உடுமலை:பொட்டிநாயக்கனூர் ரேஷன் கடையில், பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் மனு அனுப்பபட்டுள்ளது.
உடுமலை தாலுகா பொட்டிநாயக்கனூர் கிராமத்தில், பகுதி நேர ரேஷன்கடையில், 250 ரேஷன்கார்டுதாரர்கள் பொருள்களை வாங்கி வருகின்றனர். வாரம்தோறும் வியாழக்கிழமைகளில் இக்கடையில் பொருட்கள் வினியோகிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மாவட்ட நிர்வாகத்திற்கு அப்பகுதி மக்கள் அனுப்பியுள்ள புகார் மனு:
பொட்டிநாயக்கனூர் ரேஷன்கடையில் பொருட்கள் பல வாரம் காலம் தாழ்த்தி வழங்கப்படுகிறது. இதனால், பொருட்கள் வினியோகிக்கும் போது தள்ளுமுள்ளு ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்படுகின்றனர். கோதுமை மாவு உட்பட பொருட்கள் வெளிச்சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.
இது குறித்து பொதுமக்கள் கேட்டால், ரேஷன்கடை பணியாளர் முறையாக பதில் அளிப்பதில்லை. மண்ணெண்ணெய் உட்பட பொருட்கள் எதுவும் கிடைக்காமல் கிராம மக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.