அதிக சுமையுடன் கரி துகள் ஏற்றி செல்லும் லாரிகள்:சிதறி விழுவதால் பொருட்கள் வீண்

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

பொன்னேரி : அளவுக்கு அதிகமாக, லாரிகளில் ஏற்றிச் செல்லப்படும் கரி துகள், சிதறி சாலை ஓரங்களில் உள்ள கடைகளில் படிந்து, பொருட்கள் வீணாகின்றன. மீஞ்சூர் பஜார் சாலையில் மளிகை, காய்கறி, துணி, ஓட்டல், துரித உணவகங்கள் என, 500க்கும் மேற்பட்ட, வணிக கடைகள் செயல்படுகின்றன. மீஞ்சூரை சுற்றியுள்ள, 200 கிராமங்களின் வியாபார மையமாக இது உள்ளது. தினமும், 20ஆயிரம் மக்கள், அத்தியாவசிய பொருட்களை வாங்க, இங்கு வந்து செல்கின்றனர்.
சாலையில் சிதறும் கரி துகள்கள் மீஞ்சூர் அடுத்த, காட்டுப்பள்ளி பகுதியில் உள்ள, எண்ணூர் துறைமுகத்தில் நிலக்கரி இறக்குமதி செய்யப்படுகிறது. அவை லாரிகள் மூலம் சென்னையின் பிற இடங்களில் உள்ள தொழிற்சாலைகளுக்கும், வெளி மாநிலங்களுக்கும் கொண்டு செல்லப்படுகின்றன.துறைமுகத்தில் இருந்து, வெளியிடங்களுக்கு லாரிகள் மூலம் மீஞ்சூர், பொன்னேரி வழியாக, இவை எடுத்து செல்லப்படுகின்றன. லாரிகளில் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக, கோபுரம் போல் குவித்து, அதன் மீது கந்தலான கிழிந்த தார்பாய்களை மூடி எடுத்துச் செல்லப்படுகின்றன.மேற்கண்ட வழித்தடம் வழியாக, கரி துகள் ஏற்றிச் செல்லும் லாரிகள் பயணிக்கும் போது, போக்குவரத்து நெரிசலில் திடீர் பிரேக் போட்டு நிறுத்தப்படுகிறது. அப்போது லாரிகளில் குவிக்கப்பட்டு இருக்கும் கரித்துகள்கள் சிதறி சாலையில் விழுகின்றன.
வீணாகும் பொருட்கள்அவை காற்றில் பறந்து, வணிக கடைகளில் சென்று விழுகின்றன. விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும் துணி, உணவுப்பொருட்கள், காய்கறி உள்ளிட்டவற்றின் மீது, கரி துகள்கள் படிவதால் பொருட்களும் வீணாகின்றன. சாலையில் நடந்து செல்பவர்கள் கண்களின் மீது, தூசி படிவதால் கண்கள் பாதிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. அதிகளவு சுமையுடன் செல்லும் லாரிகள் மீது, நடவடிக்கை எடுக்க மீஞ்சூர் வியாபாரிகள் சங்கம் சார்பில், மாவட்ட காவல் நிர்வாகத்தில் மனு கொடுத்தும் பயனில்லை.இதுகுறித்து, பெயர் கூற விரும்பாத காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ""வியாபாரிகளின் பிரச்னை தொடர்பாக, தற்போது பஜார் பகுதியில் போலீசார் நிறுத்தி கண்காணித்து வருகிறோம். அதிக சுமையுடனும், தார்பாய் இல்லாமல் செல்லும் வாகனங்கள் மீதும், நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,'' என்றார்.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்