E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
52 ஏக்கர் ரிசர்வ் சைட் நகரமைப்பு குழு வியப்பு
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

30 ஜன
2013
07:21
பதிவு செய்த நாள்
ஜன 29,2013 21:07

திருப்பூர் மாநகராட்சி நான்காவது மண்டலத்துக்கு உட்பட்ட பகுதியில் மட்டும் 52 ஏக்கர் ரிசர்வ் சைட் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அந்நிலங்களை கையகப்படுத்தி, மாநகராட்சிக்கு சொந்தமான இடம் என அறிவிப்பு பலகை வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர் மாநகராட்சி நகரமைப்புக்குழு கூட்டம், மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில், திருப்பூரில் உள்ள 60 வார்டுகளிலும் எவ்வளவு "ரிசர்வ் சைட்' உள்ளது என ஆய்வு செய்து கணக்கெடுப்பது; அவற்றை கையகப்படுத்தி, கம்பி வேலி அமைத்து, மாநகராட்சிக்கு சொந்தமான இடம் என அறிவிப்பு பலகை வைப்பது; கட்டட இடிபாடுகளை ரோட்டின் ஓரத்தில் கொட்டி, போக்குவரத்துக்கும், துப்புரவு பணிக்கும் இடையூறு ஏற்படுத்துவோரை கண்டறிந்து, நோட்டீஸ் வழங்குவது.



வாகனங்கள் நிறுத்த இடமில்லாத, வணிக வளாகங்களை கண்டறிந்து நோட்டீஸ் வழங்குவது; குறிப்பிட்ட அவகாசத்துக்குள் வாகனம் நிறுத்த இட வசதி செய்யவில்லை என்றால், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பது; "ரிசர்வ் சைட்'டில் பூங்கா அமைப்பது; நகரில் உள்ள பூங்காக்களை, மாநகராட்சி கட்டுப்பாட்டில் எடுத்து, நவீன வசதிகளுடன் மேம்படுத்துவது என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



மாநகராட்சி நான்காவது மண்டலத்தில் உள்ள லே-அவுட்டுகளில் பதினைந்தே முக்கால் ஏக்கர் நிலம் பூங்காவுக்கும், 37 ஏக்கர் நிலம் "ரிசர்வ் சைட்'டுக்கும் என மொத்தம் ஐம்பத்து இரண்டே முக்கால் ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதை கூட்டத்தில் சர்வே துறை அதிகாரிகள் தெரிவித்தபோது, மற்ற அதிகாரிகள், நகரமைப்பு நிலைக்குழு உறுப்பினர்கள் வியப்படைந்தனர். அந்த இடங்களை முறையாக ஆய்வு செய்து, மாநகராட்சிக்கு சொந்தமான இடம் என அறிவிப்பு பலகை வைக்க முடிவு செய்யப்பட்டது. இதேபோல், மற்ற மண்டலங்களிலும் பூங்காவுக்கு ஒதுக்கப்பட்ட இடம், ரிசர்வ் சைட் ஆகியவற்றை ஆய்வு செய்து கண்டுபிடிக்க, அதிகாரிகள் குழுவினர் ஏற்பாடு செய்ய வேண்டும், என, நகரமைப்பு குழுவினர் கேட்டுக் கொண்டனர்.





Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.