முற்றுகிறது தெலுங்கானா விவகாரம்: மத்திய அரசுக்கு விதிக்கப்பட்ட 24 மணி நேர கெடு முடிகிறது
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

ஐதராபாத்: 24 மணி நேரத்தில் தெலுங்கானா தனி மாநில அறிவிப்பை மத்திய அரசு வெளியிட வேண்டும் என தெலுங்கானா ஆதரவு அமைப்புகள் கெடு விதித்திருந்தன. இந்த கெடு இன்றுடன் முடிவடைவதால் தெலுங்கானா விவகாரம் மத்திய அரசிற்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திராவை இரண்டாக பிரித்து தனித்தெலுங்கானா மாநிலம் உருவாக்கிட பல ஆண்டுகளாக கோரிக்கை எழுந்து வருகிறது. இது தொடர்பாக கடந்த ஆண்டு டிசம்பரில் கூட்டிய அனைத்துக்கட்சி கூட்டத்தில் ஒரு மாதத்தில் தெலுங்கானா கோரிக்கைக்கு முடிவு கிடைக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே கூறினார். ஆனால் இதுவரை எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படாததால் தெலுங்கானா பகுதியில் தற்போது பதட்டம் நீடிக்கிறது. இந்நிலையில் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி மற்றும்‌ தெலுங்கானா கூட்டு நடவடிக்கை குழு , இன்னும் 24 மணி நேரத்தில் தனித்தெலுங்கானா மாநிலம் குறித்த அறிவிப்பை வெளியிட வேண்டும் என கெடு விதித்துள்ளன.

தெலுங்கானா விவகாரத்தில் மத்திய அரசு உடனடியாக இறுதி முடிவை எடுக்காவிட்டால் தங்களின் பதவிகளை ராஜினாமா செய்யப் போவதாக தெலுங்கானா பகுதி காங்கிரஸ் அமைச்சர்களும் எம்.பி.,க்களும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இது குறித்து தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி தலைவர் சந்திரசேகரராவ் கூறுகையில், தெலுங்கானா மக்களை மத்திய அரசு ஏமாற்றி விட்டது என்றார். கோரிக்கை நிறைவேறும் வரை எங்களின் போராட்டம் தொடரும் எனவும் கூறினார். இது குறித்து பா.ஜ. வெளியிட்டுள்ள அறிக்கையில், தெங்கானா தனி மாநில விவகாரத்தில் பிரதமர் மன்மோகன்சிங் தனது நிலைப்பாடு குறித்த அறிக்கையினை தெளிவாக வெளியிட வேண்டும் என்றது. பா.ஜ. தேசிய தலைவர் ராஜ்நாத்சிங் கூறுகையில்,தெலுங்கானா விவகாரம் குறித்து பலமுறை பார்லி‌மென்ட்டில் விவாதங்கள் நடந்தன. ஆனால் மத்திய அரசு காலநிர்ணயம் செய்யாமல் காலதாமதம் செய்து வருகிறது.இறுதி முடிவினை எடுக்க தயங்குகிறது என்றார். இதையடுத்து தெலுங்கானா விவகாரம் ஆந்திர மாநிலத்தில் சூடுபறக்கிறது. பல்வேறு போராட்டங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (12)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
babu - tiruchi,இந்தியா
31-ஜன-201304:23:27 IST Report Abuse
babu ஹைதராபாத் இஸ்லாமியர்களின் பெரும்பான்மை, இந்தியாவுக்குல் ஒரு பாகிஸ்தான் உருவாகலாம், காரணம் பாகிஸ்தான் ஆதரவு விஷயங்கள் கிரிக்கெட்டில் அறிவோம்,.
Rate this:
Share this comment
Cancel
vasan - doha,கத்தார்
29-ஜன-201315:13:10 IST Report Abuse
vasan ஒவ்வொரு சாதியினருக்காக மாநிலத்தை பிரித்தால் நாடு என்னவாகும்.........
Rate this:
Share this comment
babu - tiruchi,இந்தியா
31-ஜன-201304:36:48 IST Report Abuse
babuநாட்டில் தற்பொழுது நடந்து கொண்டு இருப்பது என்ன ,எங்கெல்லாம் எம் என் சி கம்பனிகள் இருக்கிறதோ அதை நோக்கி நாட்டின் பல புறத்திலிருந்தும் மொழிகளை தாண்டி இனத்தை தாண்டி சென்று வாழ்கிறது, முன்பெல்லாம் வளம் என்பது ஆறு நீரோட்டம் விவசாயம் இதை சார்ந்தது, இபொழுது அது வல்ல எங்கு எம் என் சிகள் இருக்கிறதோ அங்கு தேடி தான் நகரங்களை தேடி தான் மக்கள் கூட்டம், தற்பொழுது இது ஒரு புது சாதி இனம், மொழி பேசி நேரத்தை வீணடிக்கும் சொந்த மண் என்று பேசி வீண் வெட்டி கும்பல் என்றாகி விட்டது, எங்கு பார்த்தாலும் கான்வென்ட் பள்ளிகள் ஆங்கிலம் வகுப்புகள் வெளி நாட்டுக்கும் சென்று படிக்கலாம் இங்கு வந்தாலும் எம் என் சிகளில் பணிபுரியலாம், இது தானே இன்றைய வழி, நாடு முன்னேற ஒரே ஒரு வழி உண்டு, முதலில் மாநிலங்களின் அமைப்பை கலைக்க வேண்டும், நீர் பாசனத்தை வைத்து அந்த அந்த ஆறுகளின் பாசன பகுதியாக பிரித்து விவசாயத்தை முன் நிறுத்த வேண்டும், விவசாயம் மட்டுமே நிலத்தின் இருப்பிடத்தை வைத்து அமைவது, மற்றதெல்லாம் அப்படியல்ல, நாட்டின் எந்த மொழியை வேண்டுமானாலும் எந்த இடத்திலும் பயன் படுத்த முடியும் என்கிற நிலை வர வேண்டும், அப்படி இல்லை என்றால் தக்கணம் கங்கை சமவெளி கல் பிரித்து வைக்க படலாம், மாநிலமே வேண்டாம் தமிழன் அன்றே கூறி விட்டான் நெய்தல் முல்லை பாலை மருதம் குறுஞ்சி என்று,...
