மேட்டுப்பாளையம் :காட்டுயானைகள் மின்கம்பத்தை சேதப்படுத்தியதால், மேட்டுப்பாளையம் - ஊட்டி இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மேட்டுப்பாளையம்-ஊட்டி ரோட்டில் கல்லாறு அருகே, நேற்று முன் தினம் மலை ரயில் பாதையிலிருந்து காட்டு யானைகள் கூட்டம் ஒன்று ரோட்டை கடந்தது. அப்போது, வழியில் இருந்த மரத்தை வேரோடு பிடுங்கி வீசின. இதில் மரத்தின் அருகில் இருந்த மின்கம்பம் சேதமடைந்து சரிந்தது. மேட்டுபாளையம் போக்குவரத்து போலீசார் மின்சார வாரியத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு, மின்கம்பம் தற்காலிகமாக சரி செய்யப்பட்டது. இதனால், மேட்டுப்பாளையம்-ஊட்டி ரோட்டில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.