Ponds destroyed in Kovai | வளமும் இல்லை; குளமும் இல்லை: சுவடு தெரியாமல் அழியும் நீராதாரங்கள் | Dinamalar
பதிவு செய்த நாள் :
கருத்துகள் (8)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

கோவை :வறட்சியால் ஏற்கனவே காய்ந்து போயுள்ள கோவை குளங்கள், வளர்ச்சித் திட்டங்களின் பெயரில் சுவடு தெரியாமல் சிறிது, சிறிதாக அழிந்து வருகின்றன. உக்கடம், வாலாங்குளம், அம்மன்குளம் வரிசையில், குறிச்சி குளமும் அடுத்த இரையாகி வருகிறது.

பருவமழை பொய்த்துப் போன காலங்களிலும், கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்கு வளம் கொழித்து வந்தது நொய்யல் ஆறு. இந்த ஆறுடன் தொடர்புப்படுத்தி, 173 கி.மீ., தூரத்தில் 32 குளங்கள் ஒன்றோடு இணைக்கும் விதத்தில் அமைக்கப்பட்டிருந்தன.இதில், கோவை நகர பகுதியில் முக்கியமாக ஒன்பது குளங்கள் இருந்தன. அவற்றில், அம்மன்குளம் இந்த இடமே தெரியாமல், குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பு பகுதியாக மாறியுள்ளது. எஞ்சியிருப்பவை, நரசாம்பதி, கிருஷ்ணாம்பதி, செல்வாம்பதி, முத்தணம்குளம், செல்வ சிந்தாமணி, உக்கடம் பெரிய குளம், வாலாங்குளம், சிங்காநல்லூர் குளங்கள் மட்டுமே.இவற்றில் மாநகரின் வளர்ச்சித் திட்டங்களில், "பலி கடா'வாகி, உக்கடம் பெரிய குளம், வாலாங்குளம் ஆகியவை பரப்பையும், வனப்பையும் இழந்தன. உக்கடம் பஸ் ஸ்டாண்ட், போலீஸ் ஸ்டேஷன், மின் நிலையம், அரசு போக்குவரத்துக் கழக பணிமனை போன்றவை, இந்த குளங்களுக்குள்

அமைந்துள்ளன. இவை தவிர, புதிய ரோடுகள், ரயில்வே பாலங்கள் என பல்வேறு ஆக்கிரமிப்புகளால், இந்த இரண்டு குளங்களும் பொலிவை இழந்தன. நிலத்தையும், நீர்பரப்பையும் இழந்த இந்த இரண்டு குளங்களிலும் தண்ணீரும் பல காரணங்களால் கடுமையாக மாசுபட்டு வருகிறது. கழிவுநீர், மருத்துவ கழிவு, டீசல் மற்றும் ஆயில் கழிவு என திடக்கழிவும், திரவக்கழிவுமாக இந்த குளங்கள் பாழடைந்து வருகின்றன.

பொதுப்பணித்துறை கைவசம் இருந்த இந்த குளங்கள் 2009ம் ஆண்டு மாநகராட்சிக்கு கைமாறப்பட்டன. 90 ஆண்டுகளுக்கு குத்தகை அடிப்படையில் ஆண்டுக்கு தலா ரூ. 100 வாடகைக்கு எட்டு குளங்களையும் மாநகராட்சி ஏற்றுக் கொண்டது. பொதுப்பணித் துறையிடம் இருந்து, மாநகராட்சி பொறுப்பில் குளங்கள்வந்தபோது, விடிவுகாலம் பிறக்கும் என,
எதிர்பார்க்கப்பட்டது."ஜவகர்லால் நேரு தேசிய நகர்புற புனரமைப்பு திட்டத்தில்' நிதி இருந்தும், குளங்களை சீரமைக்கும் பணிகளை மாநகராட்சி துவங்கவில்லை. மழையின்றி குளங்கள் வறண்டு வரும் நிலையில், நீர் ஆதாரங்களை காப்பாற்ற மாவட்ட நிர்வாகமும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. "சிறுதுளி' உள்ளிட்ட அமைப்புகள் குளங்களை தூர் வார முன்வந்து, மாவட்ட நிர்வாகத்தை அணுகியும், அனுமதி

Advertisement

கிடைக்கவில்லை. அதேநேரத்தில், குளங்களை காக்க வேண்டிய மாநகராட்சியோ, இருக்கும் குளங்களையும் சுவடு தெரியாமல் மண் மூடி புதைத்துவிடுவதில் குறியாகவே இருக்கிறது. இதற்கு உதாரணம், குறிச்சி குளம். கோவையின் தெற்கு பகுதிகளை வளம் கொழிக்க செய்த இந்த குளம், இன்று வறண்டு வருகிறது. இந்த குளத்தையொட்டி சாலையின் மறுபக்கத்தில் இருந்த சிறிய குளத்தை மூடும் பணியை மாநகராட்சி கச்சிதமாக செய்து வருகிறது.கடந்த சில நாட்களாக, பஸ் ஸ்டாண்ட் அமைப்பதற்காக, குளத்தின் பெரும்பாலான பகுதி மண் கொட்டப்பட்டு, மூடப்பட்டு வருகிறது. இங்கு பஸ் ஸ்டாண்ட் அமையும்போது அருகில் உள்ள பிரதான குளத்தின் பெரும் பகுதிகளும், பல்வேறுதிட்டங்களுக்காக மூடப்படுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

வழக்கு தொடர திட்டம்:சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகையில், "கோவையில் உள்ள குளங்களை அழகுபடுத்தப் போகிறோம் என கூறி, பொதுப்பணித்துறையிடம் இருந்து குளங்களை மாநகராட்சி கைப்பற்றியது. எந்த குளங்களையும் அழகுப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. இருக்கும் குளங்களை, பாதுகாப்பாக பராமரித்தாலே போதுமானது. கோவை மாநகர் மற்றும் புறநகரில் உள்ள பல குளங்கள் இன்று கழிவுநீர் குட்டைகளாக மாறி வருகின்றன. குறிச்சி குளத்தின் ஒரு பகுதியை மூடி, பஸ் நிலையமாக மாற்றும் முயற்சி கண்டிக்கத்தக்கது. மாநகராட்சியின் நடவடிக்கைக்கு எதிராக, கோர்ட்டில் வழக்கு தொடர, நடவடிக்கை எடுத்து வருகிறோம்' என்றனர்.
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (8)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
குடியானவன்-Ryot - தண்ணீர் இல்லா தேசம் ,இந்தியா
28-ஜன-201318:49:41 IST Report Abuse
குடியானவன்-Ryot மாயன் காலேண்டர் படி குறைந்தப்பட்சம் இந்திய அழிந்திருக்கலாம், அப்படி நடந்திருந்தாலவது இந்த வெட்கமே இல்லாத கேடுகெட்ட அரசியல்வாதிகளின் செயலை பார்க்காமல் நம் கண்ணை மூடிருக்கலாம்....
Rate this:
Share this comment
Cancel
v j antony - coimbatore,இந்தியா
28-ஜன-201313:12:05 IST Report Abuse
v j antony தமிழக அரசு ஒரு பக்கம் தண்ணீர்க்காக கோர்ட் படிகளில் தினமும் ஏறி இறங்குகிறது . மறுபக்கம் இருக்கும் நீர் நிலைகளை பராமரிக்காமல் அலட்சியபடுத்துகிறது . தன்னார்வ அமைப்புகள் ஆர்வம் காட்டினாலும் தங்களின் வருமானம் பாதிக்கப்படுமோ என்று மாநகராட்சி உறுப்பினர்கள் உள்ளனர் . இனி கோர்ட்தான் நம் கோவையை காப்பாற்ற வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
christ - chennai,இந்தியா
28-ஜன-201311:59:36 IST Report Abuse
christ குளம், குட்டை, ஆறு, ஏரி என அணைத்து இயற்கை வளங்களை செல்லரிப்பது இப்படி அழித்தால் கடைசியில் மனிதன் தன் தலயில் தானா மண் அள்ளி போட்டது போல் ஆகபோகிறது
Rate this:
Share this comment
Cancel
Ashok ,India - India,இந்தியா
28-ஜன-201310:53:53 IST Report Abuse
Ashok ,India மழை இல்லாமல் மக்கள் வாடினால் வறட்சி நிவாரண நிதி,மழை வெள்ளம் வந்தால் வெள்ள நிவாரண நிதி கேட்பதற்க்காகவே நீர் நிலைகள் மூடபடுவதாக தெரிகிறது. நமது முன்னோர்கள் நமக்கு அளித்த மிகப்பெரிய சொத்து நீர் நிலைகள்.அதனை போன்ற ஒரு இயற்கையான நீர் ஆதார அமைப்பை உருவாக்க முடியாது ....அழிக்காமல் இருக்கலாம். ஒரு சிறிய குளத்தை உருவாக்க சுமார் பத்து லக்ஷம் செலவாகும்.....பல நூறு ஏக்கர் பரப்பளவில் ஏரி போன்ற அமைப்பை உருவாக எவ்வளவு கோடிகள் தேவைப்படும்??. தூர் வாரும் செலவே பல கோடிகள் கணக்கு காட்டபடுகிறது. நீர் நிலைகளை நீதி மன்றத்தின் கண்காணிப்பில் விட்டுவிடுவது நல்லது. நீர் நிலைகளை மூடி அரசு அடுக்குமாடி கட்டுவது மிகவும் மோசமான செயலாகும். மதுரை உயர் நீதி மன்றமே ஒரு கண்மாயை மூடி கட்டப்பட்டது என்றால் யாரிடம் போய் முறையிடுவது??. நீர் வழித்தடங்களை அதன் போக்கை மாற்றினால் நம் கண்களில் கண்ணீரை பார்க்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.
Rate this:
Share this comment
Cancel
ganapathy - chennai,இந்தியா
28-ஜன-201310:45:54 IST Report Abuse
ganapathy மக்கள் பிளாஸ்டிக் பை உபயோகிப்பதை நிறுத்தினாலே போதும் நீர் வளம் மேம்படும் .அரசு பிளாஸ்டிக்கு எதிராக கடுமையான சட்டம் கொண்டு வரவேண்டும்
Rate this:
Share this comment
Cancel
anbu - coimbatore,ஐஸ்லாந்து
28-ஜன-201310:31:10 IST Report Abuse
anbu குறிச்சி வளத்தை கெடுக்க வேண்டாம். தயவு செய்து பஸ் நிலையத்தை மாற்றியமைக்க வேண்டும். இதனால் பெரிய குளமும் மாசுபட வாய்ப்பு உள்ளது. இப்படிக்கு குறிச்சி பொதுமக்கள் சார்பாக - அன்பழகன்
Rate this:
Share this comment
Cancel
pithan - Bengaluru,இந்தியா
28-ஜன-201309:04:48 IST Report Abuse
pithan எனக்கு தெரிந்து கடந்த 10 வருடங்களாக இந்த குட்டி குறிச்சி குளத்தில் சுத்தமான நீர் இருந்து அதை மக்கள் use செய்தோ பார்த்ததில்லை. அதை அந்த பகுதி மக்கள் காலை கடமைகளை கழிக்க வே உபயோக படுத்துகின்றனர். இப்போது இந்த இடத்தை மண் போட்டு மூடினால் அடுத்தது அவர்கள் குறிச்சி பெரிய குளத்தை உபயோக படுத்துவர். அதேபோல் குறிச்சி குளத்தை தூர்வார சிறு துளி அமைப்பு முவந்ததும் அதை கிடப்பில் போட்டது 100% உண்மை. மேலும் குறிச்சி குளம் அருகே இருப்பது மிகவும் சிறிய சாலை அதில் இருபுறமும் மதில் சுவர் கிடையாது அனால் நம்ம தனியார் பொள்ளாச்சி பேருந்து ஓட்டுனர்கள் செய்யும் அக்குருமம் இருக்கே சொல்லி மாளாது. எனக்கு தெரிந்து குறிச்சி குளத்தை இரு சார்பினர் மிகவும் நன்றாக உபயோக படுத்துகின்றனர் ஒன்று மீன் பிடிப்பவர்கள் மற்றொன்று அரசியல் வாதிகள். இருவருமே குட்டையை கலைத்து மீன் பிடிப்பதில் வல்லவர்கள்.
Rate this:
Share this comment
Cancel
Raj - Chennai,இந்தியா
28-ஜன-201308:22:49 IST Report Abuse
Raj இது கோவையில் மட்டுமில்லை, இந்தியா முழுவதிலும் நடக்கிறது முக்கிய காரணம் மூளை மற்றும் இதயமில்லா அரசியல் வியாதிகள் மற்றும் அதிகாரிகள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.