ஸ்ரீபெரும்புதூர் : ஸ்ரீபெரும்புதூர் அரசு பொது மருத்துவமனையில், பணி சுமையை குறைக்கவும், நோயாளிகள் உடனுக்குடன் சிகிச்சை பெறவும் வசதியாக வழங்கப்பட்ட கணினி, யு.பி.எஸ்., பழுது காரணமாக செயல்படாமல் உள்ளது. இதனால், ஊழியர்களும், நோயாளிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஸ்ரீபெரும்புதூர் அரசு பொது மருத்துவமனைக்கு, கடந்த 2010ம் ஆண்டு, 13 கணினிகள் வழங்கப்பட்டன. மருத்துவமனை பணிகள் அனைத்தும் கணினி மயமாக்கப்பட்டன. இதனால், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு, கணினியில் பெயர் பதிவு செய்து, நோயாளிகளுக்கு மருத்துவ சீட்டு கொடுத்தனர். மருத்துவமனையில், சிகிச்சை அளிக்கும் மருத்துவரும், அவருடைய, வரிசை எண், கணினியில் கொடுத்தால், அவருடைய முழு விவரமும் கிடைக்கும். அதில், சிகிச்சை விவரம், மருந்துகள், இன்ஷெக்ஷன் போன்ற விவரங்களை, கணினியில் பதிவு செய்வார். நோயாளிகளுக்கு, விரைவாக சிகிச்சை அளித்தனர். மருத்துவர்களுக்கும் பணிச்சுமை குறைந்தது. பேப்பர், செலவும், மருத்துவமனைக்கு குறைந்தது.
நோயாளிகள், மீண்டும், மருத்துவமனைக்கு வரும் போது, சிகிச்சை அளிப்பது, சுலபமாக இருந்தது. ஏற்கனவே, வழங்கிய சிகிச்சை குறித்தும், வழங்கிய மாத்திரைகள் குறித்தும் தெரிந்துகொள்ள, வசதியாக இருந்தது.
இந்நிலையில், கணினி மயமாக்கப்பட்ட, ஓராண்டிலேயே, யு.பி.எஸ். பழுது ஏற்பட்டதால், கணினி பயன்படுத்துவது நிறுத்தப்பட்டது. இதனால், கணினி பயன்படுத்தாமல், கிடப்பில் போடப்பட்டுள்ளது.
நோயாளிகளின் வசதிக்காகவும், மருத்துவர்கள் விரைந்து சிகிச்சை அளிக்க, மீண்டும், கணினி பயன்படுத்த மாவட்ட சுகாதார பணிகள், இணை இயக்குனரகம், நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.