இஸ்லாமாபாத்: பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு பாதுகாப்பு கொடுங்கள் என பாக்.உள்துறை அமைச்சர் , இந்தியாவிற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். பாலிவுட் சினிமா உலகின் முன்னணி நடிகர், ஷாருக் கான் (47) இவர் கவுரி என்ற பெண்ணை மணந்து, மும்பையில் வாழ்ந்து வருகிறார்.சமீபத்தில், பத்திரிகை ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் , நான் முஸ்லிம் என்பதால், அரசியல்வாதிகளால் அவ்வப்போது மிரட்டப்படுகிறேன். அண்டை நாடான பாகிஸ்தானுடன் அடிக்கடி தொடர்பு படுத்தப்படுகிறேன்.நான் இந்தியனாக இருந்த போதிலும், வேறுபடுத்தப்படுகிறேன். என்னை மும்பையை விட்டு வெளியேற்றவும், பாகிஸ்தானுக்கு செல்லும் படியும், நான் மிரட்டப்படுகிறேன் என கூறியிருந்தார்.
பாக். வாருங்கள்: ஹபீஸ் சயீத்
இதை அறிந்த, பாக்., பயங்கரவாத அமைப்புகளின் தலைவன், ஹபீஸ் முகமது சயீத், ஷாருக்கானுக்கு வெளிப்படையாக அழைப்பு விடுத்துள்ளார். அதில், இந்தியாவில் உங்களுக்கு பாதுகாப்பு இல்லை என நீங்கள் உணர்ந்தால், பாகிஸ்தான் வரலாம்; உங்களை வரவேற்க காத்திருக்கிறோம். பாகிஸ்தானில் நிரந்தரமாக தங்க ஏற்பாடு செய்கிறோம். உங்களுக்கு போதிய மரியாதை அளிக்கப்படும். ஷாருக்கிற்கு, பாகிஸ்தான் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கிறது,'' என்றார்.
பாதுகாப்பு கொடுங்கள்: ரஹ்மான் மாலிக்
இந்நிலையில் பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக், நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளி்த்தார். அவர் கூறியதாவது: ஷாருக்கானை முஸ்லிம் என பார்க்க வேண்டாம். ஷாருக்கான், இந்திய ரசிகர்களால் மட்டுமல்ல பாகிஸ்தான் ரசிகர்களும் விரும்பும் ஒரு நடிகர். அவரை வேறுபடுத்தி பார்க்க வேண்டாம். அவருக்கு பிரச்னை என்றால், இந்தியா உரிய பாதுகாப்பு கொடுக்க வேண்டும். இந்தியாவில் மட்டுமல்ல, அவர் பாகிஸ்தான் ரசிகர்களால் நேசிக்கப்படும் நடிகர். இதுநாள் வரை அவரை மிரட்டியவர்கள், எதிராக செயல்படுபவர்கள் , அதனை விலக்கிக்கொள்ளுங்கள், ஷாருக்கானை ஒற்றுமையின் சின்னமாக , இந்திய சகோதர, சகோதரிகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதே எனது ஆசை. இவ்வாறு ரஹ்மான்மாலிக் கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
ஒரு காலத்தில் பம்பாய் முழுமையாக தாவூத்க்ஹான் பிடியில் [பட உலகம் ]படம் தயாரிப்பு ,வெளியீடு யார் நடிகர் /எந்த தியேட்டர் எப்போது வெளியீடு யாருக்கு எவ்வளவு பணம் என்பதை அவரே தீர்மானிப்பார் என்று கூறினார்கள்அதனால் தான் இத்தனை கான்கள் உலா வர முடிந்தது ராஜ் கபூரும் தேவ் ஆனந்தும் இன்னும் சிலரும் தப்பி பிழைத்த காலம் போய் முழு பட உலகமும் தாவூத்தின் கையில் வந்ததும் கான்களின் ஆதிக்கம் அதிகமே நிலைமை இப்போது மெதுவாக மாறுகிறதோ ?என்று என்ன தோன்றுகிறது >>>>.
யப்பா மாலிக், உன் கோவணத்தையே உன்னால காப்பாத்திக்க முடியல....இதுல ஷாருக்கான் டவுசர் அவுந்துராம புடிசிக்கிரியாக்கும்? முதல்ல நீயோ உன் சகாக்களோ வசீரிஸ்தானில் உள்ள பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிக்கு பாதுகாப்பாக போய் திரும்பி வா பார்ப்போம்...பாகிஸ்தானின் சில பகுதிகள்ல உன் நாட்டு இராணுவமே நுழைய முடியல..இதுல நீ இந்தியாவின் பாதுகாப்பை பற்றி பேச வந்துட்ட.....முதல்ல உன் பாகிஸ்தான் மக்களை தாலிபான்கிட்ட இருந்து காப்பாத்து.....அப்புறம் நீ ஷாருக்கானை காப்பாத்தலாம்.....அரைவேக்காடு பயலுக.......
ஷா ருக் கான் முதிர்ச்சி இல்லாதவர். மும்பை கிரிகெட் மைதானத்தில் எப்படி நடந்து கொண்டார் என்பது எல்லோருக்கும் தெரியம். ஒளி வட்டத்திற்குள் இருப்பதற்காக எதையும் செய்பவர். இதுவும் அது மாதிரிதான்.
முதலில் பாகிஸ்தான் உள்துறை அமைச்சர், ரஹ்மான் மாலிக் தன்னை பாகிஸ்தானில் பத்திரமாக பார்த்துக்கொள்ளட்டும்.
கே.செந்தில்நாதன்.
மதிப்பிற்குரிய உள்துறை அமைச்சர் (pakisthaan)அவர்களே....முதலில் நித்தம் வெடிக்கின்ற குண்டுகள் அப்பாவி மக்களை பதம் பார்க்கின்றன.... உங்களுடை மக்கள் சுபிச்சமாக வாழ முதலில் பாதுகாப்பு கொடுங்கள்.... தாங்கள் மேதாவியாக உலகிற்கு காட்ட நினைத்தால் ......நாங்கள் 1971 ஆம் ஆண்டை நினைவு படுத்த வேண்டி வரும்.....நா காக்க வேண்டும்....

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.