குன்றத்தூர் : பணம்
கொடுத்து, கூடுதல் பொருட்களை வாங்கினால் மட்டுமே, அரசு தரும் இலவச அரிசி
கிடைக்கும் என்ற நிலை இருப்பதால், சோமங்கலம் மக்கள் அதிருப்தி
அடைந்துள்ளனர்.
குன்றத்தூர் ஒன்றியம் சோமங்கலம் ஊராட்சியில், 4,000 பேர்
வசித்து வருகின்றனர். இங்கு, பொது மக்களுக்கு குறைந்த விலையில் பொருட்கள்
வழங்குவதற்காக, அரசின் நியாய விலை கடை அமைந்துள்ளது.ரூ.23க்கு...இதில்,
சோமங்கலம், மேட்டூர், இந்திரா நகர், மேலாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில்
வசிக்கும் பொது மக்கள், ரேஷன் பொருட்களை வாங்கி வருகின்றனர். இந்த கடையில்
கடந்த இரண்டு ஆண்டுகளாக சோப்பு, பவுடர், பிஸ்கட், உப்பு போன்றவற்றை
கட்டாயப்படுத்தி ரேஷன் ஊழியர்கள் வாங்கச் செல்வதாக, மக்கள் குற்றம்
சாட்டுகின்றனர்.
இது குறித்து, அப்பகுதியை சேர்ந்த பொது மக்கள் கூறியதாவது: இந்த நியாய விலை
கடையில்
நியாயமாக பொருட்கள் வழங்கப்படுவதில்லை. அரசு ஏழைகளுக்கு இலவசமாகக்
கொடுக்கும் அரிசிக்கு, 23 ரூபாய் கொடுத்து சோப்பு, பவுடர்களை கூடுதலாக
வாங்கச் சொல்லி
கட்டாயப்படுத்துகின்றனர். இதேபோல், சர்க்கரை வழங்கும் போது, 15 ரூபாய் கொடுத்து
பிஸ்கட் வாங்கச் சொல்லியும், மண்ணெண்ணெய் வழங்கும் போது, ஆறு ரூபாய் கொடுத்து உப்பு வாங்கச் சொல்லியும் கட்டாயப்படுத்துகின்றனர். கட்டாயம் இந்த கூடுதல் பொருட்களை வாங்கினால் மட்டுமே ரேஷன் பொருட்கள் பொது மக்களுக்கு வழங்கப்படுகின்றன.
இதனால், ஏழை மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எதிர்த்து கேள்வி கேட்கும் பொது மக்களுக்கு, ரேஷன் பொருட்கள் சரியாக வழங்குவதில்லை. இவ்வாறு, அவர்கள் கூறினர்.
இது குறித்து ரேஷன் கடை ஊழியரிடம் கேட்டபோது, ""வரும் காலங்களில், கூடுதல் பொருட்களை வாங்க கட்டாயப்படுத்துவது தவிர்க்கப்படும்,'' என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.