காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டத்தில், குடியரசு தினத்தன்று தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காத, 171 நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு, நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
குடியரசு தினத்தன்று, தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதா, அன்று தொழிலாளர்கள் பணிபுரிந்தால், உரிய முன் அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளதா, என்பது குறித்து, காஞ்சிபுரம் மாவட்ட தொழிலாளர் ஆய்வாளர் விமலநாதன் தலைமையில், துணை ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள், மாவட்டம் முழுவதும் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது கடைகள், தொழில் நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் உட்பட, 117 நிறுவனங்களில், தேசிய பண்டிகை விடுமுறை சட்டத்தின் கீழ், தொழிலாளர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்படாதது தெரிய வந்தது.
சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது, தொழில் நிறுவனங்கள் சட்டம் 1958ன் கீழ் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டு, அவர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.