Humans need to be prevent from remove human waste: Jairam Ramesh | மனித கழிவுகளை மனிதர்களே அகற்றுவதை தடுக்க மசோதா நிறைவேற வேண்டும் : ஜெய்ராம் ரமேஷ்| Dinamalar

மனித கழிவுகளை மனிதர்களே அகற்றுவதை தடுக்க மசோதா நிறைவேற வேண்டும் : ஜெய்ராம் ரமேஷ்

Updated : ஜன 29, 2013 | Added : ஜன 28, 2013 | கருத்துகள் (4)
Advertisement
மனித கழிவுகளை மனிதர்களே அகற்றுவதை தடுக்க மசோதா நிறைவேற வேண்டும் : ஜெய்ராம் ரமேஷ்

புதுடில்லி:""மனிதக் கழிவுகளை, மனிதர்களே அகற்றுவதை தடை செய்ய வகை செய்யும் சட்ட மசோதா, பார்லிமென்டின் பட்ஜெட் கூட்டத் தொடரில், நிறைவேற வேண்டும்,'' என, மத்திய ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் வலியுறுத்தினார்.மனித கழிவுகளை மனிதர்களே அகற்றுவதற்கு தடை விதிக்கும் மசோதா பார்லிமென்டில் நிறைவேறாமல் நிலுவையில் உள்ளது.
இதுகுறித்த வழக்கு, சமீபத்தில், சுப்ரீம் கோர்ட்டில், விசாரணைக்கு வந்தபோது, "மனித கழிவுகளை, மனிதர்களே அகற்றுவதை தடை செய்ய, உரிய சட்டம் இயற்றப்படும் என, மத்திய அரசு சார்பில், ஏற்கனவே உறுதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், இது தொடர்பாக, நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை; இது கண்டனத்துக்குரியது' என, நீதிபதிகள் கண்டிப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து, மத்திய அரசு சார்பில் ஆஜரான, சொலிசிட்டர் ஜெனரல், "மனிதக் கழிவுகளை மனிதர்கள் அகற்றுவதை தடை செய்யும் சட்ட மசோதா, ஏற்கனவே, பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தற்போது, இந்த மசோதா, பார்லி., நிலைக்குழுவின் பரிசீலனையில் உள்ளது. விரைவில் இதற்கான சட்டம் இயற்றப்படும்' என, உறுதியளித்தார்.


இந்நிலையில், டில்லியில், விழா ஒன்றில் பேசிய, ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் அவல நிலை முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும். இதற்கான சட்ட மசோதா, பார்லிமென்டில் வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதை நிறைவேற்ற, அனைத்து எம்.பி.,க்களும் ஆதரவளிக்க வேண்டும். இந்த மசோதா நிறைவேறிவிட்டால், இந்த பிரச்னைக்கு இரண்டு, மூன்று மாதங்களில் தீர்வு கண்டு விடலாம்.இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.


இச்சட்டம் அமலுக்கு வந்தால், மாவட்ட கலெக்டர், தன் நிர்வாகத்திற்குள் எவ்விடத்திலும், மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் நிலை இல்லை என உறுதியளிக்க வேண்டும். மேலும் இதை கட்டாயமாக்குவது நகராட்சி, கன்டோன்மென்ட் போர்டு, ரயில்வே நிர்வாகம் ஆகியவற்றின் பொறுப்பாகும். மனித கழிவுகளை அகற்றுவதற்கு மனிதர்களை நியமித்தாலோ, சுகாதாரமற்ற கழிவறைகளை அமைத்தாலோ, ஓராண்டு சிறை தண்டனை மற்றும் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்க சட்டத்தில் வகை செய்யப்படும் என, தெரிகிறது.


Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
P. Kannan - Bodinayakkanur,இந்தியா
29-ஜன-201310:18:02 IST Report Abuse
P. Kannan எங்கள் ஊரில் இந்த முறை ஒழிக்கப்பட்டு பதினைந்து ஆண்டுகளாகிவிட்டன. அதோடு வார்டு தவறாமல் நவீன கழிப்பறை தான். இவர்கள் தூங்கிக்கொண்டு இருக்கிறார்களா?
Rate this:
Share this comment
Cancel
arunmohan - chennai,இந்தியா
29-ஜன-201300:43:39 IST Report Abuse
arunmohan நல்ல வரவேற்க கூடிய மனிதநேயமான சட்டம், நம் நாடு நிறைய நவீன கருவிகள் கொண்டு உபயோகிக்க வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
Jegan - chennai,இந்தியா
29-ஜன-201300:08:37 IST Report Abuse
Jegan யாராவது மும்பைவாசி இருந்தால் சொல்லுங்களேன். SLUM DOG MILLIONAIRE படத்தில் காட்டப்படுகிற மாதிரி கழிப்பறை உண்மையாகவே இருக்கிறதா? இந்தியாவில் எந்த மூலையில் அப்படிப்பட்ட அல்லது அது போன்ற கழிப்பறை இருந்தால் அவற்றை மாற்ற நடவடிக்கை அவசியம் தேவை.
Rate this:
Share this comment
Cancel
Jegan - chennai,இந்தியா
29-ஜன-201300:02:30 IST Report Abuse
Jegan முதல்ல அரசு அலுவலகங்கள், ரயில்வே, பேரூந்து நிலையங்கள், மருத்துவமனைகள் மற்றும் பொது இடங்களில் பாதுகாப்பான, சுகாதாரமான கழிவறைகளை அமைக்க மற்றும் பராமரிக்க நடவடிக்கை எடுங்கள். ஏதோ மண்டேக் சிங் அலுவாலியாவின் திட்ட கமிசன் அலுவலகத்தில் மட்டும் அதி நவீன கழிப்பறைகள் இருந்தால் போதாது. சென்னையில் (மட்டுமின்றி எல்லா ஊரிலும்) பாதாள சாக்கடையை தூர்வாரி நடு ரோட்டில் கொட்டி குவித்து விட்டு செல்லும் நடைமுறையை மாற்றுங்கள். சென்னையில் எந்த சாலையானாலும் சரி பெரியது சிறியது என்ற வேறு பாடின்றி பாதாள சாக்கடையை அடைப்பு நீக்கும்போது உள்ளே இருந்து எடுத்த கழிவுகளை அங்கேயே நடுரோட்டில்தான் குவித்து விட்டு செல்கிறார்கள். உடனே அப்புறப்படுத்துவது இல்லை. வாகன சக்கரங்களில் சிக்கி ரோடு முழுவதும் சிதறி அரைபட்டு காய்கிறது. பின் உலர்ந்த பின் தூசிஆகி காற்றில் பறந்து அனைவருக்கும் (ஏழை பணக்காரன் ..... போன்ற பாகுபாடின்றி) உடலில் சட்டையில் வீட்டில் வாகனத்தின் மீது என படிகிறது. திறந்த வெளி கடைகளில் அடுக்கி வைக்கப்பட்டு விற்கப்படுகிற உணவுபண்டங்கள் உட்பட. உங்கள் சட்டையில் வண்டியில் வீட்டில் படியும் அழுக்கு எவர்ராலானது என ஒரு நிமிடம் யோசியுங்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை