கோவை,ஆசிரியர்கள் வெறும் வரலாறுகளை போதிக்காமல், தற்போது காணப்படும் சவால்களையும், போட்டிகளையும் எதிர்கொள்ளும் வகையில் மாணவர் சமுதாயத்தை உருவாக்க வேண்டும்,'' என, தமிழருவி மணியன் பேசினார்.
முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் பொன்விழா ஆண்டு நிறைவு விழா(1962-2012), ஒண்டிப்புதூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது. முன்னாள் மாணவர்கள் சங்க தலைவர் பாலகிருஷ்ணன் வரவேற்றார். பள்ளி தலைமையாசிரியை லோகநாயகம் தலைமை வகித்தார்.
காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் பேசியதாவது:
மாணவர்கள் தியானம் செய்யும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்வது அவசியம். நாம் செய்யும் செயலின் எண்ணம் சிதறாமல், குறிக்கோளுடன் செய்ய வேண்டும். சிந்தனை வளம் பெருகவும், ஞாபக சக்தி அதிகரிக்கவும் தியானம் முக்கியம். ஆசிரியரையும், பெற்றோரையும் மதித்து நடக்க வேண்டும்.
மது, புகைபிடித்தல் போன்ற தீய பழக்கங்களுக்கு ஆளாகக்கூடாது. ஆசிரியர்கள் வெறும் வரலாறுகளை போதிக்காமல், தற்போது காணப்படும் சவால்களையும், போட்டிகளையும் எதிர்கொள்ளும் வகையில் மாணவர் சமுதாயத்தை உருவாக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார். முன்னாள் மாணவர் சங்க பொருளாளர் லோகநாதன் நன்றி கூறினார்.
முன்னதாக, தீய பழக்கங்களுக்கு ஆளாகாமல் இருக்கும் உறுதிமொழியை மாணவர்கள் ஏற்றனர். முன்னாள் தலைமையாசிரியர்