Advertisement
சிதம்பரம், ஷிண்டே மக்களை ஏமாற்றினரா? கோர்ட் அதிரடி உத்தரவு
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள் : ஜனவரி 28,2013,23:55 IST
மாற்றம் செய்த நாள் : ஜனவரி 29,2013,00:13 IST

ஐதராபாத் : "தெலுங்கானா தனி மாநில பிரச்னை தொடர்பாக, வெளியிட்ட அறிக்கைகள் மூலம், மத்திய உள்துறை அமைச்சர், சுஷில் குமார் ஷிண்டேயும், நிதி அமைச்சர் சிதம்பரமும், மக்களை ஏமாற்றினார்களா என்பது குறித்து, போலீசார் விசாரிக்க வேண்டும்' என, ஆந்திர கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

"ஆந்திராவை இரண்டாக பிரித்து, தெலுங்கானா தனி மாநிலம் அமைக்க வேண்டும்' என, தெலுங்கானா ஆதரவாளர்கள், நீண்ட காலமாக போராடி வருகின்றனர். மத்திய அரசு, இந்த விஷயத்தை, இழுத்தடித்து வருகிறது.இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர், சுஷில் குமார் ஷிண்டே," தெலுங்கானா விவகாரத்தில், இம்மாத இறுதிக்குள், முடிவு அறிவிக்கப்படும்' என, சமீபத்தில் தெரி வித்தார். அதனால், தெலுங்கானா ஆதரவாளர்கள், உற்சாகம் அடைந்தனர்.இதற்கிடையே, "தெலுங்கானா விவகாரம் தொடர்பாக, விரிவான ஆலோசனை நடத்த வேண்டியிருப்ப தால், இதில், இறுதி முடிவு எடுக்க, கூடுதல் அவகாசம் தேவை' என, மத்திய அரசு, நேற்று முன்தினம் அறிவித்தது. இது, தெலுங்கானா ஆதரவாளர்களிடையே, கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், ஆந்திர மாநில ஜூனியர் வக்கீல் சங்கம் சார்பில், அதன் தலைவர், நரேஷ் குமார், ஐதராபாத் பெருநகர மாஜிஸ்திரேட் கோர்ட்டில், மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், கூறப்பட்டிருந்ததாவது:தெலுங்கானா தனி மாநிலம் அமைப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று, தற்போதைய நிதி அமைச்சர் சிதம்பரம், உள்துறை அமைச்சராக பதவி வகிக்கும்போது தெரிவித்திருந்தார்.அதுபோல், தற்போதைய உள்துறை அமைச்சர், சுஷில் குமார் ஷிண்டேயும், உறுதி அளித்திருந்தார். தற்போது, இந்த இரண்டு பேருமே, தங்களின் உறுதிமொழியை மீறி விட்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு, நேற்று விசாரணைக்கு வந்தபோது, "தெலுங்கானா விவகாரம் தொடர்பாக, வெளியிட்ட அறிக்கைகள் மூலம், மத்திய அமைச்சர்கள் சுஷில்குமார் ஷிண்டே, சிதம்பரம் ஆகியோர் மக்களை ஏமாற்றினார்களா என்பது குறித்து, போலீசார் விசாரிக்க வேண்டும். பின், அதுதொடர்பான அறிக்கையை, அடுத்த மாதம், 14ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்' என, போலீசாருக்கு மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

கோர்ட் உத்தரவு தொடர்பாக, ஐதராபாத் போலீசார் தரப்பில் கூறியதாவது:இந்த விவகாரம் தொடர்பாக, கோர்ட்டிடமிருந்து, எங்களுக்கு இன்னும் உத்தரவு நகல் கிடைக்கவில்லை. மத்திய அமைச்சர்களுக்கு எதிராக, வழக்கு பதிவு செய்யப்படுமா என்பது குறித்து, தற்போது தெரிவிக்க முடியாது. கோர்ட்டின் உத்தரவில் என்ன கூறப்பட்டுள்ளது என்பதை படித்த பார்த்தபின், இதுகுறித்து பதில் அளிக்க முடியும்.இவ்வாறு போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

போராட்டம்:



இதற்கிடையே, தெலுங்கானா தனி மாநிலம் அமைக்கும் விவகாரத்தை, மத்திய அரசு தாமதப்படுத்துவதை கண்டித்து, இரண்டாவது நாளாக நேற்றும் போராட்டம் தொடர்ந்தது. தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி என, அழைக்கப்படும் டி.ஆர்.எஸ்., கட்சி மூத்த தலைவர்களில் ஒருவரான, ராமாராவ் கூறுகையில்,""இனியும், மத்திய அரசை நம்பி பயனில்லை. தெலுங்கானா பகுதியைச் சேர்ந்த, காங்கிரஸ் எம்.பி.,க்கள், அனைவரும், ஒட்டு மொத்தமாக ராஜினாமா செய்ய வேண்டும்,'' என்றார்.

