All accuseddeserve same punishment, says Amanat's father | மைனரோ, மேஜரோ ஆறு பேரையும் தூக்கிலிட வேண்டும்: டில்லி மாணவியின் தந்தை கோரிக்கை| Dinamalar

பொது செய்தி

இந்தியா

மைனரோ, மேஜரோ ஆறு பேரையும் தூக்கிலிட வேண்டும்: டில்லி மாணவியின் தந்தை கோரிக்கை

Updated : ஜன 29, 2013 | Added : ஜன 29, 2013 | கருத்துகள் (41)
Advertisement
All accuseddeserve same punishment, says Amanat's father மைனரோ, மேஜரோ ஆறு பேரையும் தூக்கிலிட வேண்டும்: டில்லி மாணவியின் தந்தை கோரிக்கை

புதுடில்லி: ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 6 பேரையும் தூக்கிலிட வேண்டும் என மாணவியின் தந்தை கோரிக்கை விடுத்துள்ளார்.

டில்லியில் கடந்த டிசம்பர் 16ம் தேதி, ஓடும் பஸ்சில், மருத்துவ மாணவி 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக, 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில், ஒருவன், 18 வயது நிரம்பாத மைனர் என, தெரிய வந்தது. இதையடுத்து, இந்த வழக்கில் தொடர்புடைய, ஐந்து பேர் மீதான விசாரணை, டில்லி விரைவு கோர்ட்டிலும், 18 வயது நிரம்பாத மைனருக்கு எதிரான விசாரணை, சிறார் நீதிமன்றத்திலும் நடக்கும் என, அறிவிக்கப்பட்டது.இதற்கு, கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. "சிறார் சட்டப்படி விசாரணை நடந்தால், எவ்வளவு கொடூர குற்றம் செய்திருந்தாலும், சம்பந்தப்பட்ட நபருக்கு, அதிகபட்சமாக, மூன்று ஆண்டுகளுக்கு மேல், தண்டனை விதிக்க முடியாது. எனவே, சிறார் சட்டத்துக்கான வயது வரம்பை குறைக்க வேண்டும்' என, பல்வேறு தரப்பினரும், வலியுறுத்தினர். இதற்கிடையே, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள, ஆறாவது நபர், மைனரா, இல்லையா என்பது குறித்து, டில்லியில், சிறார் நீதி வாரியம் அவனது பள்ளி சான்றிதழை வைத்து அவன் 18 வயது நிரம்பாத மைனர் என அறிவித்தது.


சிறார் நீதி வாரியத்தின் இந்த அறிவிப்புக்கு மாணவியின் தந்தை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், இக்கொடூர செயலில் ஈடுபட்டவர்கள் மைனரோ அல்லது மேஜரோ அவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். அவர்கள் 6 பேரையும் தூக்கிலிட வேண்டும். ஒருவரும் தண்டனையிலிருந்து தப்பி விடக்கூடாது என்று தெரிவித்துள்ளார். மேலும், அந்த நபர் 18 வயது நிரம்பாதவன் என்ற சிறார் நீதி வாரியத்தின் அறிவிப்பு தங்களுக்கு எலக்ட்ரிக் ஷாக் கொடுத்தது போன்று உணர்வதாகவும், மிகவும் கொடூரமான செயலில் ஈடுபட்ட அவனை தண்டனையிலிருந்து எளிதாக விடுவித்து விடுவது என்பது நடக்கக்கூடாது என்றும், இது தொடர்பாக தாங்கள் கோர்ட்டில் மேல் முறையீடு செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார்.


Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bava Husain - riyad,சவுதி அரேபியா
29-ஜன-201315:16:56 IST Report Abuse
Bava Husain சரி, மைனருக்கு தூக்கு தண்டனை வேணாம்.... ஆனால் "மைனர் குஞ்சை" சுட்டுவிடுங்கள்...
Rate this:
Share this comment
Cancel
Bava Husain - riyad,சவுதி அரேபியா
29-ஜன-201315:14:28 IST Report Abuse
Bava Husain அறியாமையால் செய்த தவறா இது? திட்டம் போட்டு செய்த கொடூரமான குற்றம்.... தண்டனை என்பது செய்த குற்றத்திற்காகத்தானே தவிர குற்றவாளியின் வயதிற்கல்ல... மாணவியின் தந்தையின் கோரிக்கை நிராகரிக்க கூடியதல்ல.....
Rate this:
Share this comment
babu - tiruchi,இந்தியா
31-ஜன-201304:20:06 IST Report Abuse
babuமாணவியின் தந்தை க்கு முன் இந்த கொடும் செயல் இல்லை இல்லை வேறு எந்த தந்தைக்குமே இப்படியொரு ஆறு பேர் கும்பலால் தன மகள் கற்பழிக்க படும் நிலை வந்தால் கையில் ஒரு வால் இருந்தால் வீசி இருப்பான் அந்த தலைகளை, இந்த மாதிரி ஒரு சம்பவம் ஊருக்குள் தெரிந்து அந்த நபர்களை கட்டி வைத்து தர்ம அடி கொடுத்து பின் தலையை வீசி இருந்தால் தான் கல்லடி கொடுத்து மக்கள் தண்டனையாக மாற்றினால் தான் இந்திய சட்டங்கள் உணரும் மக்களின் தேவை என்ன வென்று, ,...
Rate this:
Share this comment
Cancel
Amanullah - Riyadh,சவுதி அரேபியா
29-ஜன-201314:48:36 IST Report Abuse
Amanullah இந்த 'மைனர்'தான் கொல்லப்பட்ட பெண்ணை இருமுறை பலாத்காரம் செய்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. உண்மை இவ்வாறாக இருக்க, அவனுக்கு வெறும் 3 வருட தண்டனை மட்டும் கொடுத்தால் இது நீதிக்கே இழைக்கப்படும் அநீதி. தவிர அப்படியே அவன் 3 வருட தண்டனை மட்டும் பெற்று வெளியே வந்தால் இந்தியாவில் உள்ள 110 கோடி மக்களில் யாராவது ஒருவரோ அல்லது சிலரோ அவனை அடித்தே கொல்லுவார்கள். சட்டம் தன் பங்கை சரியாகச் செய்யவில்லையெனில் இது கண்டிப்பாக நடக்கும். எழுதி வைத்துக்கொள்ளுங்கள்.
Rate this:
Share this comment
Cancel
saravanakumar - coimbatore,இந்தியா
29-ஜன-201314:32:52 IST Report Abuse
saravanakumar அபோளுதுதன் தவறு செய்ய பயம் வரும்
Rate this:
Share this comment
Cancel
sitaramenv - Hyderabad,இந்தியா
29-ஜன-201314:20:51 IST Report Abuse
sitaramenv சட்டத்தில் இடம் இல்லாவிட்டாலும் இவர்கள் ஆறு பேரையும் தூக்கில் இடுவதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் தூக்கு எனபது எளிதான மரணம். அதை அடைய விடகூடாது. தேவையான அளவு சட்ட விதி விலக்கு பெற்று பின் வருமாறு செய்யலாம். இவர்கள் ஆறு பேரையும் நடுத்தெருவில் பெரிய க்ரேனில் தொங்கவிட்டு, இவர்கள் ஆண் உறுப்புகளை தீ கொண்டு பொசுக்கி விட வேண்டும். பின்பு உடல் முழுதும் பிலேடு கொண்டு கீறி விட வேண்டும். அதன் பின் அதில் மிலகாஇப்பொடியை தூவ வேண்டும். அதன் பின் உயரமான கம்பங்களில் கட்டு தொங்க விட வேண்டும். கழுகுகளும் பருந்துகளும் கொஞ்சம் கொஞ்சமாக இவர்களை கொத்தி மெதுவாக சித்திரவதைப்பட்டு மரணம் அடைய வேண்டும். இந்த வழக்குக்கு மட்டும் விதி விலக்கு அளித்து நீதி மன்றமே பொது மக்களின் ஆதரவோடு இந்த்தண்டனையை நிறைவேற்றலாம். இதில் தவறோ, மனித நேயம் குறைவதோ ..அநாகரீகமோ எதுவுமே இல்லை. கடுமையான தண்டனை அவ்வளவுதான். அத்தண்டனையை தொலைக்காட்சிகளில் காட்டி மக்களுக்கு அறிவித்தால்.........நிச்சயமாக எதிர்காலத்தில் கற்பழிக்கும் குற்றங்கள் குறைந்து விடும்.
