"டெசோ' தீர்மானங்கள் தொடர்பாக, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், தி.மு.க., - எம்.பி.,க்கள் குழுத் தலைவர் டி.ஆர்.பாலுவின் டில்லி பயணம், உலகத் தமிழர்கள் மத்தியில் ஏமாற்றத்தையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது என, தி.மு.க., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தி.மு.க., தலைவர் கருணாநிதி தலைமையில், "டெசோ' அமைப்பின் சார்பில், சென்னையில் நடந்த மாநாட்டில், இலங்கை தமிழர் நல்வாழ்வுக்கான, 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த தீர்மானங்களின் அடிப்படையில், நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஐ.நா, துணை பொதுச் செயலர் யான் லியான், ஜெனிவா மனித உரிமை கமிஷனின் தலைவர் நவநீதம் பிள்ளை ஆகியோரை, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் நேரில் சந்தித்து, மனுக்களை வழங்கினார்.இதைத் தொடர்ந்து, இலங்கையில், அமைதியை நிலை நாட்டுவதற்கு, ஐ.நா., சபை அழுத்தம் தர வேண்டும் என்பதற்காக, ஐ.நா., சபையின் உறுப்பு நாடுகளின் தூதர்களையும் நேரில் சந்தித்து, வலியுறுத்துவதற்கு, ஸ்டாலின், நேற்று முன்தினம், டில்லிக்கு புறப்பட்டு சென்றார்.அவருடன் டி.ஆர்.பாலு, சுப்புலட்சுமி ஜெகதீசன், சுப.வீரபாண்டியன் ஆகியோரும் சென்றனர்.
டில்லிக்கு புறப்படும் முன், சென்னையில், ஸ்டாலின் நிருபர்களிடம் கூறுகையில், "இலங்கை சமத்துவம், அமைதியை நிலைநாட்ட, இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வலியுறுத்தி, டெசோ தீர்மானங்களை, 47 நாடுகளின் தூதர்களிடம் வழங்குவோம்' என, தெரிவித்தார்.ஆனால், இரண்டு நாட்களில், 47 நாடுகளின் தூதர்களை சந்தித்து, வலியுறுத்த முடியுமா என்ற கேள்வி எழுந்தது. டில்லிக்கு சென்ற ஸ்டாலின், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்தையும் சந்தித்து பேசியுள்ளார். மேலும், டில்லியில் உள்ள ஐ.நா., சபை அலுவலகத்தில் மனு வழங்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், உலகத் தமிழர்களிடம், ஸ்டாலின் டில்லி விஜயம் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை; ஏமாற்றமே மிஞ்சியது என்ற சர்ச்சை எழுந்துள்ளது.
இது குறித்து தி.மு.க.,வட்டாரங்கள் கூறியதாவது:
ஐ.நா., சபையின் உறுப்பு நாடுகளான, 47 நாடுகளின் தூதர்களையும், இரண்டு நாட்களில் சந்திக்க முடியாது. சில நாடுகளின் தூதர்களை மட்டும் சந்தித்து மனு அளித்துள்ளனர். டில்லியில் உள்ள, ஐ.நா., சபை அலுவலகத்தில் மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன.இலங்கை போருக்கு பின் கற்ற பாடங்கள், அனுபவங்களை கொண்டு, எதிர்காலத்தில் செய்ய வேண்டியவை என்ற அறிக்கையை நிறைவேற்ற சொல்வதை, உலகத் தமிழர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.அந்த அறிக்கை வழங்கியதன் மூலம், மீண்டும் ராஜபக்ஷேவின் அதிகாரம் வலுப்பெறும். இலங்கை தமிழர்கள் எதிர்பார்க்கும் சமத்துவம் கிடைக்காது. எனவே, ஸ்டாலின், டி.ஆர்.பாலு டில்லி பயணம், உலகத் தமிழர்கள் மத்தியில், சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இவ்வாறு கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
-நமது நிருபர்-
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
கிரி ஸ்ரீநிவாசன் // ஆண்டு பலவாகியும் இன்னும் இந்தப் பிரச்சனையில் ஜெயலலிதா தன் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தவில்லை. முதல்வராகி எடுத்த முயற்சி என்ன ???? // இதற்கு பதில்...இதன் கீழ் எழுதப்பட்டுள்ள சொம்புகளின் கருத்துகளை வைத்தே கூறி விடலாம்... அவர்களும் அதையே நினைக்கின்றார்கள்... அதனாலேயே அவர்கள் கருத்துக்களும் பொறாமைகளால் சூடான பதில் களாக உள்ளன ...
ஒரு நிமிடம்................................................................
என் ஆயுள் இருக்கும் வரை என்னால் அந்த கோர காட்சிகளை மறக்கவே முடியாது... ரத்த கண்ணீர் விட்டு அழுதேன் :( நான் நடுநிலையாக என் மனசாட்சி படி தான் இதை பதிக்கிறேன்..
அரசியலுக்கு அப்பாற்பட்டு மனித நேயத்துடன் சொல்கிறேன் ...
இலங்கைக்கு ஆயுதம் வழங்கி இந்தியா துணை நின்றது..
இந்தியா என்றால் காங்கிரஸ் கட்சியும் அதன் கூட்டணி கட்சிகளும் .. காங்கிரஸ் கட்சிக்கு துணையாக நின்றது திமுக...
கொல்ல பட்டது நமது தமிழ் மக்கள்...
நமது மக்கள் என்று சொல்ல விரும்பாதவர்கள் மனித நேயதுடனாவது இதை பார்க்க வேண்டும்..
ஒரு இன மக்களை இனவெறி கொண்டு அழிப்பது சரியா ??
அப்படி அழித்தவர்களுக்கு இன்றும் துணையாக நிற்கும் காங்கிரஸ் அதன் கூட்டணி கட்சிகள் செய்வது சரியா ??
உலகமே இதை இன படுகொலை என்று சொல்லியும் இன்றளவும் அம்மக்களுக்கு பக்க பலமாக இல்லாமல் அரசியல் ஆதாயம் தேடுவது சரியா ??
உண்மையாலும் சூடு சொரணை இருந்தால் , தமிழன் என்ற இனவுணர்வு இருந்தால் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியே வந்து அதனை எதிர்த்து இருக்க வேண்டும்..
டெசோ மாநாடு போடும் பொது மத்திய அரசு தமிழீழம் என்று கூற கூடாது என்று சொல்லும் போது அதை கடுமையாக எதிர்த்து இருக்க வேண்டும் ,
பச்சை துரோகம் செய்தவர்கள் இவர்கள் ... சுயநல பேயிகள் திமுக என்ற கட்சி..
எந்த காலத்திலையும் திமுக நாடகத்தை நம்ப மாட்டேன்,
திமுகாவை ஆதரிக்கவே மாட்டேன்.. என் உடம்பில் கடைசி துளி இரத்தம் இருக்கும் வரை கண்டிப்பாக கடை பிடிப்பேன்..
என்னுடைய மனமும் அழுதது , பிரபாகரன் செய்த தவறால் தமிழ் தலைவர்களை கொல்லும் போதும் ,போரில் பிரபாகரனை நம்பிய எல்லா மக்களையும் கேடயமாக வைத்து கொல்லும் போதும் வலித்தது. அண்ணா அன்றே சொன்னார், அது பிரபாகரனுக்கும் பொருந்தும், தம்பி " கத்தியை தீட்டாதே உன் புத்தியை தீட்டு " என்று , அதையே கலைஞரும் எடுத்து சொன்னார் ....

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.