அதிருப்தி! மனுக்கள் அளிக்க வரும் பொதுமக்கள்... பாதியில் வெளியேறும் மாவட்ட கலெக்டர்
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

நாமக்கல்: நாமக்கல் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், நேற்று நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில், மாவட்ட கலெக்டர், சிறிது நேரம் வரை மட்டுமே அமர்ந்து, மக்களிடம் மனுக்களை பெற்றார். அதன்பின், வேறு அலுவல் பணி காரணமாக, கலெக்டர், அவரது சேம்பருக்கு சென்றுவிட்டார். ஒவ்வொரு கூட்டத்தின்போதும், இது தொடர்வது, மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், வாரந்தோறும், திங்கட்கிழமை, மக்கள் குறைதீர் கூட்டம் நடப்பது வழக்கம். அந்த கூட்டத்திற்கு, மாவட்ட கலெக்டர், மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் போலீஸ் துறையை சேர்ந்த உயரதிகாரிகள் உட்பட அனைத்து துறையை சேர்ந்த அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்பர்.
மாவட்டம் முழுவதும் உளள மக்கள், தங்களது பல்வேறு குறைகள் சம்மந்தப்பட்ட புகார் மனுக்களை, மாவட்ட கலெக்டரிடம் நேரடியாக வழங்குவர். சில சமயங்களில், தங்களது பிரச்னை குறித்து, கலெக்டரிடம் எழுத்துப்பூர்வமாக மட்டுமின்றி, நேரடியாகவும் மக்கள் விளக்கிக் கூறுவர்.
இது, கலெக்டர், மக்கள் இடையே நிலவும் இடைவெளியை குறைக்க உதவுகிறது. அதே நேரத்தில், மக்களிடம் இருந்து பெறும் புகார் மனுக்களுக்கு, தொடர்புடைய அதிகாரிகளை, கலெக்டர் நேரடியாக அழைத்து, மனு மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்படி உத்தரவிடுவார்.
கலெக்டர் உத்தரவுப்படி, சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளும், நடவடிக்கை மேற்கொள்வர். இக்குறைதீர் கூட்டம், அதிகபட்சமாக, மதியம், 1, மணி வரை நடத்தப்படும். அதுவரை, கலெக்டர், கூட்டத்தில் அமர்ந்து, மக்களிடம் மனுக்கள் பெற்று விசாரணை நடத்துவார். முக்கிய அலுவல் பணி மற்றும் வேறு ஆய்வு பணி இருந்தால் மட்டுமே, மக்கள் குறைதீர் கூட்டத்தில், கலெக்டருக்கு பதில், அதற்கடுத்த நிலையில் உள்ள டி.ஆர்.ஓ., தலைமையில் கூட்டம் நடத்தப்படும்.
இந்நிலையில், நாமக்கல் மாவட்ட கலெக்டராக ஜகந்நாதன் பொறுப்பேற்றது முதல், ஒரு குறைதீர் கூட்டத்தில் மட்டுமே, முழு நேரமும், மக்களிடம் மனுக்களை பெற்றுள்ளார். பெரும்பாலான கூட்டங்களில், ஆரம்பத்தில் சிறிது நேரம் மட்டும், மக்களிடம் மனு பெறுவார். பின்னர், வேறு அலுவல் பணி மேற்கொள்ள, கலெக்டர் சேம்பருக்குச் சென்றுவிடுவார்.
அதன்பின், டி.ஆர்.ஓ., செங்குட்டுவன், கலெக்டர் நேர்முக உதவியாளர் (பொது) ஆகியோர் மனுக்கள் பெறுவர். கூட்டத்தில் பங்கேற்கும் பிற அலுவலர்களும், சம்பிராயத்திற்காக கூட்டத்தில் அமர்ந்து விட்டு கிளம்பிச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். நேற்றைய மக்கள் குறைதீர் கூட்டத்திலும், மாவட்ட கலெக்டர் ஜகந்நாதன், சிறிது நேரம் மட்டுமே இருந்தார்.
பின்னர், கலெக்டர் சேம்பருக்கு, அவர் சென்றுவிட்டார். அலுவல் பணி காரணமாக, கலெக்டர் ஜகந்நாதன் சேம்பருக்கு சென்றுவிட்டார் என, அங்கிருந்த அலுவலர் கூறினர். அதையடுத்து, டி.ஆர்.ஓ., செங்குட்டுவன், மக்களிடம் மனுக்களை பெற்றார். பகல், 12.30 மணிக்கு மேல் நலத்திட்ட உதவி கொடுக்க மட்டும், கூட்ட அரங்குக்கு கலெக்டர் ஜகந்நாதன் வந்தார். இது, மனு அளிக்க வந்த மக்கள் மத்தியில், பெரும் அதிருப்தியை ஏறபடுத்தியுள்ளது.
பொதுமக்கள் சிலர் கூறியதாவது:
மக்கள் குறைதீர் கூட்டத்தில், எங்களது பிரச்னை சம்மந்தமாக, மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து மனு அளிக்கலாம் என வந்தோம். எனினும், கலெக்டர் இல்லாததால், மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு அளித்தோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
விவசாயிகள் விரக்தி
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒவ்வொரு மாதம் கடைசி தேதியில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடக்கும். கலெக்டர் அந்த கூட்டத்துக்கு தலைமை வகிப்பார். டி.ஆர்.ஓ., உட்பட அனைத்து துறை அதிகாரிகளும் கூட்டத்தில் பங்கேற்பர். விவசாயிகள் தெரிவிக்கும் புகார் மீது சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் மூலம் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இந்நிலையல் கடந்த இரு விவசாய குறைதீர் கூட்டமும் டி.ஆர்.ஓ., செங்குட்டுவன் தலைமையில் நடந்தது. அலுவல் பணி காரணமாக கலெக்டர் ஜகந்நாதன் கூட்டத்தில் பங்கேற்க இயலவில்லை என்றாலும், கலெக்டரிடம் நேரடியாக குறை குறித்து தெரிவிக்க இயலாதது, விவசாயிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்