சென்னை: ""தர்மபுரி கலவரத்துக்கு காரணமான, ராமதாஸ், காடுவெட்டி குரு ஆகியோரை, தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்,'' என, சமூக சமத்துவ படை கட்சி நிறுவனர் சிவகாமி கூறினார். தர்மபுரி சம்பவத்துக்கு நீதி கேட்டு, வேலூரிலிருந்து சென்னை நோக்கி நடைபயணம் மேற்கொண்ட, சமூக சமத்துவ படை நிறுவனர் சிவகாமி, தன் பயணத்தை நேற்று நிறைவு செய்தார்.
நிறைவு நாள் பொதுக்கூட்டத்தில், சிவகாமி பேசியதாவது: டில்லி மாணவி கற்பழிப்பு சம்பவத்திற்கு, நாடே வெகுண்டெழுந்தது. அரசியல் கட்சிகள் ஆதரவு குரல் கொடுத்தனர். மாணவர்கள் போராட்டம் நடத்தி, டில்லியை ஸ்தம்பிக்க வைத்தனர். மத்திய அரசும், பெண்ணுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு, நீதி வழங்கியது. தர்மபுரி கலவரத்தில் ஆதிதிராவிட மக்கள் மீது நடந்த தாக்குதலில், வீடுகள், வாகனங்களை தீ வைத்து கொளுத்தினர். 268 வீடுகள் தீக்கிரையாகின. இச்சம்பவம் நடந்து மூன்று மாதங்களாகியும், இன்று வரை எந்த சீரமைப்பு பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. இச்சம்பவத்தில், நேரடி தாக்குலில் ஈடுபட்ட, 1,500க்கும் மேற்பட்டவர்களில், 200க்கும் குறைவானவர்கள் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த காலங்களில், வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்படி, பதிய பெற்ற வழக்குகளில், 93 சதவீதம் பேர் விடுதலையாகியுள்ளனர். இதுபோல, தர்மபுரி வன்கொடுமை வழக்குகளிலும் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்களா என்பது கேள்விக்குறி. நேரடி தாக்குதலில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்படுவதோடு, வன்கொடுமையை தூண்டிய ராமதாஸ், காடுவெட்டி குரு ஆகியோரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும். பாதுகாப்பு வழங்க தவறிய, மாவட்ட ஆட்சி தலைவர், காவல் துறை கண்காணிப்பாளர், மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்டோரை பணிநீக்கம் செய்ய வேண்டும். ஆதிதிராவிட மக்களிடமிருந்து களவாடிய பொருள்களை மீட்டு, ஒப்படைக்க வேண்டும். தாக்குதல் நடத்தியவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்து இழப்பீடு தர வேண்டும். தற்போது நடந்து வரும் விசாரணை ஒருதலைப்பட்சமாக இருப்பதால், சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். ஆதிதிராவிட மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளான நிலப்பங்கீடு, ஆதிதிராவிட தனிநிதியை முழுமையாக பயன்படுத்துதல், ஆதிதிராவிடர் குடியிருப்புகளுக்கு அடிப்படை வசதிகள் ஆகியவற்றை நிறைவேற்ற அரசு முனைந்து செயல்பட வேண்டும். தர்மபுரி சம்பவம் தொடர்பான கோரிக்கைகள் அடங்கிய மனுவை, கவர்னருக்கு அளிக்க உள்ளோம். தமிழக அரசு நீதி வழங்கவில்லையெனில், டில்லியில் முறையிட உள்ளோம். இவ்வாறு சிவகாமி பேசினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
இவர்கலெல்லாம் சாதிகள் இல்லையடி பாபா என்று பாடிய ஒரு பாரதி இல்லை 1000 பாரதி வந்தாலும் திருந்த மாட்டார்கள். டாக்டர். ராமதாஸ் அவர்கள் தன் சமுதாயத்தை இன்னும் கல்வி அறிவு பெறாமல் வைத்துள்ளார். அதனால் தான் அவர்கள் இவர் சொல்வதை கேட்டு இப்படி தங்கள் வாழ்க்கையை தொலைத்து சிறைபட்டு கிடக்கிறார்கள். எனவே அப்பாவி மக்களை விடுவித்து காடுவெட்டி திரு. J. குரு அவர்களையும், டாக்டர். ராமதாஸ் அவர்களையும் மற்றும் அவர் கட்சினரை மட்டும் கைது செய்யவேண்டும் என்பது தமிழக அரசுக்கு எனது பணிவான கோரிக்கை....

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.