திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியில், "காஸ்ட்யூம் டிசைன் மற்றும் பேஷன்' ( சி.டி.எப்.,) துறை சார்பில், "பேஷன் எக்லட் -13' நேற்று நடந்தது.
துறை சார்ந்த இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவியர் வடிவமைத்து, தயாரித்த பல்வேறு விதமான டிசைன் ஆடைகளை, முதலாமாண்டு மாணவியர், அணிந்து, பேஷன் ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்றனர். 11 குழுக்களாக பிரிக்கப்பட்டு, 90 மாணவியர், வண்ண வண்ண ஆடைகளில், விதவிதமான அலங்காரத்தில் மேடையில் நடந்து சென்றனர். சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி ஆடை வடிவமைப்பு துறை தலைவர் கற்பகம் சின்னம்மாள், வெற்றியாளர்களை தேர்வு செய்தார்.
முதலிடம் - மகாலட்சுமி குழு; இரண்டாமிடம் - ரூபிணி குழு. சிறந்த குழு - அபர்ணா கருணாம்பாள் குழு; சிறந்த உருவாக்கம் (கிரியேட்டிவிட்டி) - நந்தினி தேவி குழு; சிறந்த அணிவகுப்பு - தமிழ்செல்வி குழு; சிறந்த ஆடை, ஆபரணங்கள் - லலிதா குழு.
தனி நபர் பரிசு: சிறந்த நடை - ரேகா மாசி நவனீதம் (சி.டி.எப்., முதலாமாண்டு); சிறந்த போட்டோஜெனிக் - பாக்யஸ்ரீ (பி.சி.ஏ., முதலாமாண்டு); சிறந்த சிரிப்பு - லலிதா (சி.டி.எப்., முதலாமாண்டு); சிறந்த வடிவமைப்பாளர் - அப்சரி சார்ட்டி முனிசா (சி.டி.எப்., இரண்டாமாண்டு); சிறந்த தையல் மற்றும் பிட்டிங் - மைதிலி, பானுப்பிரியா (சி.டி.எப்., இரண்டாமாண்டு); பேஷன் நெக்லக் - நிவேர்தனா (பி.சி.ஏ., மூன்றாமாண்டு)."காஸ்ட்யூம் டிசைன் மற்றும் பேஷன்' துறை தலைவர் செண்பக வடிவு உட்பட பேராசிரியர்கள், மாணவியர் திரளாக பங்கேற்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.