சேலம்: சேலம், பெங்களூருவில் உள்ள கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை வழங்குவதாக கூறி இளைஞர்களிடம், 1.5 கோடி ரூபாய் வரை வசூல் வேட்டை நடத்திய கும்பல் குறித்து, போலீஸ் கமிஷனர் மாஹாலியிடம் புகார் அளிக்கப்பட்டுள்
ளது.
சேலத்தை சேர்ந்த மூர்த்தி என்பவர் தலைமையில், 40க்கும் மேற்பட்டோர் நேற்று கமிஷனர் மாஹாலியிடம் அளித்த புகார் மனுவில், சேலம் சூரமங்கலத்தை சேர்ந்தவர் கந்தசாமி மகன் பிரேம், 35. கம்ப்யூட்டர் இன்ஜினியரான அவர், மதுசூதனன், சபரிநாதன் ஆகியோருடன் சேர்ந்து, சேலத்தில் ஆதார சாப்டே டெக்னாலஜி என்ற கம்ப்யூட்டர் நிறுவனத்தை துவக்கினார்.
அந்த நிறுவனத்தில், ஒரு லட்சம் ரூபாய் டெபாஸிட் செலுத்துபவர்களுக்கு, 10 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் வேலை தருவதாக உறுதி அளித்தனர்.
அதை நம்பி, சேலம், கரூர், திருச்சி, மதுரை, திருநெல்வேலி, சென்னை, கோவை மாவட்டங்களை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, கர்நாடகா, கேரள மாநிலத்தவர்களும் டிபாஸிட் செலுத்தினர்.
பணம் டிபாஸிட் செய்தவர்களுக்கு, முதல் மூன்று மாதம் சம்பளம் வழங்கியவர்கள், பின் வழங்க மறுத்து விட்டனர்.
இதுவரை, 150க்கும் மேற்பட்டோர், இந்த நிறுவனத்தை நம்பி பணம் செலுத்தினோம். பணத்துடன் அவர்கள், தலைமறைவாகி விட்டனர்.
எனவே, அந்த கும்பல் மீது நடவடிக்கை எடுத்து, பணத்தை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.