லக்னோ : ""பாபர் மசூதிக்கு பதிலாக, தாஜ் மகாலை இடிக்க முன்வந்திருந்தால், வன்முறை கும்பலுக்கு நான் தலைமை வகித்து அழைத்து சென்றிருப்பேன்,'' என, உத்தர பிரதேச அரசின் மூத்த அமைச்சர்களில் ஒருவரான, அசம் கான் கூறினார்.
உத்தர பிரதேசத்தில், சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த முதல்வர் அகிலேஷ் யாதவ் அரசில், நகர்புற அபிவிருத்தி துறை அமைச்சராக இருப்பவர் அசம் கான். கட்சி தலைவர், முலாயம் சிங் யாதவுக்கு நெருக்கமானவர்.மாநிலத்தில் முந்தைய பகுஜன் சமாஜ் ஆட்சியின் போது, முதல்வர் மாயாவதி, தன் கட்சி நிறுவனர் கன்ஷி ராமுக்கும், தனக்கும் பிரமாண்ட சிலைகளை நிறுவி, அரசு பணத்தை வீணடித்தார் என்ற, எதிர் கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு ஆளாகினார்.
இந்நிலையில், மாநில அமைச்சர் அசம் கான், முசாபர்நகரில் நடந்த நிகழ்ச்சியில் பேசியதாவது:பாபர் மசூதியை இடித்த கும்பல், பாபர் மசூதிக்கு பதிலாக, தாஜ் மகாலை இடிக்க முன் வந்திருந்தால், அந்த கும்பலுக்கு நான் தலைமையேற்று அழைத்து சென்றிருப்பேன்.ஏனெனில், அரசு பணத்தை எடுத்து, தன் மனைவிக்கு நினைவு சின்னம் எழுப்ப, மன்னர் ஷாஜகானுக்கு யார் அதிகாரம் அளித்தது?இவ்வாறு, அவர் கூறினார்.
இதன் மூலம், முன்னாள் முதல்வர் மாயாவதிக்கு மறைமுக கண்டனம் தெரிவிக்க, அமைச்சர் அசம் கான் முயன்றுள்ளார் என்பது தெளிவாகிறது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
மிக அருமையான பேச்சு. தாஜ் மஹால் மட்டுமல்ல. முஸ்லிம்களால் சிதைக்கப்பட்ட ஹிந்து கோவில்கள் மேல் கட்டப்பட்டுள்ள அணைத்து அவமான சின்னங்களும் தகர்க்கப்பட வேண்டும். இதை செய்ய ஒவ்வொரு அரசியல்வாதிக்கும் எது ஒரு காரணம் கிடைக்கலாம். ஆனால் காலம் காலமாக காயப்பட்டு கிடக்கும் ஹிந்து ( உணர்வு கொண்ட) மக்களுக்கு இது மாதிரியான நடவடிக்கைகள் " வோட்டு வெறி பிடித்தவர்களின் மைனாரிட்டி கோஷத்தால் நம் இனம் அழிந்துவிடுமோ" என்கிற பயத்திலிருந்து விடுதலை கிடைக்கும்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.