கோவை, கரூர் கோர்ட் வளாகத்தில், எஸ்.ஐ.,க்களை வக்கீல்கள் சிறை பிடித்த சம்பவத்திற்கு, முன்னாள் போலீஸ் அதிகாரிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.கோவை மாவட்ட முன்னாள் போலீஸ் அதிகாரிகள் சங்க தலைவர் வெள்ளிங்கிரி, செயலாளர் வேலு ஆகியோர், தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:கரூரில் வக்கீல் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ததால், பணிக்காக கரூர் மாவட்ட நீதிமன்றத்திற்கு சென்ற எஸ்.ஐ.,க்கள் இருவரை சிறை பிடித்துள்ளனர். கரூர் எஸ்.பி., வக்கீல் மீதான வழக்கை விசாரித்து, அதில் உண்மைத் தன்மை இல்லாவிட்டால் ரத்து செய்யப்படும் என்று உறுதியளித்தபிறகு, எஸ்.ஐ.,க்களை விடுவித்துள்ளனர்.வக்கீல் ஒருவரின் தனிப்பட்ட பிரச்னைக்காக, அவர்கள் கூட்டு சேர்ந்து, சட்ட விரோத செயலில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவத்திற்கு கண்டனத்தை தெரிவிக்கிறோம். தமிழக முதல்வர், இந்த பிரச்னையில் கவனம் செலுத்தி போலீசாருக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.