PWD waste government fund | இடிபடப் போகும் கட்டடங்களை பழுது பார்க்கும் பொதுப்பணித் துறை: வீணாகும் அரசு நிதி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இடிபடப் போகும் கட்டடங்களை பழுது பார்க்கும் பொதுப்பணித் துறை: வீணாகும் அரசு நிதி

Updated : ஜன 30, 2013 | Added : ஜன 29, 2013 | கருத்துகள் (10)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
இடிபடப் போகும் கட்டடங்களை பழுது பார்க்கும் பொதுப்பணித் துறை:  வீணாகும் அரசு நிதி

கடந்த நிதி ஆண்டில் ஒதுக்கப்பட்ட நிதியை, வரும் மார்ச் இறுதிக்குள் செலவழிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக, பள்ளி கல்வித்துறை வளாகத்தில், இடிக்கப்பட உள்ள கட்டடங்கள் என, நன்கு தெரிந்தும், பராமரிப்பு பணிகளை, பொதுப்பணித் துறை செய்து வருகிறது. இதனால், லட்சக்கணக்கான ரூபாய் அரசு பணம் வீணாகி வருகிறது.சென்னை, கல்லூரி சாலையில் உள்ள, டி.பி.ஐ., வளாகத்தில், பள்ளி கல்வித்துறை இயக்குனரக அலுவலகங்கள் மற்றும் மத்திய அரசின் பல்வேறு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.பரந்து விரிந்த இந்த வளாகத்தில், ஆங்கிலேய ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட, பிரதான கட்டடம் (தற்போது, பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலகம்) உள்ளிட்ட சில கட்டடங்கள் மற்றும் தமிழக அரசு கட்டிய கட்டடங்களும் உள்ளன.இவற்றில், நூலகம், கணினி அலுவலகம், ஆங்கிலோ இந்தியப் பள்ளி அலுவலக வளாகம் மற்றும் சமீபத்தில் கட்டப்பட்ட தொடக்க கல்வி இயக்குனரகம் ஆகிய நான்கு கட்டடங்களை தவிர்த்து, மீதியுள்ள அனைத்து அலுவலகங்களையும் இடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இடிக்கப்பட்ட அலுவலகங்களையும் உள்ளடக்கி, "அறிவுசார் பூங்கா'வை உருவாக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த சட்டசபை கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்ட இத்திட்ட பணிகள், மும்முரமாக நடந்து வருகின்றன.வளாகத்தில் உள்ள, 10 தளங்களைக்கொண்ட சம்பத் மாளிகை, பள்ளிக்கல்வி இயக்குனரகம், மெட்ரிக் பள்ளி இயக்குனரகம், தேர்வுத்துறை இயக்குனர் அலுவலகம் உட்பட, 10க்கும் அதிகமான கட்டடங்கள், விரைவில் இடித்து தரை மட்டமாக்கப்பட உள்ளன.இடிப்பு பட்டியலில், மெட்ரிக் கல்வி இயக்குனரக அலுவலகமும் உள்ளது. இதன் தரைத்தளத்தில், பழுதடைந்த சுவர்களை, சரிசெய்யும் பணி நடந்து வருகிறது. சுவர்களின் அடிப்பகுதியை தட்டி எடுத்துவிட்டு, "மார்பிள்' கற்களை பதிக்க பொதுப்பணித் துறை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஓரிரு மாதங்களில் இடிக்கப்பட உள்ள கட்டடம் என, நன்கு தெரிந்தும், தற்போது நடந்து வரும் சீரமைப்பு பணியால், அரசுக்கு, பல லட்சம் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளது.பல இடங்களில், தரையில், புதிய கற்கள் பதிக்கப்பட்டு வருகின்றன.கடந்த நிதி ஆண்டில், பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு பணிகளுக்காக ஒதுக்கிய நிதியை, வரும் மார்ச் இறுதிக்குள் செலவழிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக, அவசரம், அவசரமாக, இந்த பணிகள் நடந்து வருவதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.வளாகத்தில் உள்ள பொதுப்பணித் துறை, உதவி செயற் பொறியாளர் அலுவலக அதிகாரிகள் கூறுகையில், "ஆறு மாதங்களுக்கு முன், டெண்டர் எடுத்த ஒப்பந்ததாரர், இப்போது தான், வேலையை ஆரம்பித்துள்ளார். மெட்ரிக் இயக்குனரக அலுவலகத்தில், வெறும், 2.5 லட்சம் ரூபாய்க்கான வேலை தான் நடக்கிறது' எனத் தெரிவித்தனர். ஆனால், இந்தப் பணியுடன், மற்ற வேலைகளுக்கான செலவுகளையும் சேர்த்தால், பல லட்சம் ரூபாய், அரசு பணம் வீணாகும்.கணக்குக்காக காசை கரியாக்குவதை தடுத்து நிறுத்தி, அந்த நிதியை பயன்படுத்தி, நகரில் உள்ள ஏதாவது ஒரு அரசுப் பள்ளியில், புதிதாக சில வகுப்பறைகளை கட்ட, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கல்வித்துறை ஊழியர்கள் வலியுறுத்துகின்றனர்.- நமது நிருபர் -Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
navaneethan - பெங்களூரு,இந்தியா
30-ஜன-201300:17:56 IST Report Abuse
navaneethan உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா?
Rate this:
Share this comment
Cancel
Sugumar Smi - Chennai,இந்தியா
29-ஜன-201314:37:37 IST Report Abuse
Sugumar Smi Thanks to Dinamalar for publishing this news.
