பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வைகை ஆற்றில் கூலி பெண்கள் மூலம் மணல் கொள்ளை அரங்கேறி வருகிறது. பரமக்குடியில் உள்ள வைகை ஆற்றில் மணல் எடுக்கப்பட்டு, தரை தட்டிய நிலையில் குவாரி மூடப்பட்டுவிட்டது.
இந்நிலையில் இருக்கும் சிறிதளவு மணலையும் கூலிக்கு அமர்த்தப்பட்டுள்ள பெண்கள் தலைச் சுமையாக சாக்குகளில் அள்ளுவது அதிகரித்துள்ளது. ஆரம்பத்தில் ஆங்காங்கே ஒரு சில பகுதிகளில் மட்டும் மணல் திருடப்பட்டது.
சில மாதங்களாக அரசியல்வாதிகள், அதிகாரிகள் துணையோடு ஏஜென்ட்களை நியமித்து, அவர்கள் மூலம் பெண்கள் சாக்குகளில், சாரை சாரையாக மணல் அள்ளுகின்றனர். ஒரு சாக்கு மூடை மணல் அள்ளி வர, தூரத்தை கணக்கிட்டு 20 ரூபாய் வரை கூலி வழங்கப்படுகிறது. போலீசார் ரெய்டு வரும் நேரங்களில் முன்கூட்டியே தகவல் கிடைத்து, பெண்கள் தலைமறைவாகி விடுகின்றனர். மணலை கொட்டும் வீட்டிற்கு சென்று போலீசார் நடவடிக்கை எடுத்தாலும், அரசியல் தலையீட்டால் தப்பித்துக் கொள்கின்றனர். இதனால் ஆற்றில் அள்ளப்படும் மணலை ஒரு இடத்தில் பதுக்கி, இரவில் டிராக்டர்கள் மூலம் பல பகுதிகளுக்கும் கடத்தி விற்பதும் அதிகரித்துள்ளது.
பரமக்குடிக்கு பொறுப்பில் இருந்த முதுகுளத்தூர் ஏ.எஸ்.பி., விக்ரமன், கடந்த மாதம், ""திருட்டு மணல் அள்ளுவோர் மீது குண்டர் சட்டம் பாயும்,'' என்றார். ஆனால், இதுவரை யார் மீதும் பாயவில்லை. மணல் திருட்டால் குடிநீர் ஆதாரம் பாதிக்கப்படுவதுடன், ஆற்றில் உள்ள காவிரி குடிநீர் குழாய் அடிக்கடி உடைக்கப்படுவதும், மணல் அரிப்பால் உயர் அழுத்த மின்கம்பங்கள் கீழே விழும் அபாயமும் நீடிக்கிறது. பேராபத்துக்கு முன், மணல் அள்ளுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.