ஐதராபாத்தில், உஸ்மானிய பல்கலை மாணவர்கள், போராட்டத்தில் ஈடுபட்டனர்; வாரங்கல் ககாதியா பல்கலை மாணவர்களும், முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். துணைவேந்தர் அறைக்குள் நுழைந்த மாணவர்கள், தெலுங்கானா கோரிக்கையை வலியுறுத்தி, தீக்குளிக்கப் போவதாக அறிவித்ததால், பதற்றம் ஏற்பட்டது.தெலுங்கானாவுக்கு ஆதரவாக, மாநிலத்தின் பல பகுதிகளிலும், போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளதால், ஆந்திராவில் பதற்றம் நிலவுகிறது.

ஏழு எம்.பி.,க்கள் ராஜினாமா முடிவு:



தெலுங்கானா தனி மாநில கோரிக்கைக்கு முடிவு காணாமல், மத்திய அரசு இழுத்தடிப்பதால், தெலுங்கானா பகுதியைச் சேர்ந்த, காங்கிரஸ் எம்.பி.,க்கள் ஏழு பேர் ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளனர். அவர்கள் இன்று, தங்களின் ராஜினாமா கடிதங்களை, காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு அனுப்பி வைக்கின்றனர்.இவர்கள் ராஜினாமா செய்தால், அது மத்தியில் ஆட்சியில் உள்ள, பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான, ஐ.மு.கூட்டணி அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.


தொடர்புடைய செய்திகள்:


