கோல்கட்டா: மேற்குவங்க மாநிலத்தில் பெண் பத்திரிகை நிருபரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக எல்லை பாதுகாப்புப்படை வீரர் கைது செய்யப்பட்டார். மேற்குவங்க மாநிலம் வடக்கு கோல்கட்டாவைச் சேர்ந்தவர் மணீஷ் ராஜிந்தர். இவர் எல்லைப் பாதுகாப்புபடையில் பணியாற்றி வருகிறார். நேற்று ஷியாம்பஜார் பகுதியில், ரெஸ்டாரண்ட் ஒன்றில் மது அருந்தி விட்டு வெளியே வந்தார்.
அப்போது அங்கு வந்த பெண் ஒருவரை கேலி செய்தும், ஆபாச வார்த்தைகளால் அவரை அணுகி மானபங்கம் செய்ய முயன்றார். கூச்சலிட்ட அப்பெண்ணை பொதுமக்கள் காப்பாற்றி, மணீஷ் ராஜிந்தரை பிடித்தனர். இது குறித்து அந்த பெண் ஷியாம் பஜார் போலீசில் நிலையத்தில் புகார் கூறினார். போலீஸ் துணை கமிஷனர் கவுரவ் ஷர்மா, மணீஷ் ராஜிந்தரை கைது செய்தார். போலீஸ் விசாரணையில் , புகார் கொடுத்த பெண் வங்க தேச பத்திரிகை ஒன்றின் நிருபர் என தெரியவந்தது. பி..எஸ்.எப். வீரரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.