Today Martyrs day | தன்னலமற்ற யாகம் = தியாகம்-இன்று தியாகிகள் தினம் | Dinamalar
Advertisement
தன்னலமற்ற யாகம் = தியாகம்-இன்று தியாகிகள் தினம்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

நாட்டின் விடுதலைக்காகவும், முன்னேற்றத்துக்காகவும் பாடுபட்ட தலைவர்களின் நினைவு தினம், தியாகிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது.

இது நாட்டுக்கு நாடு வேறுபடும். அவ்வகையில் தேசத்தந்தை மகாத்மா காந்தி, சுட்டுக்கொல்லப்பட்ட ஜன., 30ம் தேதி, இந்தியாவில் தியாகிகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. ஆங்கிலேயர்களிடமிருந்து நாடு சுதந்திரம் பெறுவதற்கு, பலர் தங்களது இன்னுயிரை தியாகம் செய்துள்ளனர். இதற்கு மதிப்பளிக்கும் விதமாகவும் இத்தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்திய சுதந்திர போராட்டத்தில், மகாத்மா காந்தியின் பங்கு மகத்தானது. தொடக்கம் முதல் கடைசி வரை "அகிம்சை' கொள்கையில் இருந்து, அவர் விலகவே இல்லை. இவரது அகிம்சை கொள்கை, இந்தியாவில் மட்டுமல்ல, உலக நாடுகளாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

2 நிமிட மவுன அஞ்சலி:டில்லி ராஜ்கோட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில், ஜனாதிபதி, பிரதமர், பாதுகாப்பு அமைச்சர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் அஞ்சலி செலுத்துகின்றனர். அவரது தியாகத்தையும், சேவைகளையும் நினைவுபடுத்தும் வகையில், இன்று காலை 11 மணிக்கு, நாடு முழுவதும் இரண்டு நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்படுகிறது. மறைந்த தலைவர்களுக்கு, அஞ்சலி செலுத்துவதோடு நின்று விடாமல், அவர்கள் பின்பற்றிய வாழ்க்கை முறையை பின்பற்ற உறுதி ஏற்போம்.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (5)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
p.boopathy enkira Boopathiyar - chennai,இந்தியா
30-ஜன-201310:57:55 IST Report Abuse
p.boopathy enkira Boopathiyar வாய்மையும்..,நேர்மையும்..,கடைபிடித்து நம் சுதந்திர மூச்சுக்கு உயிர் கொடுத்தவர்கள் தியாகிகளின் தினம் மகாத்மாவின் ஒழுக்க சிலராக வாழ்வோம்..,சமுதாய அவல நிலை போக்குவோம்..,சமுதய தடைகளை நீக்குவோம்..,ஊழல் - லஞ்சம் - சினிமா மாயை போன்ற சமுதாய கரைகளை போக்கி இந்திய சமுதாயம் உலக சமாதனம் - மகாத்மா அகிம்சை பாதையில் செல்லுவோம். சமதர்ம நல்ல சமுதாய உறுதி மொழி ஏற்போம் வாழ்க நம் காந்தி மகான் சத்திய சோதனை சுய பரிசோதனை புத்தகம் நம் வாழ்வோடு..,நல்ல ஒழுக்கங்கள் நம் சமுதாயத்தில் வளரவேண்டும். ஜெய் ஹிந்த் - பூபதியார்
Rate this:
0 members
0 members
15 members
Share this comment
Cancel
Guru - Batam,இந்தோனேசியா
30-ஜன-201309:55:41 IST Report Abuse
Guru தியாகிகளால் பெற்ற சுதத்திரம்... அரசியல் கயவர்களிடம் சிக்கி திணறுகிறது
Rate this:
0 members
0 members
13 members
Share this comment
Cancel
Guru - Batam,இந்தோனேசியா
30-ஜன-201309:55:05 IST Report Abuse
Guru நாட்டிற்காக ரத்தம் சிந்தி.., தன்னலம் இல்லாமல் தன் இன்னுயிரையும் தந்து சுததிரத்தை வாங்கி தந்த தியாகிகளே.. உங்கள் உருவம் எங்கள் கண்களுக்கு தெரியாது ஆனால் சுத்திர இந்தியாவில் நாங்கள் வாழ நீங்கள் செய்த தியாகத்திற்கு நன்றிகளுடன் வணங்குகிறேன்...
Rate this:
0 members
0 members
12 members
Share this comment
Cancel
samuelmuthiahraj - Canberra /kancheepuram,இந்தியா
30-ஜன-201308:17:06 IST Report Abuse
samuelmuthiahraj நாட்டிற்காக தங்களது வீட்டை மற்றும் கரன்சி நோட்டுக்களையும் ரோட்டுக்காக தங்களது நிலங்களை கொடுத்தவர்கள் வாழ்ந்த இந்நாட்டில் இப்போது ரோட்டினையே அபகரிப்போரும் வோட்டுக்காக பண நோ ட்டுக்காக பொது ரோட்டையே அபகரிப்பதை கண்டு கொள்ளாமலும் இருக்கும் காலமதிலும் ஒருசிலராவது சிலைகள் நடு ரோட்டில் இருக்கக்கூடாது என்பதை அமுல் படுத்தவேண்டும் என்ற நீதிபதிபோல் அகலமாக்கியே தீருவேன் என நினைக்கும் ஒரு சில அதிகாரிகளும் அரசும் இருப்பதை நினைத்து கடவுளுக்கு நன்றி கூறுவதுடன் உண்மையாய் தியாகம் செய்த தியாகிகளின் தலைமுறை தடம்பிரளாமல் இருக்கவும் இருக்கும் தியாகிகளின் குடும்பங்கள் அரசு வேலை கிடைக்கும் விதத்தில் ஆவன செய்யப்படவும் இந்த நாள் நினைவூட்டுவதாகவும் அமையட்டும்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
GUNA - chennai,இந்தியா
30-ஜன-201302:12:34 IST Report Abuse
GUNA நீண்ட அடிமைக் கங்குல் - நீக்கும் இலட்சியம் ஒன்றே பூண்ட தியாகிகள் சிந்திய புனிதக் குருதியில் தோய்ந்த - மாண்ட சடலத் திரியில் மான உணர்ச்சிப் பொறியால் - மூண்ட சுடரது தானே - விடுதலை தீபச் சுடரே -
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்