சென்னை: மத்திய அமைச்சர் அழகிரிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களில், இடம் பெற்றுள்ள சர்ச்சைக்குரிய வாசகங்களால் தி.மு.க., தலைமை கடும் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சியில் பேசிய தி.மு.க., தலைவர் கருணாநிதி, தமிழ் சமுதாய மேன்மைக்காக தனக்குப்பின் ஸ்டாலின் பாடுபடுவார் என தெரிவித்திருந்தார். இதன் மூலம் தனக்குப்பின் தி.மு.க., தலைவர் பதவிக்கு ஸ்டாலினை அவர் முன்மொழிந்துள்ளதாக ஸ்டாலின் ஆதரவாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர். இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் அழகிரி, தி.மு.க., ஒன்றும் சங்கர மடம் அல்ல. இதை கருணாநிதியும், ஸ்டாலினும் ஏற்கனவே தெரிவித்துள்ளனர் என்று காட்டமாக தெரிவித்தார். இந்நிலையில், கடந்த 6ம் தேதி நடந்த தி.மு.க., மாவட்ட செயலாளர் கூட்டத்தில் பேசிய கருணாநிதி, "தி.மு.க., என்ற அரசியல் இயக்கத்திற்கு, எனக்கு பின் ஸ்டாலின் வருவார்' என, நான் பேசவில்லை. நான் அப்படி சொல்லியிருந்தால், அதிலே என்ன தவறு? ஏன் ஸ்டாலின் வரக் கூடாதா? அவர் தி.மு.க., இல்லையா,'' என, கோபத்தோடு கேள்வி எழுப்பினார். மேலும் "தலைவர் பதவிக்கு ஸ்டாலினை முன்மொழிவேன்' என்று தன் கருத்தை வெளிப்படையாக தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து ஸ்டாலின் மற்றும் அழகிரி இடையே மோதல் போக்கு அதிகரித்ததாக தகவல்கள் வெளியாகின. இது தொடர்பாக தனது நிலையை விளக்குவதற்காக கருணாநிதியை சந்திக்க பல முறை முயன்றும் அழகிரியால் அவரை சந்திக்க முடியவில்லை. சில நாட்களுக்கு முன் கருணாநிதியை சந்தித்த போதும், அழகிரி இப்பிரச்னை குறித்து பேசவில்லை என கூறப்படுகிறது.
இந்த சூழலில், மத்திய அமைச்சர் அழகிரியின் பிறந்த நாள் , நாளை (ஜனவரி 30) கொண்டாடப்படவுள்ளது. இதற்காக மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் போஸ்டர்கள் மற்றும் பேனர்கள், களை கட்டியுள்ளன. மதுரையைப் போலவே சென்னையிலும் போஸ்டர்கள் அதிகளவில் ஒட்டப்பட்டுள்ளன. அவற்றில் எழுதப்பட்டுள்ள வாசகங்கள் தற்போது தி.மு.க., தலைமையை கடும் கோபத்திற்குள்ளாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
"கண்ணகி சிலம்பும், மனோகரன் விலங்கும் வீழ்ந்ததா? வீழ்த்தியதா.. அதுக்கும் மேலே... அதுக்கும் மேலே..." என்ற வாசகங்களும், "இங்கே பரமசிவனும் இல்லை. நாங்கள் கருடனும் இல்லை. நடப்பது ராம நாடகமே" என்ற வாசகங்களும் கருணாநிதியை கோபப்படுத்தியுள்ளன. மேலும், தி.மு.க., போஸ்டர்களுக்கே உரிய தலைவர்கள் படமும் அதில் இல்லை.
இந்நிலையில், போஸ்டர்கள் குறித்து தி.மு.க., தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், அழகிரி பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து கூறுவதாக எண்ணி, தி.மு.க.,வுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் சென்னையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது என்றும், கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் போஸ்டர்கள் ஒட்டியுள்ளவர்கள் எவராயினும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
எப்போதுமே இதுமாதிரி வாழ்த்துப் போஸ்டர்களில் பெயருடன், புகைப்படம், ஊர் போன்ற விபரங்கள் இருக்கும். ஆனால் இங்கு பல டிசைன்களில் ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர்களில் இது எதுவுமே இல்லாமல் மொட்டையாகவே உள்ளது. தி.மு.கவில் குழப்பத்தை உண்டாக்க ஆளும் கட்சியே இதுபோன்ற வேலைகளில் ஈடுபட்டிருக்கலாமோ என்ற சந்தேகம் எழாமல் இல்லை. ஆனாலும், இதனை அழகிரி மறுக்காதவரையில் எதுவும் சொல்வதற்கில்லை.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.