மத்திய கப்பல் துறை அமைச்சர் வாசன்: ஈரோடு, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் கடும் மின் தட்டுப்பாடு காரணமாக, பெரும்பாலான தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. தொழிலாளர்கள் பலர் வேலை இழந்துள்ளனர். 10 மணி நேரத்துக்கும் மேலான மின்தடையால், அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கெல்லாம், அ.தி.மு.க., அரசு பொறுப்பேற்க வேண்டும்.
டவுட் தனபாலு: மத்திய தொகுப்புல இருந்து கூடுதல் மின்சாரம் கொடுங்கன்னு, முதல்வர் ஜெயலலிதா பலமுறை கேட்டும், நீங்க தராம, "அழும்பு' பண்ணிட்டு, தமிழக அரசு மேல மட்டும் பழியை தூக்கி போடுறது முறையான்னு தான், எனக்கு, "டவுட்!'
பத்திரிகை செய்தி: கர்நாடகா மாநில அரசியலில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு இடையே, முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், பா.ஜ., மேலிட தலைவர்களுடன் ஆலோசனை நடத்த, டில்லி புறப்பட்டு சென்றார்.
டவுட் தனபாலு: ஷெட்டர், ஆட்சி நடத்துறதை விட, உள்கட்சி பஞ்சாயத்தை தீர்க்க, டில்லியில இருக்கிற நாட்கள் தான் அதிகமா இருக்கு... "வெளிநாடுகள்ல செட்டிலாகிட்ட இந்தியர்களை, "வெளிநாடு வாழ் இந்தியர்'னு அழைக்கிற மாதிரி, ஷெட்டரையும், "டில்லி வாழ், கர்நாடகா முதல்வர்'னு அழைக்கணுமோன்னு தான், எனக்கு, "டவுட்!'
குஜராத் முதல்வர் நரேந்திர மோடி: பா.ஜ., தலைவர் ராஜ்நாத் சிங்குக்கு வாழ்த்து சொல்ல வந்தேன். குஜராத்தில், நான் என்ன செய்ய வேண்டும்; எப்படி செயல்பட வேண்டும் என்பது தொடர்பாக, அவரிடம் ஆலோசனை பெற்றேன். லோக்சபா தேர்தல் தொடர்பாகவும் விவாதித்தேன்.
டவுட் தனபாலு: குஜராத்துல, தேர்தல்ல, "சீட்' தர்றதுல இருந்து, அமைச்சர் பதவி தர்றது வரைக்கும், "நானே ராஜா; நானே மந்திரி'ன்னு, மேலிட ஆலோசனையை கேட்காம, தன்னிச்சையாவே செயல்படுவீங்களே... இப்ப, இவ்வளவு பணிவா ஆலோசனை கேட்டிருக்கிறது ஏன்...? பிரதமர் பதவி கனவு தான், உங்க பணிவுக்கு காரணமோன்னு, எனக்கு, "டவுட்!'
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.