ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் கடலில் கற்களிடையே சிக்கிய, "ஆதிநாத்' என்ற கப்பல் மீட்கும் வரை, பாம்பன் கடலில் காத்திருந்த இழுவை, மற்றும் மிதவை கப்பல்கள், 20 நாட்களுக்கு பின்பு, பாம்பன் ரயில் தூக்கு பாலத்தை கடந்து சென்றன. ஜன., 9 ல், பாம்பன் கடலில் கற்களிடையே சிக்கிய "ஆதிநாத்' என்ற இழுவை கப்பல், தூத்துக்குடி மீன்பிடி விசைப்படகுகள் மூலம், ஜன., 27 ல் மீட்கப்பட்டு, ராமேஸ்வரம் கடலில் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், கேரளா மால்பே துறைமுகத்தில் இருந்து ஆந்திரா கிருஷ்ணாபட்டிணம் துறைமுகம் செல்ல, ஜன.,9 ல், இழுவை, மற்றும் மிதவை கப்பல்கள், பாம்பன் கடலுக்கு வந்தன. "ஆதிநாத்' கப்பல் மீட்கும் வரை, இக்கப்பல்கள் பாம்பன் ரயில் தூக்கு பாலத்தை கடந்து செல்ல அனுமதிக்கப்படவில்லை. ஆதிநாத் கப்பல் மீட்கப்பட்ட நிலையில், 20 நாட்களுக்கு பின்பு, நேற்று பாம்பன் ரயில் தூக்கு பாலத்தை கடந்து, கிருஷ்ணாபட்டிணம் நோக்கி இரு கப்பல்களும் சென்றன.
இதே போல், நேற்று மாலை, ஒடிசா பராதீப் மற்றும் ஹல்டியா துறைமுகங்களில் இருந்து மும்பை செல்ல, இழுவை, மிதவை கப்பல் மற்றும் இரு சரக்கு உட்பட நான்கு கப்பல்கள் பாம்பன் பாலத்தை கடந்து சென்றன.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.