Rate this:
Share this comment
Cancel
chinnamanibalan - Thoothukudi,இந்தியா
29-ஜன-201310:28:29 IST Report Abuse
chinnamanibalan ஏற்கனவே பொதுப்பணி துறையினர் கட்டும் கட்டிடங்கள் ஓராண்டு நிறைவு காண்பதற்கு முன்னரே கட்டிடத்தில் வெடிப்புகளும், மழை பெய்தால் நீர்க் கசிவும் ஏற்படுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. இதற்கான காரணம் தாராளமாக பெறும் கமிசன் மற்றும் கட்டிங் ஆகும். இந்த அவ லட்சணத்தில் இடிக்கப்போகும் கட்டிடத்திற்கு பழுது பார்த்தல் பணி என்றால் அரசுப்பணம் கொள்ளையோ கொள்ளைதான்...
Rate this:
Share this comment
Cancel
Baskaran Kasimani - Singapore,சிங்கப்பூர்
29-ஜன-201310:18:14 IST Report Abuse
Baskaran Kasimani "அறிவுசார் பூங்கா" - பகுத்தறிவுக்கு ஏன் பூங்கா அமைக்கவில்லை?
Rate this:
Share this comment
Cancel
Hari Doss - Pollachi,இந்தியா
29-ஜன-201308:30:12 IST Report Abuse
Hari Doss இப்படி ஒதுக்கீடு செய்யப் படும் நிதியினை அந்த ஆண்டே உபயோகப் படுத்த வேண்டும் என்று கட்டாயப் படுத்துவதால் தான் இது போன்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. இதைத் தடுக்க எவ்வளவு நிதி செலவிடப் பட்டதோ அந்த அளவிற்கு பணியினை முடித்துவிட்டு மீதம் உள்ள பணியினை அடுத்த நிதியாண்டிற்குள் கண்டிப்பாக முடித்து விட வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால் ஏதாவது செய்து பணம் வீணே செலவு செய்யாமல் தடுக்கப் படும். ஒப்பந்தக் காரர் தாமதித்தால் ஒப்பந்தத்தினை இரத்து செய்து பின்னர் வேறு ஒருவருக்குக் கொடுக்க சட்டத்தில் வகை செய்யப் பட்டுள்ளதே அதை ஏன் கடை பிடிக்க வில்லை. இடிக்கப் படும் என்று தெரிந்துள்ளதால் குறைவாகச் செய்து மீதிப் பணத்தை பங்கு போடா நல்ல வாய்ப்பாக இப்பணியினை செய்யும் அனைவரும் பயன் படுத்துவார்களே. வேலையின் தரம் குறைந்தல்லவா இருக்கும்.
Rate this:
Share this comment
Cancel
29-ஜன-201307:40:47 IST Report Abuse
அறிவாலயம் c / o போயஸ் இறந்தபின்னும் கூட நல்ல ஆடை, பன்னீர் தெளித்து மாலையிட்டு மலர் வளையத்துடன் சிம்மாசனம் போல் நாற்காலியில் உட்காரவைத்து அழைத்து செல்வதில்லையா? இதெல்ல்லாம் நம்ம அரசு அதிகாரிகளுக்கு ஜுஜூபி
Rate this:
Share this comment
villupuram jeevithan - villupuram,இந்தியா
29-ஜன-201308:46:12 IST Report Abuse
villupuram jeevithanகருத்து, உதாரணம் பிரமாதம், போங்கள். கலக்கிட்டீங்க>...
Rate this:
Share this comment
Cancel
aymaa midas=vison2023 - kodanaatu, koththadimai kuppam, vilaiyilaa kaiyuttu ,நிய்யூ
29-ஜன-201304:46:04 IST Report Abuse
aymaa midas=vison2023 அண்ணா வளைவு போல் திட்ட பணிகளை செய்ய அய்மாவுக்கு ரெம்ப பிடிக்கும்.அய்மா ஆக்க சக்தியல்ல அழிவு சக்தி.எடுத்துகாட்டு மிடாஸ் சரக்கு விற்பனை குறைவால் நடவடிக்கை 18 பேர் இடைநீக்கம் என்ன கர்மம்டா. எத்தனையோ வளர்ச்சி பணிகள் முடங்கி கிடக்கு அந்த அந்த துறை அதிகாரிகள் துங்கி கொட்டாவி விட்டு போகிறார்கள் அது எல்லாம் இந்த அம்மாவின் நொல்லை கண்ணுக்கு தெரியல சக்கொதரியின் வருமானம் போய்விட்டதும் எவ்வளவு வேகமான பருப்பான ஆக்சன் ஐயோ இவர்கள் நிர்வாக திறமையை என்னவென்று சொல்ல...........................,
Rate this:
Share this comment
Baskaran Kasimani - Singapore,சிங்கப்பூர்
29-ஜன-201310:21:12 IST Report Abuse
Baskaran Kasimaniநாய் வாலை நேராக்க முடியுமா?...
Rate this:
Share this comment
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
29-ஜன-201304:45:47 IST Report Abuse
villupuram jeevithan இடிபட போகும் கட்டிடம் இடிக்கும் வரை நன்றாக இருக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் ரிப்பேர் செய்கிரார்கள். இந்தியாவில் அரசு அதிகாரிகளின் செயல்பாடுகள் இப்படித்தான் இருக்கின்றன. என்று திருந்துவார்களோ என்ற மக்களின் மனக் குமரலை நன்கு வெளிப்படுத்தியுள்ளீர்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை