திருவண்ணாமலை: அ.தி.மு.க.,வை தாக்கி பேசியதால், தி.மு.க., பொதுக்கூட்டத்தில் கல்வீச்சு நடந்தது.
செய்யாறு நகர தி.மு.க., சார்பில், வீர வணக்க நாள் பொதுக்கூட்டம், நேற்று முன்தினம் தலைமை செயற்குழு உறுப்பினர் அன்பழகன் தலைமையில் நடந்தது.
வக்கீல் சந்திரன், நகர செயலாளர் செல்வபாண்டியன் உள்பட பலர் பங்கேற்றனர். பொதுக்கூட்டத்தில் தி.மு.க., வினர், அ.தி.மு.க.,வை தாக்கி பேசினர். இதனால், சிலர் மேடையை நோக்கி கற்களை வீசினர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்த டி.எஸ்.பி., பாண்டியராஜன், இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீஸார் அங்கு சென்று, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.