புதுடில்லி: காவிரி தண்ணீர் தர மறுத்து வரும் கர்நாடகா அரசுக்கு ஆதரவாக சுப்ரீம் கோர்ட் கருத்து கூறியிருப்பது இந்த வழக்கில திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் தமிழகத்திற்கு பாதகமான தீர்ப்பு வந்து விடுமோ என்று தமிழக டெல்டா விவசாயிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
காவிரி கண்காணிப்பு குழு உத்தரவின் படி தமிழகத்திற்கு கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விட மறுத்து வருகிறது. இது தொடர்பாக தமிழக அரசு தரப்பில் அவமதிப்பு , உடனடி தண்ணீர் தேவை, நிவாரணம் வழங்கிட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக்கோரும் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை இன்று நடந்தது. ஆர். எம். லோதா தலைமையிலான பெஞ்ச் விசாரித்தது.
நீதிபதிகள் அதிருப்தி :
விசாரணையின்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வக்கீல், கர்நாடக அரசின் போக்கை விவரித்தார். தமிழகத்திற்கு 12 டி .எம்.சி., தண்ணீர் உடனடி தேவையாக உள்ளது என்றார். இதனை கேட்ட நீதிபதிகள் தங்களுடைய கருத்தில் : காவிரி நடுவர்மன்ற ஆணையை கர்நாடக அரசு பின்பற்றாதது குறித்து கவலை தெரிவித்தனர். தொடர்ந்து கண்காணிப்பு குழுவும் பொறுப்பற்று செயல்பட்டிருப்பதாக அதிருப்தி தெரிவித்தனர், 6 டி. எம். சி., தண்ணீராவது திறந்து விட முடியுமா என்று நீதிபதிகள் கேட்டனர்.
நாளை விசாரணை :
இதற்கு முடியாது என கர்நாடாக அரசு தரப்பு வக்கீல் தெரிவித்தார். மேலும் குடி நீர் தேவையையே அரசினால் நிறைவேற்ற முடியாமல் தவித்து வருகிறோம் என்றார். இதனை கேட்ட நீதிபதிகள் விவசாயத்தை விட பல லட்சம் பேர்களின் குடிநீர் தேவையும் அவசியமானதுதான். விவசாயத்தை விட இதுவும் முக்கியம் தான். எனவே நீங்கள் கடந்த 1992 முதல் கடந்த 20 ஆண்டுகளில் குடிநீருக்காக எவ்வளவு தண்ணீர் பயன்படுத்தியுள்ளீர்கள் என்ற விவரத்தை நாளை மதியத்திற்குள் கோர்ட்டில் தாக்கல் செய்யுங்கள் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதன் அடிப்படையில் நாளை விசாரணை நடக்கும் என தெரிகிறது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
உடனடியாக நமது தமிழகத்தில் உள்ள அனைத்து நீர் நிலைகளையும் தூர் வாரி சுத்தம் செய்ய வேண்டும் நமது தமிழகம் மழை நீரை முழுவதும் சேமிக்க போர்க்கால அடிப்படையில் தயாராக வேண்டும். இதற்கு அரசை எதிர்பாராமல் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலமாக ஏற்பாடு செய்யப்பட வேண்டும். இதற்கு நாட்டு நலன் கருதி சேவையாற்றி வரும் தினமலர் பத்திரிகை முன்னின்று இச்செயலை செய்ய வேண்டும். இதன் மூலம் தமிழகம் பசுமையாக மாறும். இதற்கு விவசாயிகள் மற்றும் இளைஞர்கள் உழைப்பை வழங்கலாம். நமது குடிமகன்கள் வாரம் ஒரு நாள் செலவை நிதியாக வழங்கலாம், இதற்காக சிறப்பு செய்திகள் பக்கம் அமைத்து தினமலர் தினமும் வெளியிடலாம். மேலும் இது பற்றி வாசகர்கள், கருத்துகளை தெரிவித்து ஊக்கம் அளிக்கலாம். உடனே இது பற்றி செயல்படுமாறு தினமலர் நாளிதழை வேண்டி கேட்டுக் கொள்கிறேன். நன்றி. வாழ்த்துக்கள்.
குடிக்க நீருக்க போர்வெல் அல்லது கிணற்று நீர் மாற்று வழி இருக்கிறது. இதை கர்நாடக அரசு பயன் படுத்தவேண்டும். தமிழகத்தில் 100% மழை நீர் சேமிப்பு மாநிலம்..,இவை விவசாயத்திற்கும் குடிநீர் தேவைக்கும் போதுமானவை அல்ல. வழக்குமாக வரும் ஆற்றின் நீரோட்டம் காவரி நீர்.., கர்நாடக தடுப்பனை மூலம் சிறுது சிறிதாக குறைந்து இன்று வறண்ட.., நீர் பாதையானது. தமிழகத்தில் உணவு உற்பத்திக்கு நீர் மிகுந்த பற்றாக்குறையாக உள்ளது. குடிநீர் தேவையும் பற்றாக்குறையாக உள்ளது. தமிழகம் விவசாய தேவைக்கு முன்னுரிமை கொடுகிறது. நீர்மேலாண்மை நடவடிக்கையோடும் செயல்படுகிறது. கர்நாடக பெருதன்மை இல்லாத காரணத்தால் தனது வறட்டு பிடிவாததால் உரிய நீர் வழங்க மறுப்பது மனித தர்மம்மல்ல..,இவற்றை உச்ச நீதி மன்றம் நன்கு புரிந்துள்ளது என்பதே நல்ல தீர்ப்பினை மத்திய அரசு இதழில் உச்ச நீதி மன்றத்தின் நீதி தர்மத்தின் வெளிச்சமாகும் என்பதை நாம் அனைவரும் அறியவேண்டும்
\\\\ விவசாயத்தை விட பல லட்சம் பேர்களின் குடிநீர் தேவையும் அவசியமானதுதான். விவசாயத்தை விட இதுவும் முக்கியம் தான். எனவே நீங்கள் கடந்த 1992 முதல் கடந்த 20 ஆண்டுகளில் குடிநீருக்காக எவ்வளவு தண்ணீர் பயன்படுத்தியுள்ளீர்கள் என்ற விவரத்தை நாளை மதியத்திற்குள் கோர்ட்டில் தாக்கல் செய்யுங்கள் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். //// இப்படிப் பதில் சொல்லுங்கள் நாங்களும் இப்படி உத்தரவிடுகிறோம் என்று நீதிபதிகள் கர்னாடக தரப்பு வக்கீல்களிடம் பேசி வைத்துக் கொண்டு செயல் பட்டது போல உள்ளது .... தமிழகத்தில் பருவ மழை தவறாமல் பெய்தால் ஒழிய பிரச்னை தீர வாய்ப்பில்லை .... அதற்குப் பாவங்கள் குறைய வேண்டும் .... அதற்குக் கழகங்கள் ஒழிய வேண்டும் .....
\\\\ கண்காணிப்பு குழுவும் பொறுப்பற்று செயல்பட்டிருப்பதாக அதிருப்தி தெரிவித்தனர், 6 டி. எம். சி., தண்ணீராவது திறந்து விட முடியுமா என்று நீதிபதிகள் கேட்டனர். //// இவர்கள் நீதிபதிகளா? கூமுட்டைகளா? உத்தரவிடும் அதிகாரமே உள்ளதே? வேண்டுகோள் விடுக்கிறார்களே???? கெஞ்சிக் கேட்பதென்றால் தமிழகமே கெஞ்சி இருக்குமே? ஒரு காலத்தில் கேஞ்சத்தானே செய்தோம்?

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.