பெ.நா.பாளையம்:கோவை மண்டல அளவிலான பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு இடையேயான தடகளப் போட்டியில், ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி சாம்பியன் பட்டம் வென்றது.
துடியலூர் அருகே வட்டமலைபாளையத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நடந்த 100 மீ ஓட்டப்பந்தயம் மற்றும் தடை தாண்டும் போட்டியில் அரசு பாலிடெக்னிக் மாணவி நர்மதாவும், 200 மீ, 400 மீ ஓட்டப்பந்தயம் மற்றும் நீளம் தாண்டுதல் போட்டியில் உடுமலை, ருத்ரவேணி பாலிடெக்னிக் மாணவி கார்த்திகாவும், 800 மீ, 1500 மீ ஓட்டப்பந்தயத்தில் ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் மாணவி தீக்ஷயாவும், உயரம் தாண்டுதல் போட்டியில் சி.ஐ.டி., பாலிடெக்னிக் மாணவி சத்தியப்பிரியாவும் முதலிடம் பெற்றனர்.தட்டு மற்றும் ஈட்டி எறிதலில் ஜி.ஆர்.ஜி., பாலிடெக்னிக் மாணவி தனலட்சுமியும், குண்டு எறிதலில் ரஞ்சிதாவும், தொடர் ஓட்டத்தில் பி.எஸ்.ஜி., பாலிடெக்னிக் மாணவிகள் குழுவினரும் முதலிடம் பெற்றனர். போட்டிகளில், மொத்தம் 59 புள்ளிகளை பெற்ற ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் மாணவியர் ஓட்டு மொத்த சாம்பியன் பட்டம் பெற்றனர். தனிநபர் கோப்பைக்கான போட்டியில், உடுமலை ருத்ரவேணி பாலிடெக்னிக் மாணவி கார்த்திகா வெற்றி பெற்றார். வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை கோவை அரசு பாலிடெக்னிக் துணை முதல்வர் சண்முகசுந்தரம், ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் முதல்வர் கொண்டசாமி ஆகியோர் வழங்கினர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.