ஊட்டி:நீலகிரி மாவட்டத்தில், மாநில அரசின் இலவச மிக்சி, கிரைண்டர், மின்காந்த் அடுப்பு வழங்கும் திட்ட வினியோகத்தின் போது, போலி ரேஷன் கார்டுகள் புழக்கத்தில் இருப்பது தெரியவந்துள்ளது.
மாநில முதல்வரால் அறிவிக்கப்பட்ட இலவச மிக்சி, கிரைண்டர், மின்காந்த அடுப்பு போன்றவற்றை வழங்கும் பணி, நீலகிரி மாவட்டத்தில் துவங்கியுள்ளது. மாவட்டத்தில், முதற்கட்டமாக, ஊராட்சிகளில் உள்ள பயனாளிகளுக்கு இலவசங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
போலி பயனாளிகள்
மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் கூறியதாவது:
மாவட்டத்தில் இலவச மிக்சி, கிரைண்டர், மின்காந்த அடுப்பு வழங்கும் திட்டத்தில், கடந்தாண்டு 29 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு, 42 ஆயிரம் பேருக்கு வழங்கப்படவுள்ளது; இதில், 1,700 பயனாளிகள், அவர்களது முகவரியில் இல்லை, என்பது தெரியவந்துள்ளது. அவர்கள் போலி ரேஷன் கார்டு மூலம் இலவசங்கள் பெறும் பட்டியலில் சேர்ந்துள்ளனர். இவர்களுக்குரிய இலவச பொருட்கள், நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இலவச "லேப்- டாப்'களை பொறுத்தவரை, பள்ளிகள் அளவில் 5,011 மாணவ, மாணவியருக்கும், கல்லூரி அளவில், இதுவரை 10 ஆயிரத்து 654 பேருக்கும் வழங்கப்பட்டுள்ளன. கல்லூரிகளில், இறுதியாண்டு படிக்கும் மாணவ, மாணவியருக்கு முன்னுரிமை அடிப்படையில் "லேப்-டாப்' வழங்கப்படுகின்றன. இலவச ஆடுகள் வழங்கும் திட்டத்தில், இதுவரை 350 பேர் பயனடைந்துள்ளனர்.
பொலிவாகுது படகு இல்லம்
படகு இல்லத்தின் முகப்பு பகுதி, சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் இல்லை; அதன் அமைப்பு, சரியாக இல்லை. 5 கோடி ரூபாய் செலவில் படகு இல்லத்தின் முகப்பு பகுதியை புதுப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில், மலைப்பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 1.3 கோடி ரூபாய் தயாராக உள்ளது. வரும் நிதியாண்டில், 2.11 கோடி ரூபாய் கேட்கப்பட்டுள்ளது. ஊட்டி ஏரியை புனரமைப்பது தொடர்பான பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. நாளை (இன்று) சென்னையில் சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் மட்டத்திலான கலந்தாய்வு நடக்கவுள்ளது. நிதி வீணாகாமல், பணிகளை நிறைவு செய்யும் வகையில், திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறு, கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.