லதொரு பலனை அளிக்கும். மஞ்சளை சேர்த்துக் கொள்வதால் கூடுதலான ருசி கிடைக்காது; மாறாக, உணவுப் பொருளுக்கு நிறத்தை அளிக்கும். மஞ்சளின் முழு பலனையும் பெற, சமையல் எண்ணெயை சூடு படுத்தி, அதில் மஞ்சள் தூளைக் கலந்து உணவுப் பொருளுடன் சேர்க்கலாம். இவ்வாறு, மருத்துவர் சரஸ்வதி சுகுமார் கூறினார்.

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramasami Venkatesan - Chennai - now in Brisbane - Aus,இந்தியா
28-ஜன-201306:40:48 IST Report Abuse
Ramasami Venkatesan நாம் என்னவென்றால் வாழையடி வாழையாக உபயோகித்த மஞ்சளை விட்டு க்ரீம்களுக்கு தாவிவிட்டோம். க்ரீம் உபயோகித்தவர்கள் இன்று மஞ்சளை ஏற்றுக்கொள்கிறார்கள். இனி மஞ்சளை க்ரீம் வடிவத்தில் நாமே அதிக விலை கொடுத்து வால் மார்ட் மூலம் வாங்குவோம். மஞ்சள் தேய்த்து குளிப்பது ஸ்ரமம் க்ரீம் சுலபம். என்ன உலகமடா.
Rate this:
Share this comment
Cancel
kooli - saakkadai,இத்தாலி
28-ஜன-201306:04:59 IST Report Abuse
kooli Johns Hopkins ஹூஸ்டனில் இல்லை..பால்டிமோரில் உள்ளது..மேரிலாந்து ஸ்டேட்-ல் உள்ளது.
Rate this:
Share this comment
Cancel
Alagarsamy Ramasamy - manama,பஹ்ரைன்
28-ஜன-201301:12:03 IST Report Abuse
Alagarsamy Ramasamy நம்ம ஊர் சித்தர்கள் எப்போவோ கண்டுபுடிச்சு எழுதி வச்சுட்டாங்க. பழைய கண்டுபிடிப்பா புதுசா விளம்பரப்படுதுராங்கப்பா -அழகர், பஹ்ரைன்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.