மதுரை:
""ஷார்ஜா - மதுரை விமான போக்குவரத்துக்கு மத்திய அரசு அனுமதி அளிக்க
வேண்டும்,'' என, தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தினர் மத்திய அரசை
வலியுறுத்தினர்.ஏர்அரேபியா நிறுவன இயக்குனர் டோனிவிட்பை நேற்று மதுரை
வந்தார். அவரை, மாணிக்கத்தாகூர் எம்.பி., தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க
முதுநிலை தலைவர் ரத்தினவேலு, டிராவல் கிளப் தலைவர் முஸ்தபா, விமான நிலைய
இயக்குனர் சங்கையா பாண்டியன், முன்னாள் எம்.பி.,ராம்பாபு சந்தித்து ஆலோசனை
நடத்தினர்.டோனிவிட்பை பேசியதாவது: ஏர்அரேபியா நிறுவனம் மத்திய கிழக்கு
நாடுகளில் குறைந்த கட்டணத்தில் இயங்கும் பெரிய விமான நிறுவனம்.
தற்போது
ஷார்ஜாவில் இருந்து, இந்தியாவில் 13 நகரங்களுக்கு சேவை அளிக்கிறது.
தமிழகத்தில் ஷார்ஜா-சென்னை சேவை வாரம் 7 நாட்கள், கோவைக்கு 5 நாட்கள்
உள்ளன. அடுத்து தங்கள் சேவையை மதுரைக்கு துவக்கவும், 168 பேர் பயணிக்கும்
வகையிலான ஏ320 ரக விமானமும் தயாராக உள்ளது, என்றார்.மாணிக்கத்தாகூர்
எம்.பி., கூறியதாவது: தென்மாவட்டத்தினர் ஷார்ஜா செல்ல, சென்னை அல்லது
கேரளாவுக்கு செல்ல வேண்டும். ஐக்கிய அரசு குடியரசு நாடுகளுக்கு இடையே விமான
இருவழி ஒப்பந்தத்தில், மதுரை விமான நிலையம் இடம்பெறாததால், இச்சேவை துவக்க
தடையாக உள்ளது. இதற்கு விமான போக்குவரத்து, நிதித்துறை அமைச்சர்கள் மூலம்
ஆவன செய்வேன், என்றார்.வர்த்தக சங்கத்தினர் கூறுகையில், ""இச்சேவையை துவக்க
தாமதமாகும் சூழலில், ஷார்ஜா-மதுரை விமான சேவைக்கு துவக்க ஏர்அரேபியா
நிறுவனம் தயாராக உள்ளது. இந்நிறுவனத்திற்கு அனுமதி கிடைக்க, இருவழி
ஒப்பந்தத்தில் மதுரை விமான நிலையம் சேர்க்கப்பட வேண்டும். அதற்கு முன்,
தற்காலிக இருக்கை எண்ணிக்கை உரிமை ஒதுக்கீடு அடிப்படையில், அவர்களுக்கு
வாரம் 2532 இருக்கைகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும். பின், 168 பயணிகள்
செல்லும் விமானம், ஷார்ஜாவில் இருந்து மதுரை வந்து திரும்ப வாய்ப்பளிக்க
வேண்டும், என்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
எங்கும் தமிழ் எதிலும் தமிழ் வீழ்வது நாமாக இருந்தாலம் வாழ்வது தமிழக இருக்க வேண்டும் என்று வீர வசனம் பேசிய கட்டுமரதனின் மருமகன் நடத்தும் .... விமான சேவை சிறிது நாட்களுக்கு முன்பாக ரியாத் இல் இருந்து சேவை துவங்க பட்டது ஆனால் அந்த சேவை தமிழகத்தின் எந்த நகருக்கும் இல்லை மாறாக delhi, ahemadabad , பெங்களுருக்கு சேவை இருக்கிறது. வடக்கு valgiradhu terkku theigiradhu engira வசனம் inge ஆனால் விமான சேவையோ வடக்கிற்கு மட்டும் தான் பெங்களுரு புண்ணியம் செய்தது ஆனால் தமிழகம் பாவம் செய்தது. குறைந்த கட்டணத்தில் தமிழர்கள் அனுபவிக்க கூடாது என்கிற நல்ல எண்ணம் உங்கள் மருமகன்களுக்கு மாமனே மாமனே

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.