Rate this:
Share this comment
Cancel
v j antony - coimbatore,இந்தியா
29-ஜன-201314:31:53 IST Report Abuse
v j antony இந்த கொசு தொல்ல தாங்க முடியல
Rate this:
Share this comment
Cancel
Ganesh Babu - Chennai,இந்தியா
29-ஜன-201313:02:44 IST Report Abuse
Ganesh Babu இந்தியாவை மொழி வாரியாக இன வரியாக பிரித்ததின் விளைவுகளை இப்போது இந்தியா அனுபவித்துக்கொண்டு இருக்கிறது. ஆந்திராவை பிரித்தால் அது நல்லதில்லை. இப்போது பாகிஸ்தான் பிரியாமலிரிந்திருந்தால் இன்று ஒன்று பட்ட இந்தியா ஒரு வல்லரசாக இருந்திருக்கும்.
Rate this:
Share this comment
navaneethan - பெங்களூரு,இந்தியா
30-ஜன-201302:52:47 IST Report Abuse
navaneethanவெளங்கி இருக்கும்....
Rate this:
Share this comment
Cancel
Balaji Natarajan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
29-ஜன-201312:47:29 IST Report Abuse
Balaji Natarajan நல்லா மாட்னீங்கடி (மத்திய அரசு) மாப்பிளைகளா.....இங்க பெருச (மு.க) வச்சே மஞ்ச குளிசீக......அங்க முடியுமா......தமிழ் நாடு னு நினசீகளோ......
Rate this:
Share this comment
Cancel
chit ra - Andaman,இந்தியா
29-ஜன-201312:10:23 IST Report Abuse
chit ra தமிழ் நாட்டை இந்தியாவை விட்டு பிரித்து விடுங்கள். அனைத்து தேவைகளும் உலகளாவிய சட்ட திட்டங்களுக்கு இணங்க தன்னிறைவு பெரும் - இலங்கை பிரச்சனையை, தண்ணீர் பிரச்சினை, அத்துமீறல்கள்...
Rate this:
Share this comment
navaneethan - பெங்களூரு,இந்தியா
30-ஜன-201302:53:38 IST Report Abuse
navaneethanசிங்கபூரை மலேசியா பிரித்து விட்டதை போல.....
Rate this:
Share this comment
Cancel
மன்னைபாரதி - காட்டுமன்னார்கோயில்,இந்தியா
29-ஜன-201310:21:54 IST Report Abuse
மன்னைபாரதி ஆந்திராவை பிரிக்க சொல்ல இருக்கும் உரிமை போன்றே, வேண்டாம் என்று சொல்லும் உரிமையும் ராயலசீமா மற்றும் கடலோர பகுதியினருக்கும் இருக்கிறது..
Rate this:
Share this comment
Cancel
christ - chennai,இந்தியா
29-ஜன-201310:07:46 IST Report Abuse
christ எதற்காக ஆந்த்ரா இரண்டாக பிரிக்க வேண்டும் ? அப்படி பிரித்தால் மற்ற மாநிலங்கள் இதுபோல் பிரிக்க போரட்டங்கள் நடத்த மாட்டர்களா ? இதை இந்த சுயநல அரசியல்வாதிகள் சிந்திக்க மாட்டர்களா ?
Rate this:
Share this comment
Cancel
Raju Rangaraj - Erode,இந்தியா
29-ஜன-201308:53:03 IST Report Abuse
Raju Rangaraj மத்திய அரசில் அங்கம் வகிப்பவர்கள் மிகமிக திறமை சாலிகள்எதிர்காலத்தில் காங்கிரஸ் ஆட்சியை இழந்தால் அவர்கள் கவலைப்பட வேண்டியதில்லைதெலுங்கானா பிரச்னையால் ஆட்சி பறிபோனால் அவர்கள் பிழைத்து கொள்வார்கள்தெலுங்கானா விசயத்தில் நன்றாக ஜவ்வு போட கற்று கொண்டதினால்எதிர்காலத்தில் நாடு முழுவதும் ஜவ்வு மிட்டாய் விற்கும் தலை சிறந்த வியாபாரிகளாகி விடுவார்கள்இது சத்தியம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்