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (33)
Pugal - Kovai ,இந்தியா
29-ஜன-201313:29:43 IST Report Abuse
Pugal ஜூன் மாதம் முதல் தமிழக மின் வெட்டு சரியாகி விடும் என்று சொல்லி சரியாக்கததும் மக்களை ஏமாற்றும் வேலையா என்று காவல் துறை ஆய்வு செய்யுமா? மின் வெட்டை மக்கள் பிரச்னையாகக் கருதவே இல்லை என்று ஒ.பி சொன்னதும் மக்களை ஏமாற்றும் முயற்சியா என்றும் கூட காவல் துறை ஆய்வு செய்யுமா?
Rate this:
4 members
0 members
14 members
Share this comment
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
29-ஜன-201313:26:52 IST Report Abuse
Nallavan Nallavan பிரச்னைகள் எல்லாவற்றிலும் தீர்வைப்பற்றி கருதாமல் அதில், தான் அடையப்போகும் ஆதாயத்தை மட்டுமே கருத்தில் கொண்டு காங்கிரஸ் கட்சி முடிவு எடுத்து வருகிறது .... இது இந்தியா குடியரசானதில் இருந்து துவக்கம். இந்தியா இன்று சந்தித்து வரும் பல்வேறு உள்நாட்டுக் குழப்பங்களுக்கும் காங்கிரசின் இந்தக் கொள்கையே காரணம் ... இதில் வேடிக்கை என்னவென்றால் மத்தியில் பாஜக ஆட்சிக்கு வரும்பொழுது பிரச்னைகளைத் தூண்டி விட்டு "பாஜக-வால் தீர்க்க முடியவில்லை" என்று பந்தை பாஜக பக்கம் திருப்புவதுதான்
Rate this:
4 members
0 members
13 members
Share this comment
Senthil Kumar - tirupur,இந்தியா
29-ஜன-201312:30:56 IST Report Abuse
Senthil Kumar இந்த பிரச்சினையை நாராயணசாமி ஐயாவிடம் vittuvidungal. இன்னும் 5 வருடத்துக்கு அவர் பார்த்துப்பார்
Rate this:
0 members
0 members
4 members
Share this comment
Narendra Bharathi - Sydney,ஆஸ்திரேலியா
29-ஜன-201311:10:46 IST Report Abuse
Narendra Bharathi கடந்த 66 வருடங்களாக இந்தியாவையே ஏமாற்றி வரும் செப்படி வித்தை தெரிந்த காங்கிரஸ் கட்சிக்கு தெலுங்கானாவை ஏமாற்றுவது ஒன்றும் பெரிய ஆச்சர்யமில்லை...
Rate this:
2 members
0 members
11 members
Share this comment
S. ரெகுநாதன் - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
29-ஜன-201310:56:52 IST Report Abuse
S. ரெகுநாதன் உச்சநீதி மன்றம் சொன்னாலே உரைக்காது, sessions court சொன்னால் கேட்டுவிடபோகிறார் சிதம்பரமும், ஷிண்டேயும்....மானம், ரோஷம், சூடு, சொரணை என்று சில சொல்வார்களே அது இப்போது மத்திய அரசில் பிரதமர் முதல் யாருக்கும் இல்லை...
Rate this:
3 members
1 members
15 members
Share this comment
ஆனந்த் - நாகர்கோவில் ,இந்தியா
29-ஜன-201310:45:24 IST Report Abuse
ஆனந்த் ரெண்டு 420 மட்டும்தான் அமைச்சரைவயில் இருக்கிறது என நீதிமன்றமும் நினைத்து விட்டது
Rate this:
0 members
0 members
11 members
Share this comment
sethu - Chennai,இந்தியா
29-ஜன-201310:31:10 IST Report Abuse
sethu சரியான வழிகாட்டல். ஆனா,நமது காவிரி தீர்ப்பு அரசிதழில் டிசம்பர் 30 க்‌குள் வெளியிடுவேன் என மத்திய அரசின் வக்கீல் சுப்ரீம் கோர்டில் சொன்னார். ஆனால் இன்னும் வெளியிடல. அதனால நாம யார்மீது இப்போ ரிட் போடலாம், தமிழக அரசு இதை ஒரு முன் உதாரணமாக எடுத்துக்கொண்டு வழக்கு தொடுக்கலாம். நல்ல பாயிண்ட் நமக்கு கிடைத்துள்ளது. ஏன் நாம பிரதமரிடம் கெஞ்ச வேண்டும். நிதி வேண்டாம். வளர்ச்சிப்பணிகள் செய்து மாநிலத்தை முன்னுக்கு கொண்டுவர நல்ல வழிகள் பல இருக்கு. சிந்தித்து செயல் பட்டால் இந்த அரசால் முடியும், இது மக்கள் விரோத அரசாக இல்லை. பொது மக்களும் ஆதரவு கொடுக்கணும், குழந்தை இல்லாத முதல்வர்களால் தான் பொதுமக்களுக்கு நன்மை செய்யமுடியும். அதற்கு கால அவகாசம் தேவை. நாம் நினைப்பது போல மின்சாரம் உடனே கிடைக்கணும் என்றால் நடக்காது. நாம் யாரும் அரசிடம் அனுமதி பெற்று வீடு கட்டுவதில்லை. பின்பு அரசுக்கு எப்படித்தெரியும், உங்களின் தேவை,குடிநீர்,அரிசி,பெட்ரோல்,மிசாரம்,நம்மளால் முடிந்த மக்கள்தொகைஏய் கட்டுப்படுத்தும் செயலையாவது நாட்டிற்காக செய்கிறோமா,இல்லை சாராயம் குடிக்காமல் ,நாட்டுக்காக வேண்டாம் என சொல்கிறோமா,ஏதும் நாட்டிற்கு என நல்லது செய்யாமல் நாம் எல்லாம் வேணும் என எதிர்பார்ப்பது எப்படி நல்ல மனப்பான்மை என சொல்லமுடியும்.
Rate this:
2 members
1 members
5 members
Share this comment
செந்தமிழ் கார்த்திக் - NamakkaL to ChennaI,இந்தியா
29-ஜன-201310:02:12 IST Report Abuse
செந்தமிழ் கார்த்திக் இந்தியாவையே ஏமாற்றி தமிழின துரோகி கருணாவின் துணையுடன், தோற்ற தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவிக்க பட்டு இன்று நிதி அமைச்சராக உள்ளார் ஒருவர்.. அப்போதே ஏமாற்றி விட்டார் .. இன்று இந்த காங்கிரஸ் களவாணிகளை பற்றி கேட்கவா வேண்டும் ?? என்று தான் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைக்குமோ இந்த இத்தாலி காங்கிரஸ் இடமிருந்து ... விடியலை நோக்கி- செந்தமிழ் ..
Rate this:
7 members
0 members
28 members
Share this comment
Baskaran Kasimani - Singapore,சிங்கப்பூர்
29-ஜன-201309:55:18 IST Report Abuse
Baskaran Kasimani பசி பல துறைகளில் கோலோச்சுவதால் அவரை MM (Multi-purpose Minister) என்று கூட அழைக்கலாம். ஒரு வேளை காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இராகுலுக்கு தலைமை அடிமையாக செயல் படுவார். இந்தியாவில் மன்னராட்சி முறை அமலில் இருப்பது மக்களுக்கு தெரியாமல் போனது ஒரு பெரிய துரதிஷ்டம்.
Rate this:
0 members
0 members
9 members
Share this comment
priyadharshan - Chennai,இந்தியா
29-ஜன-201309:38:21 IST Report Abuse
priyadharshan சுப்ரீம் கோர்ட் சொன்ன பின்னாலும் காவேரி விசயத்தில் அரசிதழில் வெளியிடாததும் அரசின் கொள்கை முடிவோ? என்னமோ கோர்ட் சொன்னவுடனே கேட்கிற மாதிரி.....
Rate this:
0 members
0 members
8 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.