Rate this:
Share this comment
Cancel
M.Srinivasan - SADHURVEDHAMANGALAM,இந்தியா
29-ஜன-201314:07:38 IST Report Abuse
M.Srinivasan "மைனர்" என்ற பதத்தை கிராமப் புறங்களில் குறிப்பிடப்படும் "மைனர்" என்றுதான் இந்தவிஷயத்தில் எடுத்துக்கொள்ளவேண்டும்- அவன் செய்துள்ள காரியம் அப்படி எனவே பெண்ணின் தந்தையின் வேண்டுகோள்படி குற்றவாளிகள் அனைவரையும் மரணதண்டனைக்கு உள்ளாக்க வேண்டும். ஈவு இரக்கமற்ற பாவிகளுக்கு கருணை காட்டக்கூடாது.
Rate this:
Share this comment
babu - tiruchi,இந்தியா
31-ஜன-201304:15:43 IST Report Abuse
babuஇவன் மைனர் என்பதால் இவனை வண்டலூர் மிருக சாலையில் சிங்கதிர்க்கோ புலிக்கோ தீனியாக கை மட்டும் கட்ட பட்டு அனுப்ப படலாம், ஆறு பேர் கும்பலில் எவன் கை பிடித்தானோ எவன் கால் பிடித்தானோ, ஒத்தாசையாக செயல் பட்ட அதனை பேருக்கும் கை கட்ட பட்டு பசியுடன் இருக்கும் சிங்கத்திற்கு அனுப்பி வைத்தால் அந்த பெண்ணின் வலியை இவர்கள் உணர்வார்கள்,...
Rate this:
Share this comment
Cancel
Sesha Narayanan - Chennai,இந்தியா
29-ஜன-201313:57:07 IST Report Abuse
Sesha Narayanan மேஜர் மைனர் என்று இன்னுமா விவாதம் நடந்து கொண்டு இருக்கிறது??? வரிசையாக ஒரே கயிற்றில் கூட தூக்கில் போட்டு அதை மீடியாக்கள் மூலம் உலகத்துக்கு தெரிய படுத்தலாம். தப்பே இல்லை. சட்டம் என்பது ஒரு மனிதனின் உரிமையை காக்கத்தானே தவிர இது போல் மிருகங்கள் செய்ய கூடிய வேலைகளை அல்ல.
Rate this:
Share this comment
Cancel
ஹரிபாஸ்கர் - திருச்சி,இந்தியா
29-ஜன-201313:55:40 IST Report Abuse
ஹரிபாஸ்கர் நமது சட்டத்தை நினைத்து பார்த்தால் சிரிப்பதா, அழுவதா என்று தெரியவில்லை, ஒரு மைனர் செய்யும் காரியத்தையா செய்துள்ளான், மைனர்க்கான சலுகை பெற இவனுக்கு எந்த அருகதையும் இல்லை,,,,,இதே போல் நாளை நாட்டை நாசம் செய்யும் தீவிரவாதியும் இது போல் வாதத்தை வைத்தால், அவனுக்கு இதே சலுகை தானா?? இவனுக்கு மைனர் என்ற சலுகை காட்டினால், நாட்டில் மைனர்களின் குற்றம் அதிகரிக்கும்,
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
29-ஜன-201313:41:05 IST Report Abuse
Nallavan Nallavan மத்தவனுங்க கூட சேர்ந்து தன்னை விட மூத்த பெண்ணைக் கற்பழிப்பவன் "மைனர்" சூப்பரப்பு நாடு வெளங்கும்-ன்றீங்க?
Rate this:
Share this comment
Cancel
Ashok ,India - India,இந்தியா
29-ஜன-201313:13:22 IST Report Abuse
Ashok ,India ஆனால் இவன் செய்த செயல் ஒன்றும் சிறுவன் செய்த செயல் அல்ல,தயவு செய்து இவனை தூக்கில் போடாமல் வெளியில் வந்தால் நாளைக்கு இது போல ஒரு சிறுவன் வெடி குண்டு வைத்தால் அவனையும் சிறுவன் என்று மன்னித்து விடலாமா?/
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை