E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
பிரதமர் வேட்பாளராக அறிவிக்க மோடிக்கு ஆதரவு பெருகுகிறது; யஷ்வந்த் சின்ஹா வெளிப்படையாக கோரிக்கை
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

28 ஜன
2013
19:17
பதிவு செய்த நாள்
ஜன 28,2013 19:10

புதுடில்லி: பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை அறிவிக்க வேண்டும் என பா.ஜ., மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா கூறியுள்ளார். லோக்சபாவுக்கு வரும் 2014ம் ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து அனைத்து கட்சிகளும் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன. காங்கிரஸ் கட்சி துணைத்தலைவராக ராகுல் நியமிக்கப்பட்டார். இதனையடுத்து வரும் தேர்தலில் ராகுல் தலைமையில் காங்கிரஸ் தேர்தலை சந்திக்கும் என கூறப்படுகிறது. பா.ஜ.,வும் தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது. பா.ஜ., சார்பில் பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை அறிவிக்க வேண்டும் என அக்கட்சியில் சிலர் கூறி வருகின்றனர். ஆனால் மோடியை பிரதமர் வேட்பாளராக ஏற்பதற்கு நிதிஷ்குமார் மறுத்து விட்டார். குஜராத் சட்டசபை தேர்தலில் பா.ஜ., மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்து முதல்வராக மோடி பொறுப்பேற்றுக்கொண்டார். இதனையடுத்து பா.ஜ.,வில் அவரது கை ஓங்கியுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். மேலும் நரேந்திர மோடியின் வெற்றியால், பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்ற கோஷம் பா.ஜ.,வில் வலுத்துள்ளது.

இந்நிலையில், பா.ஜ., தலைவராக இருந்த நிதின் கட்காரிக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த முன்னாள் மத்திய அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான யஷ்வந்த் சின்ஹா நரேந்திர மோடியை பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: மக்களும், கட்சி தொண்டர்களும், நரேந்திர மோடியை பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என விரும்புகின்றனர். மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்தால், வரும் தேர்தலில் அது பா,ஜ.,வுக்கு சாதகமாக அம்சமாக இருக்கும் என்பது எனது கருத்து. நரேந்திர மோடியை முன்னிறுத்தினால் அது, வாக்காளர்கள் மத்தியில் பா.ஜ.,வுக்கும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் சாதகமான மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஐக்கிய ஜனதா தளம் பா.ஜ.,வின் நெருங்கிய கூட்டணி கட்சி. அக்கட்சி தனி ஒருவரை குறிவைக்கக்கூடாது. நாங்கள் கட்சியாக மதசார்பற்றவராகவோ, மதப்பற்றுள்ளவராகவோ இருப்போம். இந்நிலையில், அவர்கள் இவற்றில் ஒன்றை வைத்து கொண்டு ஒருவதை எதிர்க்கக்கூடாது. எந்த ஒரு கட்சிக்கும் சொந்த முடிவை எடுப்பதற்கு உரிமை உள்ளது. பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை பா.ஜ., அறிவித்தால், அதனை அவர்கள் விவகாரமாக்காமல், ஏற்றுக்கொள்ள வேண்டும். ஐக்கிய ஜனதா தள கட்சி பிரிந்து செல்ல வேண்டும் என முடிவு செய்தால், அதனை தீவிரமாக ஆலோசனை செய்த பின்னரே முடிவு செய்ய வேண்டும் என கூறினார்.

நரேந்திர மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்ற யஷ்வந்த் சின்ஹாவின் கருத்து குறித்து கருத்து தெரிவித்த ஐக்கிய ஜனதா தள மூத்த தலைவர் கே சி தியாகி, இந்த கருத்துக்கள் யஷ்வந்த் சின்ஹாவின் சொந்த கருத்து. முதலில் பா.ஜ., பிரதமர் வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்ய வேண்டும். பின்னர் அதற்கு தேசிய ஜனநாயக கூட்டணி , ஒப்புதல் தெரிவிக்க வேண்டும் என கூறினார்.

ஐக்கிய ஜனதா தள கட்சியின் தேவேஷ் சந்திரா தாக்கூர் கூறுகையில், யஷ்வந்த் சின்ஹா, ஐக்கிய ஜனதா தள கட்சிக்கு சவால் விடுக்கிறார் என கருதவில்லை. எங்கள் நிலை தெளிவாக உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்திற்கு பின்னர் தான் பிரதமர் வேட்பாளரை அறிவிக்க வேண்டும் என கூறினார்.

ஐக்கிய ஜனதா தள கட்சியின் சிவானந்த் திவாரி கூறுகையில், பிரதமர் வேட்பாளரை பா.ஜ., தான் தேர்வு செய்ய வேண்டும் என கூறியுள்ளோம். யஷ்வந்த் சின்ஹாவின் கருத்து, பா.ஜ.,வின் கருத்து அல்ல என கூறினார்.

மேலும் ஐக்கிய ஜனதா தள கட்சி, உடனடியாக தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தை கூட்ட வேண்டும் எனவும், குஜராத் முதல்வர் பதவியை நரேந்திர மோடி நிறைவு செய்ய வேண்டும் என அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், யஷ்வந்த் சின்ஹாவின் கருத்து குறித்து பா.ஜ., தலைவர் ராஜ்நாத் சிங் கூறுகையில், பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை, கட்சியின் பார்லிமென்டரி குழு தான் முடிவு செய்யும் என கூறினார். இதனிடையே நாளை பா.ஜ., கட்சியின் உயர்மட்ட குழு கூட்டத்தை கூட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.





Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (29)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Guru - Batam,இந்தோனேசியா
29-ஜன-201306:28:16 IST Report Abuse
Guru மக்களின் ஆதரவு அவருக்கு எப்போதோ கிடைத்து விட்டது.., அவருக்கு தேவை BJP இன் ஆதரவு தான்... பிஜேபி கட்சியினர் அதை உணர்த்து நடந்துகொண்டால் சரி
Rate this:
2 members
0 members
30 members
Share this comment
Cancel
RAMESH - Singapore  ( Posted via: Dinamalar Android App )
29-ஜன-201305:06:32 IST Report Abuse
RAMESH இத்தாலி விருந்தாளியின் காலடியில் கிடக்கும் நம்நாட்டின் மரியாதையை மீட்க இந்தி்யாவை வல்லரசாக்க மோடியால் மட்டுமே முடியும்
Rate this:
5 members
0 members
29 members
Share this comment
Cancel
tamilan - seri kembangan  ( Posted via: Dinamalar Android App )
29-ஜன-201304:22:44 IST Report Abuse
tamilan மோடி பற்றிய செய்தி்க்கு கருத்து தெரிவிக்காமல், ஏதோ ஒரு மேதை எனவும்,மதத்தி்ன் பெயரையும் சொல்லி பிதற்றுகிறார் பாவம்!!
Rate this:
1 members
0 members
13 members
Share this comment
Cancel
mani.kmu9 - madurai  ( Posted via: Dinamalar Android App )
29-ஜன-201302:28:30 IST Report Abuse
mani.kmu9 People will decide..media is trying to create waves towards modi...if modi comes india will face lots of problems from other countries...
Rate this:
23 members
0 members
3 members
Share this comment
Cancel
Krishna - Bristol (U.K)  ( Posted via: Dinamalar Android App )
29-ஜன-201302:22:35 IST Report Abuse
Krishna Modi is the right person for the PM post.. Jai Hind..
Rate this:
5 members
0 members
22 members
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
29-ஜன-201302:02:55 IST Report Abuse
Nallavan Nallavan மோதி தலைமையில் மத்திய அமைச்சரவை அமைந்தால் மத்திய அளவில் ஊழலும் குறையும் ....
Rate this:
6 members
0 members
25 members
Share this comment
Cancel
Raja (Thravida Veriyan) - Chennai,இந்தியா
29-ஜன-201300:09:36 IST Report Abuse
Raja (Thravida Veriyan) We want Modi, We want Modi, We want Modi
Rate this:
4 members
0 members
26 members
Share this comment
Cancel
udanpirappu3 - chennai ,இந்தியா
28-ஜன-201323:01:44 IST Report Abuse
udanpirappu3 ஏதோ இந்தியாவே ஆதரிக்குது அப்பிடீன்னு சொன்னீங்க, மக்களை ஏமாத்தாதீங்க
Rate this:
27 members
1 members
8 members
Share this comment
Cancel
28-ஜன-201322:48:21 IST Report Abuse
நாகேந்திரன் TL மோடி அனைத்து நிர்வாக தி்றமையையும் ஒருங்கே பெற்றவர்...கடந்த பத்தாண்டுகளில் குஜராத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு சென்றவர்... இந்தி்யாவின் வளர்ச்சிக்கு தொலைநோக்கு பார்வை கொண்ட மோடி போன்றவர் கட்டாயம் தலைமை பதவியில் அமர்ந்தால் மட்டுமே நாடு உருபடும்
Rate this:
6 members
0 members
38 members
Share this comment
Cancel
விருமாண்டி - மதுரை,இந்தியா
28-ஜன-201322:44:28 IST Report Abuse
விருமாண்டி அடுத்த பிரதமர் இவர் தான் அதில் சந்தேகம் இல்லை .. குஜராத்தை தூக்கி நிறுத்தியது போல் நம் நாட்டை தங்கி பிடிக்கும் சக்தி இவரிடம் மட்டுமே உள்ளது
Rate this:
5 members
0 members
38 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.